உடலில் இருக்கும் கொழுப்பு கரைய காலையும், மதியமும் இதச்சாப்பிடுங்க!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்கிற மிகப்பெரிய தவறுகளில் ஒன்று உடனடியாக உணவைக் குறைப்பது தான். உங்கள் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பெரும்பாலும் உணவு மூலமாகத்தான் பெறப்படுகிறது. உணவு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எடையைக் குறைக்க நினைத்து உணவை குறைத்தால் அது மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கிடும். அதனால் அப்படிச் செய்யாதீர்கள். முதலில் உங்கள் உயரத்திற்கேற்ற எடையில் தான் இருக்கிறீர்களா என்பதை கண்காணியுங்கள். அது சரியாக இருந்தால் அப்படியே தொடர்வது தான் நல்லது. பிறர் சொல்வதைக் கேட்டு விளம்பரங்களைப் பார்த்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

Eating an egg for weight loss

அதே போல இந்த உடல் எடை குறைப்பில் உடனடி மருந்து என்று எதுவுமே கிடையாது. நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரிகளுக்கு ஏற்ப உடல் உழைப்பு இருக்க வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான முறையில் உ டல் எடையை குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை :

முட்டை :

முட்டையைக் கொண்டு உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னதும் முட்டையை மட்டுமே சதா சர்வ காலமும் சாப்பிட வேண்டும் என்றல்ல. பிரதான உணவாக முட்டையை எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி கொழுப்பு அதிகம் சேராத பிற உணவுகளை நீங்கள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

சத்துக்கள் :

சத்துக்கள் :

ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். இதிலிருக்கும் லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும்.

முட்டையில் கெட்ட கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளிசரைடு அளவும், இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.

எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன

முதல் முயற்சியாக இரண்டு வாரங்களுக்கு முயற்சித்துப் பாருங்கள். அதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடத்தில் இது போன்ற உணவு மாற்றத்தை மேற்கொள்ளலாமா என்று கேட்டு உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

காலை உணவு :

காலை உணவு :

முட்டையை முழுதாக சமைக்கப்பட்ட உணவாக எடுத்துக் கொள்வது தான் நல்லது. காலை உணவாக இதனை எடுத்துக் கொள்வதால் நாள் முழுவதும் நீங்கள் குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்ள முடியும்.

இதனால் நீங்கள் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளை நாம் குறைத்திட முடியும்.

ஆம்லெட் :

ஆம்லெட் :

ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் வரை சாப்பிடலாம். பெரிய முட்டையில் உங்களுக்கு 94 கலோரி வரை கிடைத்திடும். இத்துடன் கூடுதலாக ஓட்ஸ்,தானியங்கள்,பழங்கள்,சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஆம்லெட் சமைக்கும் போது அத்துடன் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளையும் கவனிக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் முதற்கொண்டு.

எவ்வளவு கலோரி :

எவ்வளவு கலோரி :

பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1200 கலோரி தேவைப்படுகிறது. ஆண்களுக்கு 1600 கலோரி வரை தேவை. பெரும்பாலானோர் இதைத் தாண்டியே உணவுகளை எடுத்துக் கொள்வர்.

லோ கலோரி டயட் :

லோ கலோரி டயட் :

ஒரு நாளைக்கு வெறும் முட்டைகளை மட்டுமே எடுத்துக் கொண்டால் உங்களுடைய ரத்த அழுத்தம் தொடர்ந்து பரிசோதிப்பது அவசியம். முட்டை மட்டுமே எடுத்துக் கொள்வதற்கு பதிலாக நியூட்ரிசியன்கள் நிறைந்த பார், ஷேக்ஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

காலை மற்றும் மதிய நேரங்களில் முட்டை எடுத்துக் கொண்டால் போதுமானது. இரவில் சிலருக்கு செரிமானப்பிரச்சனையை ஏற்படுத்திடும்.

மாற்றங்கள் :

மாற்றங்கள் :

நீங்கள் ஒரு வாரம் தொடர்ந்து முட்டையை உணவுச் சேர்த்துக் கொண்டு பிறகு உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா. முதலில் உங்களில் உடலில் இருக்கக்கூடிய வாட்டர் வெயிட் குறையத்துவங்கும். அதன் பின்னரே மெல்ல மெல்ல கொழுப்பு கரையும்.

