காய்கறிகளின் சத்துக்கள் முழுதாக கிடைக்க, அவற்றை சாப்பிடும் சிறந்த 9 வழிகள்!!

Written By:
Subscribe to Boldsky

பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது எதற்கும் ஒப்பாகாது. அத்தனை ஊட்டசத்து கொண்டவை. விட்டமின் சி நிறைந்த காய்கறிகளை வேக வைக்காமல் சாப்பிடுவதுதான் நல்லது. புரதம் நிறைந்த காய்களை வேக வைத்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலன் பெறலாம்.

Eat green vegetables in healthy ways

அதுபோல் சிலவற்றை முளைக்கட்டி சாப்பிட வேண்டும். இப்படி காய்களை பலவிதங்களில் உண்ணும் முறையை தெய்ர்ந்து கொண்டால் அவற்றின் பலன்களை நீங்கள் முழுதாக பெறலாம்.

பச்சைக் காய்கறிகள்தான் சிறந்த முறையில் உங்களுகு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். முதுமையை தள்ளிப்போடும்.

காய்கறிகள் மீது நீங்கள் மிகவும் நாட்டமுடையவராக இருந்தால் அதனை சாப்பிடும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரசாயனம் அகற்ற :

ரசாயனம் அகற்ற :

காய்கறிகளின் மேலிருக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளை கட்டாயம் அகற்ற வேண்டும்,. இல்லையென்றால் ஆபத்தான பின்விளைவுகளை சந்திக்க நெரிடும். ஆகவே எந்த காயாக இருந்தாலும் அவற்றை சிறிது மஞ்சள் கல் உப்பு கலந்த சுடு நீரில் போட்டு 5 நிமிடத்திற்கு பிறகு பயன்படுத்துங்கள்.

 வேக வைக்கும் முறை :

வேக வைக்கும் முறை :

அதிகபட்சம் எந்த காயும் முதல் 10 -15 நிமிடத்திற்குள் வெந்துவிடும். அதற்கு மேல் வேக வைத்தால் அதன்சத்துக்கல் அழிந்துவிடும். அரைவேக்காட்டில் மூடி வைத்து சமைப்பது மியக்வும் நல்லது. சத்துக்கள் முழுதாக கிடைக்கும்.

க்ரீம் உபயோகிக்கலாம் :

க்ரீம் உபயோகிக்கலாம் :

காய்கறிகள் குழந்தைகள் வெறுப்பார்கள். அவர்கல் பிடிக்கும் வகையில் குறைந்த கொழுப்புள்ள க்ரீமை பொறியல், மற்றும் காய்கறிகள்கலந்து கொடுப்பதால் சுவை கூடும். விரும்பி உண்பார்கள்.

எளிதான முறை :

எளிதான முறை :

காய்கறிகளை பிடிக்காவிட்டாலும் உண்பதற்கான மிக எளிய முறை சூப் தான். சூப் செய்து குடிப்பதால் சத்துக்கள் முழுதாக கிடைக்கும். எளித்க் ஜீரணமாகும். சுவையாகவும் இருக்கும்.

க்ரில்லிங்க் முறை :

க்ரில்லிங்க் முறை :

எப்போதும் காய்களை வேக வைத்தோ அல்லது சாலட்டாக சாப்பிடுவது போர் அடித்தால் ஒரு மாற்றத்திற்காக க்ரில்லிங்க் செய்து சாப்பிட்டு பாருங்கள். சத்துக்களும் கிடியக்கும். ஓவன் இல்லையென்றாலும் தோசைக்கல்லில் ரோஸ்ட் செய்து சாப்பிடுவதால் சுவை கூடும்.

மசாலா சேருங்கள் :

மசாலா சேருங்கள் :

காய்கறிகளில் உங்களுக்கு விருப்பமான மசலா பொருட்களை சேர்த்திடுங்கள். பட்டை பொடி மிளகுப் பொடி, சீரகப் பொடி ஏலக்காய் போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. சுவையும் தரும்.

ப்யூரி சேருங்கள் :

ப்யூரி சேருங்கள் :

காய்கறிகளை சமைக்கும்போது தக்காளி ப்யூரியை சேர்த்து சமைக்கவும். இவை புதிதான ருசியை காய்களுக்கு தௌர்ம். ப்யூரி உடலுக்கு மிகவு நல்லது.

பசலை கீரை சாறு :

பசலை கீரை சாறு :

பசலை கீரையை சுத்தமாக கழுவி மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை அப்படியே காய்கறிகளில் சேர்த்து சமைத்துப் பாருங்கள். சத்துக்கள் கூடும். சுவையும் அருமையாக இருகும்.

சாண்ட்விச் :

சாண்ட்விச் :

காய்கறிகளை பிரட்டில் சேண்ட்விச்சாக சாப்பிடுவதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும். காய்கறிகளை பச்சையாக சேர்த்திடுங்கள். கோதுமை பிரட்டை மட்டுமே வாங்கி உபயோகியுங்கள். பிரவும் பிரட் என்று கடைகளில் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eat green vegetables in healthy ways

Best Ways To Eat Green Vegetables
Story first published: Monday, May 15, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter