For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசுத்தமான கல்லீரலை வேகமாக சுத்தம் செய்யும் 6 உணவுகள்!

|

உடல் பிரச்சனையின்றி ஆரோக்கியமாக இயங்க வேண்டுமானால், உடலின் உள்ளுறுப்புக்கள் முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். நம் அன்றாட வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் உடல் பாதிக்கப்பட்டு, ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

நம் உடலின் மைய பகுதியில் உள்ள ஓர் உறுப்பு தான் கல்லீரல். இந்த கல்லீரல் தான் டாக்ஸின்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி, கொழுப்புக்களை உடைத்தெறியும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும் பித்தநீர் கூட கல்லீரலில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுப்போன்று உடலில் நடைபெறும் நிறைய பணிகளில் கல்லீரல் முக்கிய பங்கை வகிக்கிறது.

These 6 Foods Detox Your Liver Fast!

அப்படிப்பட்ட கல்லீரல் அசுத்தமாக இருந்தால், உடல் எந்த அளவு பாதிக்கப்படும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இங்கு அந்த உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பூண்டு

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. அதேப் போல் பூண்டில் உள்ள செலினியம் மற்றும் அர்ஜினைன் போன்ற இரத்த நாளங்களை சுத்தம் செய்து, கல்லீரலில் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். மேலும் பூண்டில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் சி போன்றவை கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றி, இரத்த செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.

பப்பளிமாஸ்/கிரேப் ஃபுரூட்

சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்த பப்பளிமாஸ் பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றம் க்ளூதாதையோன், கல்லீரலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். பொதுவாக கல்லீரல் இயற்கையாக இந்த க்ளூதாதையோனை உற்பத்தி செய்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலை நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும்.

காய்கறிகள்

கீரை மற்றும் பச்சை நிற காய்கறிகள், ஆரோக்கியமான கல்லீரலைப் பெறுவதற்கு மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். ஆகவே கீரைகள் மற்றம் காய்கறிகளை அதிகம் உட்கொண்டு வர, கல்லீரலில் உள்ள நொதிகளின் அளவு அதிகரித்து, கல்லீரல் தன்னைத் தானே சுத்திகரித்துக் கொள்ளும். எனவே பசலைக்கீரை, ப்ராக்கோலி, காலிஃப்ளவர் போன்றவற்றை உங்கள் டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ

அவகேடோ பழத்தில் சக்தி வாய்ந்த கல்லீரல் சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது. மேலும் இப்பழத்தில் க்ளூதாதையோன், வைட்டமின் சி மற்றும் ஈ போன்றை கல்லீரலை சுத்தம் செய்யும் உட்பொருட்கள் உள்ளது. ஆகவே உங்கள் கல்லீரலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள நினைத்தால், அவகேடோ பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

வால்நட்ஸ்

கல்லீரலில் இருந்து அம்மோனியாவை வெளியேற்ற நினைத்தால், அச்செயலை வால்நட்ஸ் செய்யும். ஏனெனில் அதில் உள்ள அமினோ அமிலங்களான அர்ஜினைன், க்ளூதாதையோன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ப்ரீ ராடிக்கல்களின் வெளியேற்றத்தைக் குறைத்து, கல்லீரலில் ஆரோக்கியமான கொழுப்புக்களை சேமித்து வைக்கும். இப்படி சேமித்து வைக்கப்படும் கொழுப்புக்கள், கல்லீரலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடன் செயல்படவும் செய்யும்.

மஞ்சள் தூள்

மஞ்சளில் உள்ள குர்குமின், பித்தப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, கல்லீரலில் அழற்சி ஏற்படாமலும் தடுக்கும். மேலும் இது கல்லீரல் செல்களை புதுப்பிக்கவும், கல்லீரலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை வெளியேற்றவும் செய்வதால், மஞ்சளை தினசரி உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.

English summary

These 6 Foods Detox Your Liver Fast!

To make sure that your liver is working properly, an adequate diet is necessary. These six foods are the supercharger for your liver and are bound to keep it healthy.
Story first published: Tuesday, June 21, 2016, 10:59 [IST]
Desktop Bottom Promotion