For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளுக்கு காலாவதி தேதியே கிடையாது என்பது தெரியுமா?

நாம் சாப்பிடும் சில உணவுகளுக்கு காலாவதி தேதியே கிடையாது. எவ்வளவு வருடங்கள் வேண்டுமானாலும் அந்த உணவுகள் நன்றாக இருக்கும். இங்கு காலாவதி தேதி இல்லாத உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளுக்கு காலாவதி தேதிகள் உண்டு. குறிப்பிட்ட நாட்களுக்கு பின் அந்த உணவுகள் பார்க்க நன்றாக இருந்தாலும், அவற்றை உட்கொண்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும். ஆனால் சில உணவுகளுக்கு காலாவதி தேதிகள் எல்லாம் இல்லை.

Foods That Shouldn't Ever Need An Expiration Date

அந்த உணவுகள் அன்றாடம் நாம் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்கள் தான். இருப்பினும் நம்மில் பலர் சில உணவுகள் நீண்ட நாட்களாக உள்ளது என்று தூக்கி எறிந்துவிடுவோம்.

இங்கு காலாவதி தேதி இல்லாத உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களைப் படித்து தெரிந்து, இனிமேல் அவை வீட்டில் நீண்ட நாட்களாக இருந்தாலும் தூக்கி எறியாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

உணவுப் பொருட்களில் கெட்டுப் போகாத ஒன்று தான் தேன். தேனின் நிறம் மாறலாம் மற்றும் சர்க்கரையாக மாறலாம். ஆனால் அதை சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ள தேன் சர்க்கரையாக இருந்தால், அந்த தேன் பாட்டிலை சர்க்கரை கரையும் வரை வெதுவெதுப்பான நீரில் வையுங்கள்.

அரிசி

அரிசி

அரிசி நாள்கணக்கில் இருக்கும் போது, அதன் மீது தூசி படலங்கள் உருவாகலாம். ஆனால் அந்த அரிசி நன்றாகத் தான் இருக்கும். அதுவும் வெள்ளை, பாஸ்மதி அரிசி போன்றவை எப்போதும் நன்றாகத் தான் இருக்கும். கைக்குத்தல் அரிசியில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அது வேண்டுமானால் பாழாகும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

பலர் வெள்ளை வினிகரை வாங்கி பல மாதக்கணக்கில் வைத்திருப்பார்கள். திடீரென்று அதன் அவசியம் இருக்கும் போது, அதைப் பயன்படுத்த யோசிப்பார்கள். ஆனால் அப்படி யோசிக்கத் தேவையில்லை. வெள்ளை வினிகர் எப்போதும் பாழாகாது.

உப்பு

உப்பு

தேனைப் போன்று, உப்பும் எப்போதும் கெட்டுப் போகாது. வாங்கும் போது எப்படி இருந்ததோ, அப்படி தான் பல வருடங்களானாலும் இருக்கும்.

சோள மாவு

சோள மாவு

சோள மாவை ஈரப்பதமில்லாத மற்றும் காற்றோட்டமில்லாத டப்பாவில் போட்டு பராமரித்தால், எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் பாழாகாமல் இருக்கும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையும் எப்போதும் கெட்டுப் போகாது. அதிலும் இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டுப் பராமரித்தால், வருடக்கணக்கில் நன்றாக இருக்கும்.

உலர்ந்த பீன்ஸ்

உலர்ந்த பீன்ஸ்

உலர்ந்த பீன்ஸ் வாங்கிய போது சமைத்தால் நன்கு மென்மையாக இருக்கும். நாள்கணக்கில் வைத்திருந்து சமைத்தால், சற்று கடினமாக இருக்கும். இருந்தாலும், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மட்டும் எப்போதும் குறைந்திருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Shouldn't Ever Need An Expiration Date

Here are some foods that you can put in your cart without looking for any dates on them.
Story first published: Thursday, November 10, 2016, 13:34 [IST]
Desktop Bottom Promotion