இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பை சுத்தமாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க!

Written By:
Subscribe to Boldsky

நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.உடலை எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலை எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு குடித்தால் போதுமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலும்புகளுக்கு...

எலும்புகளுக்கு...

எலும்பு உறிஞ்சி என்னும் செல்கள் எலும்பினை எளிதில் உடைய செய்யும் தன்மையுடையவை. இந்த நெல்லிக்காய் சாறினை தினமும் பருகினால் இந்த செல்களை குறைத்து எலும்பின் பலத்தினை அதிகரிக்கும்.

நச்சுக்களை நீக்க

நச்சுக்களை நீக்க

ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும். மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையானது கூடும். மேலும் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்க உதவுகிறது. இரத்தம் சுத்தமாக இருப்பதால் உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.

நீரிழிவு

நீரிழிவு

நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

உடல் எடை குறைய

உடல் எடை குறைய

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், நெல்லிக்காயில் உள்ள புரோட்டிங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

குடலியக்கம்

குடலியக்கம்

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

சுறுசுறுப்பு

சுறுசுறுப்பு

நல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

 சிறுநீர் எரிச்சல்

சிறுநீர் எரிச்சல்

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

உடல் சூடு தணிய..

உடல் சூடு தணிய..

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

முகம் பொலிவு பெற

முகம் பொலிவு பெற

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

கொழுப்பை நீக்க

கொழுப்பை நீக்க

இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி-யால் ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிட முடியும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி' தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க

ஹீமோகுளோபின் அதிகரிக்க

காட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும்; அழகான சருமத்தையும் பெறமுடியும்.

நோய்கள் அண்டாது..!

நோய்கள் அண்டாது..!

நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சூப்பராக்ஸைடு எனும் பொருளும் உள்ளது. இவை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

நெல்லிக்காய் சாறு செய்முறை:

நெல்லிக்காய் சாறு செய்முறை:

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - தேவையான அளவு, இளநீர்-1

செய்முறை: கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of Drinking Amla Juice

Benefits of Drinking Amla Juice
Story first published: Thursday, December 7, 2017, 17:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter