மழைக்காலத்தில் பரவும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடம் இருந்து தப்பிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Written By:
Subscribe to Boldsky

நமது உடல் எப்போதும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடிக்கொண்டு தான் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலும், நாம் தினமும் உண்ணும் உணவிலும் பாக்டீரியாக்கள் உள்ளது. இந்த பாக்டீரியாக்கள் சில வகை காய்ச்சல், தொற்றுக்கள், வயிறு உபாதைகள் ஏற்பட காரணமாக உள்ளன. நாமது நோய் எதிர்ப்பு மண்டலம் மிகவும் வலிமையானது.

Foods that can Increase the power of Immune System

இருந்தாலும், சில உணவுவகைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறனை மேம்படுத்தி, மிகவும் ஆபத்தான பாக்டீரியாக்களில் இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.

என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உங்களை பாக்டீரியாக்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தேன்

1. தேன்

தேன் ஒரு இயற்கையாகவே உடலில் சேரும் பாக்டீரியாக்களை ஒழிக்க உதவுகிறது. ஆபத்து தரும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தடுக்கிறது. தேனை தினமும் காலையில் ஒரு டிஸ்பூன் அளவுக்கு மிதமான சூடுள்ள நீருடன் சேர்த்து பருகலாம்.

2. பூண்டு

2. பூண்டு

பூண்டு ஒரு சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகும். இது ஈஸ்டுகளால் உண்டாகும் பாதிப்பையும் எதிர்க்கிறது. அதுமட்டுமின்றி பூண்டு உடல் நலனுக்கு மிகவும் சிறந்த ஒன்றாகும். பச்சையான பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.

3. மஞ்சள்

3. மஞ்சள்

மஞ்சள் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு இயற்கையான மருத்துவ பொருள். இது கிருமிகளை எதிர்த்து போராடும் ஆற்றல் மிகுந்தது. இது புண்களை விரைவில் ஆற்றவும் பயன்படுகிறது. உடலின் உற்புற பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. தினமும் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

4. தேங்காய் எண்ணெய்

4. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஒரு மிகச்சிறந்த பாக்டீரியாவை எதிர்க்கும் பொருளாகும். பல ஆய்வுகளில் தேங்காய் எண்ணெய் பலவகையான பாக்டீரியாக்களை செயலிழக்கச்செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈஸ்டுகள், வைரஸ்களையும் எதிர்த்து செயல்படக்கூடியது. இது தோல்களில் உண்டாகும் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

5. எலுமிச்சை

5. எலுமிச்சை

எலுமிச்சையும் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. இது முகப்பருக்களுக்கு காரணமாக உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் சக்தி உடையது. இதில் அதிகமாக விட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. உங்களது உடலுக்கு தேவையான விட்டமின் சி கிடைக்க வேண்டுமென்றால், தினமும் 2 எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்பட்ட, 2 டம்ளர் எலுமிச்சை ஜீஸை பருகலாம்.

6. அன்னாச்சிப்பழம்

6. அன்னாச்சிப்பழம்

அன்னாச்சிப்பழத்தின் சிறப்பை பற்றி பலருக்கு தெரியாது. இது மிகச்சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு பொருளாகும். முக்கியமாக வாய் மற்றும் தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை இது எதிர்க்கிறது. சுத்தமான பைன் ஆப்பிள் சாறு அருந்துவதால் சுவாசத்தின் மூலம் உண்டாகும் பாக்டீரியாக்களின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

7. இஞ்சி

7. இஞ்சி

இஞ்சி தொண்டையில் உண்டாகும் பாக்டீரியாக்களின் பாதிப்புகளுக்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. இஞ்சியின் சாறை ஏதேனும் ஒரு வகை ஜூஸ் அல்லது தேன் மற்றும் மிதமான சூடுள்ள நீருடன் கலந்து பருகலாம். இது சளிக்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods that can Increase the power of Immune System

Foods that can Increase the power of Immune System