காரணம் :

காரணம் :

முட்டையில் குறைவான கார்போஹைட்ரேட் இருக்கிறது என்பதுவே கொழுப்பு வேகமாக கரையாததற்கு காரணமாக இருக்கிறது. உடலிலிருக்கும் தண்ணீரின் அளவு வேகமாக குறையும் என்பதால் முட்டை டயட் இருப்பவர்கள், பிறரை விட மிக அதிகப்படியான டயட் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதனை விடுத்து, தொடர்ந்து நார்மலாக உணவு உட்கொள்ள ஆரம்பித்தால் உங்கள் உடல் எடையும் அதிகரித்திடும்.

சோம்பல் :

சோம்பல் :

இந்த டயட் பின்பற்றும் ஆரம்ப நாட்களில் அதிகப்படியாக சோர்வு ஏற்படும். எனர்ஜியே இல்லாதது போலத் தோன்றும். ஏனென்றால் கார்போஹைட்ரேட் நமக்கு குறைவாக கிடைக்கிறது.

இதனால் நம் உடலில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் அளவும் குறைந்திடும். மூளை செயல்பாடு துரிதமாக நடக்காது.

உடலில் இருக்கும் கீட்டோன்ஸ் மூளைக்குத் தேவைப்படுகிற உந்து சக்தியாக மாறிடும்.சில நாட்களில் உடல் அதனை பழகிக் கொள்ளும்.

இடைவேளி :

இடைவேளி :

சிலருக்கு, உடல் நாம் மாற்றியிருக்கும் டயட்டிற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு முன்னதாகவே பொறுமையிழந்து இது சரியாக இல்லை என்று சொல்லி மாறிவிடுவார்கள். சில நாட்கள் பொறுத்திருப்பது அவசியம்.

அதே போல சோர்வாக இருக்கிறது என்று சொல்லி பிற உணவுகள், குறிப்பாக அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்.

உடல் உழைப்பு :

உடல் உழைப்பு :

உங்களின் உடல் உழைப்பு அதாவது பிசிக்கல் பெர்ஃபார்மென்ஸ் குறைந்திடும். இது தற்காலிகமானது மட்டுமே. ஏனென்றால் உங்கள் உடலின் முக்கிய எனர்ஜியாக இருக்கக்கூடிய குளுக்கோஸ் அளவு குறைகிறது.

இதனை அப்படியே தொடர்ந்தால் உடலில் இருக்கக்கூடிய அமினோ அமிலங்கள் எனர்ஜியாக மாறத்துவங்கும். மெல்ல கொழுப்பும் கரையும்.விளையாட்டு வீரர்கள் அல்லது அதிக உடல் உழைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இந்த டயட் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

இதனை தொடர்ந்து கடை பிடிப்பதால் உங்களுக்கு நிச்சயமாக உடல் எடை குறைந்திடும். ஏனென்றால் முட்டையில் அதிகப்படியாக ப்ரோட்டீன் இருக்கிறது, இவை உங்களுக்கு நிறைவான உணர்வைத் தந்து மேற்கொண்டு அதிகப்படியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கச் செய்திடும்.

நம் உடலில் இருக்கக்கூடிய மேக்ரோ நியூட்ரிசியன்களில் ஒன்றான போஸ்ட் ப்ராண்டியல் தெர்மோஜெனிசிஸ் அதிகரிக்கும். இவை நம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு கரைய வைத்திடும்.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு.

ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவில் உற்பத்தி செய்யும்.

எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

பார்வைத் திறன் :

பார்வைத் திறன் :

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

இதய நலன் :

இதய நலன் :

கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நிறைய மக்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடமாட்டார்கள். ஆனால் முட்டையில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது, இதய நோய்க்கு வழிவகுக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மூளை செயல்பாடு :

மூளை செயல்பாடு :

எதிலும் கிடைக்காத கோலைன் என்னும் இன்றியமையாத சத்தானது, முட்டையில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த கோலைனானது செல் மென்படலங்களின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது மற்றும் மூளையில் சமிக்ஞை மூலக்கூறுகளை உற்பத்தி செய்து, மற்ற செயல்பாடுகளை சீராக செயல்பட மிகவும் இன்றியமையாதது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eating an egg for weight loss

Eating an egg for weight loss