அமெரிக்காவில் A2, இந்தியாவில் A1 - வேட்டு வைத்த அரசியல், தவிர்க்க வேண்டிய காரணம்!

Posted By:
Subscribe to Boldsky

நாம் மறந்தது பசும்பால் மட்டுமல்ல, தாய் பாலும் கூட தான். பால் எல்லா உயிர்க்கும் தேவையான உணவு. மனிதனுக்கு அத்தியாவசிய உணவு. பசும்பால் மூலம் கிடைக்கும் கால்சியம், புரதம் தான் ஒரு மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

A1 பிறப்பிற்கு காரணமே வெண்மைப் புரட்சி தான் என்று கூறப்படுகிறது. இங்கு ஆரம்பித்த க்ராஸ் ப்ரீடிங் பால் உற்பத்தி தான் A1 பாலை உலகெங்கும் கொண்டு சென்றது. இனி, A1, A2 பால்களில் இருக்கும் வேற்றுமை என்ன? இதனால் நாம் இழந்தது என்ன? அடைந்தது என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவியல் என்ன கூறுகிறது!

அறிவியல் என்ன கூறுகிறது!

BCM 7 தான் மூலக் காரணி. இதில் இரண்டு வகை ஒன்று வலிமையானது (A2 பால்), மற்றொன்று வலிமையற்றது (A1 பால்). A2 பாலானது இந்திய பாரம்பரிய பசுக்கள் மற்றும் ஆப்ரிக்க பாரம்பரிய பசுக்களில் இருந்து தான் அதிகமாக கிடைக்கிறது.

அமினோ அமிலங்கள்!

அமினோ அமிலங்கள்!

இந்திய, ஆப்ரிக்க பசுக்களில் இருந்து கிடைக்கப்படும் அமினோ அமிலம் ப்ரோலைன் (Proline) எனப்படுகிறது. இதுவே ஹைப்ரிட் பசுக்களில் இருந்து கிடைக்கப்படும் அமினோ அமிலங்கள் மரபணு மாற்றத்தால் "Histidine" -னாக மாறுகிறது. இதனால் செரிமான மண்டலம் மற்றும் உடல் பாகங்களில் தாக்கம் உண்டாகின்றன.

ஏன் அபாயம்?

ஏன் அபாயம்?

ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இந்த A1 பால் குழந்தைகளின் மூளையில் பெரியளவில் தாக்கம் உண்டாக்குகின்றது என கூறுகின்றனர்.

இந்திய ஆய்வு!

இந்திய ஆய்வு!

2012-ல் என்டோகிரினாலஜி மற்றும் வளர்சிதைமாற்றம் குறித்த இந்திய ஆய்வு பத்திரிக்கையில் வெளிவந்து அறிக்கையில், இந்த A1 பால், டைப் 1 நீரிழிவு நோய், கரோனரி இதய கோளாறுகள், மனநல கோளாறுகள் போன்றவை விளைவிக்கும் அபாயம் கொண்டது என கூறியுள்ளனர்.

செரிமான கோளாறுகள்!

செரிமான கோளாறுகள்!

A1 பாலை தொடர்ந்து குடித்து வந்தால் நாள்பட செரிமான கோளாறுகள், குடல் இயக்க பிரச்சனைகள் போன்றவை உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் இருக்கும் புரதமும், பெப்டைடுகளும் தான் இதற்கு காரணமாக இருக்கின்றன.

வெண்மைப் புரட்சி!

வெண்மைப் புரட்சி!

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் துவங்கிய க்ராஸ் ப்ரீடிங் தான் இதற்கான முதல் புள்ளி. அதிக உற்பத்திக்காக ஆரம்பித்த இதன் காரணத்தால் தான் இன்று இந்திய பாரம்பரிய பசுக்கள் அழியும் தருவாயில் இருக்கிறது.

அமெரிக்காவில் A2 பால்!

அமெரிக்காவில் A2 பால்!

அமெரிக்காவில் A2 பால் விற்பனை செய்யப்படுகிறது. இதை விலை கொஞ்சம் அதிகம். மேலும், விற்கும் போதே அதன் பாட்டிலில் இது ஆரோக்கியமானது என்று மட்டும் குறிப்பிடாமல், A1 பால் அபாயமானது, அதற்கான மாற்று தான் இது என கூறியே விற்கின்றனர். இது தான் உலகளவில் நடந்துக் கொண்டிருக்கும் வர்த்தக அரசியல். தனக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bad Health Affects of Drinking A1 Milk

Bad Health Affects of Drinking A1 Milk
Please Wait while comments are loading...
Subscribe Newsletter