கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதை உடனே நிறுத்துங்கள் - ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்!

Posted By:
Subscribe to Boldsky

சில வருடங்களாக ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல வகையான பால்களை ஆய்வு செய்து வந்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆரோக்கியமற்றது அல்லது உடல் எடை அதிகரிக்க செய்யும் என்ற காரணத்தால் நாம் அதிகம் பயன்படுத்த தயங்கும் கொழுப்பு நீக்கப்படாத பால் தான் ஆரோக்கியமானது என கண்டறியப்பட்டது.

மேலும், கொழுப்பு நீக்கப்பட்டு விற்கபடும் ஸ்கிம்டு மில்க் எனும் பால் வகை தான் பலவகையான ஆரோக்கிய குறைபாடுகள் / கோளாறுகளுக்கு காரணியாக விளங்குகிறது என்பதையும் இந்த ஆய்வில் ஹார்வர்ட் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு முடிவில்ண்ட கண்டறிந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு நீக்கப்படாத பாலின் நன்மைகள்!

கொழுப்பு நீக்கப்படாத பாலின் நன்மைகள்!

1) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
2) வைட்டமின் சத்துக்கள் உடலில் சீராக இருக்க செய்கிறது.
3) குடல் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கிறது.
4) மிகுதியான கால்சியம் சத்து அளிக்கிறது.
5) எலும்புகளின் வலிமையை ஊக்கப்படுத்துகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்!

கொழுப்பு நீக்கப்பட்ட பால்!

கொழுப்பு நீக்கப்படுவதால் இதில், கொழுப்பின் அளவு குறைவாக இருப்பினும், சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது. இந்த வகை சர்க்கரை உடல் பருமன், எளிதாக நோய் தொற்று ஏற்படுதல் போன்றவைக்கு காரணியாக இருக்கிறது.

ஸ்கிம்டு மில்க்!

ஸ்கிம்டு மில்க்!

ஸ்கிம்டு மில்க் என்ற பெயரில் தனியாக பதப்படுத்தி விற்கபடும் பால்களும் இருக்கின்றன. இவை ஆர்கானிக் என்ற பெயரில் விற்கப்படுகிறது. ஆனால், இதில் ட்ரான்ஸ் கொழுப்பு சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை ஆகும்.

ஃப்ளாவர் மில்க் வகைகள்!

ஃப்ளாவர் மில்க் வகைகள்!

இப்போது, கொழுப்பு நீக்கப்பட்டு, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி போன்ற பல வகை ஃப்ளாவர்கள் சேர்த்து குழந்தைகளை கவரும் வகையிலும் பால்கள் விற்கப்படுகின்றன. இவை அனைத்தும் பதப்படுத்தி விற்கப்படும் பால் வகைகள் ஆகும்.

குழந்தைகளுக்கு உடல்பருமன்!

குழந்தைகளுக்கு உடல்பருமன்!

இதில் சேர்க்கப்படும் சர்க்கரை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. இதனால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பலவகையிலான உடல்நல பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் ஏராளம்.

பசும்பாலே சிறந்தது!

பசும்பாலே சிறந்தது!

உண்மையில் தூய்மையான பசும்பால் தான் சிறந்தது. இதில் இருக்கும் மூலப்பொருட்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக (antibiotics) செயல்படுகின்றன. புற்கள், காய்கறிகள் சாப்பிட்டு ஆர்கானிக் முறையில் வளர்ந்த பசுமாட்டின் பால் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள்!

இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள்!

நாம் உடல்நலனுக்கு நல்லது என்று நம்பி வாங்கும் பொருட்கள் சில தான் உண்மையில் உடல்நலனை சீர்குலைந்து போக செய்கிறது. எனவே, இனிமேல் எந்த ஒரு உணவு பொருள் வாங்குவதாக இருப்பினும், அதை பற்றி சிறிதளவு ஆராய்ந்து வாங்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Harvard Scientist Urging People to Stop Drinking This Type of Milk Immediately

Harvard Scientist Urging People to Stop Drinking This Type of Milk Immediately
Story first published: Wednesday, August 31, 2016, 10:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter