இதய இயக்கத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க!

Posted By:
Subscribe to Boldsky

வெறும் உணவுகள் மட்டுமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிடாது. காய்கறி, பழங்கள், கீரை மற்றும் தானிய உணவுகளையும் சேர்த்துக் கொண்டால் தான் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும். அதிலும், காலையில் ஆரோக்கிய ஜூஸ் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இது அதிக பசியை கட்டுப்படுத்தும், செரிமானத்தை சீராக்கும். இந்த வகையில், கேரட், இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நச்சுக்கள்!

நச்சுக்கள்!

நச்சகற்றும் பண்புகள் கொண்ட ஜூஸ், உணவுகள் உட்கொள்வதால் மட்டுமே, உடலில் உள்ள நச்சுகளை அகற்ற முடியும். கேரட் மற்றும் இஞ்சியில் இந்த பண்புகள் அதிகமாக இருக்கிறது. இவை உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது மட்டுமின்றி, உடலில் ஏற்படும் காயங்கள் சீக்கிரம் ஆறவும் பயன்படுகின்றன.

சருமம்!

சருமம்!

கேரட்டில் இருக்கும் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். தோல் மேம்பாட்டிற்கு உதவும் கொல்லாஜின் உற்பத்தியாக கேரட் பயனளிக்கிறது.

மேலும், இந்த கேரட் - இஞ்சி ஜூஸின் மூலம் கிடைக்கும் வைட்டமின் ஈ சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாத்காக்க உதவுகிறது.

இதயம்!

இதயம்!

கேரட்டில் இருக்கும் ஆல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் போன்ற மூலப் பொருட்கள் இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயங்களில் இருந்து காக்கின்றன.

இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. மேலும், இஞ்சி கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் பாதுகாத்து, இதய நோய்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.

நீரிழிவு!

நீரிழிவு!

நீரிழிவு மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்க இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், நீரிழிவை பாதிக்கும் இன்சுலின் அளவை சீராக வைத்துக் கொள்ளவும் இஞ்சி உதவுகிறது.

எனினும், இந்த ஜூஸ் குடிக்க ஆரம்பிக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது அவசியம்.

நோய் எதிர்ப்பு!

நோய் எதிர்ப்பு!

இந்த ஜூஸில் இருக்கும் விட்டமின் எ, சி, ஆகியவை ஆறிலிருந்து, அறுபதுவரை அனைவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். மேலும், இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Drinking Carrot Ginger Juice!

Health Benefits of Drinking Carrot Ginger Juice!