For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹேங்க்- ஓவரை சரிபடுத்தும் இந்த ஜூஸை குடிச்சிருக்கீங்களா?

|

நம் ஊரில் ஊறுகாய் போல வெளி நாடுகளில் கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்களை வினிகர் மற்றும் உப்பு கலந்த நீரில் போட்டு வைப்பார்கள். அது புளித்து ஊறுகாய் போலாகும். இதனை பிக்கில் ஜூஸ் என்று அழைப்பார்கள்.

கிளியோபாட்ரா விரும்பி சாப்பிடும் டயட்டில் இந்த ஊறுகாய் கரைசலும் உண்டு. இதனை குடித்தான் என்னென்ன நன்மைகள் தரும் என ஊட்டச்சத்து நிபுணர் ருபாலி தத்தா கூறுகிறார்.

Health benefits of pickle juice

விளையாட்டு வீரர்களுக்கு :

விளையாட்டுத் துறையிலிருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் மிகவும்பிரபலம். விளையாடுபவர்களுக்கு வியர்வையினால் சோடியம், பொட்டாசியம் முதலான கனிம சத்துக்கள் வெளியேறியிருக்கும்.

இந்த ஊறுகாய் சாற்றில் அதிக அளவு எலக்ட்ரோலைட் இருப்பதால் நீரிழப்பை சமன் செய்யும். ஆனால் இதனை வெறும் வயிற்றில் குடித்தால் அதிக அமிலத்தன்மையை உண்டு பண்ணும். ஆகவே ஏதாவது சாப்பிட்டு பின்னர் இதனை குடிக்கலாம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் :

ஜீரணத்தை அதிகப்படுத்தும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் நச்சுக்களை வெளியேற்றுகிறது. நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை தூண்டுகிறது.

தலைசுற்றலை சரிபடுத்தும் :

மது அருந்துவதால் உண்டாகக் கூடிய ஹேங்க் ஓவரை சமாளிக்கலாம். மது குடிப்பதால் வாயில் உண்டாகும் துர் நாற்றத்தையும் நீக்குகிறது. குமட்டல் வாந்தியை நிறுத்தும்.

சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் :

இந்த ஜூஸ் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இதில் விட்டமின் சி மற்றும் கால்சியம் உள்ளது. இது உடலில் உண்டாகும் ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கிறது. அதோடு செல் சிதைவை ரிப்பேர் செய்து, குணமாற்றுகிறது.

மாதவிடாய் வலிகளுக்கு :

மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் வலிகள் தசை பிடிப்பு சோர்வு ஆகியவற்றை போக்கும். உடலுக்கு புத்துணர்வு, சக்தியை அளிக்கும்.

குறிப்பு :

ரத்த கொதிப்பு உள்ளவர்கள் இதய நோயாளிகள் இதனை மருத்துவர் பரிசீலனை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் வினிகர் மற்றும் உப்பு இருப்பதால் சோடிய அளவு அதிகமாக இருக்கும்.

வாத நோயாளிகளுக்கும் உகந்தது இல்லை. அதிக அளவு இந்த ஊறுகாய் கரைசலை எடுத்துக் கொண்டால் அமில சுரப்பையும் வயிற்று உப்புசத்தையும் உண்டு பண்ணிவிடும்.

English summary

Health benefits of pickle juice

Health benefits of pickle juice
Story first published: Thursday, August 4, 2016, 16:00 [IST]
Desktop Bottom Promotion