பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் தம்பதியர்களால் உடலுறவில் நாட்டம் காண்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு கரணம் வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறையினால், தம்பதியர்களால் தங்களின் துணையுடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் போவதோடு, மன அழுத்தத்தினால் செக்ஸ் ஹார்மோன்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனைகள் மட்டும் வளர ஆரம்பிக்கிறது. ஆம், ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை பின் எப்படி இருக்கும், நரகம் போன்று தான் இருக்கும்.

எவ்வளவு தான் வேலை இருந்தாலும், துணையுடன் நேரத்தை செலவழிக்க வேண்டியது அவசியம். இதுவே இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பை இன்னும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தம்பதிகள் தங்களின் உணவில் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகளை அன்றாடம் சேர்த்து வந்தால், பாலுணர்வு தூண்டிவிடப்பட்டு, இருவருக்கும் இடையே உள்ள பிணைப்புக்கள் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

பொதுவாக பாலுணர்ச்சி குறைவதற்கு உடலில் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். எனவே நல்ல சத்துக்கள் நிறைந்த மற்றும் வயகரா போன்று செயல்படும் உணவுகளை தம்பதிகள் உட்கொண்டு வர வேண்டியது அவசியம். இங்கு ஆண் மற்றும் பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அவற்றை உணவில் சேர்த்து படுக்கையில் குதூகலத்துடன் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையை தம்பதிகள் உணவில் சேர்த்து வந்தால், அது பாலுணர்ச்சித் தூண்டிவிடுவதோடு, பெண்களும் எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும். எனவே உங்களுக்கு படுக்கையில் சிறப்பாக செயல்பட ஆசை இருந்தால், பசலைக்கீரையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ஒரு டம்ளர் ரெட் ஒயின் பாலுணர்ச்சியை உடனே அதிகரிக்கும். ஆனால் அதற்கு அதிகமானால், அப்படியே எதிர்விளைவை உண்டாக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் நைட்ரிக் ஆசிட்டை உற்பத்தி செய்து, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, பிறப்புறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஆட்டு ஈரல்

ஆட்டு ஈரல்

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், பாலுணர்ச்சி குறைவாக இருக்கும். குறிப்பாக இப்பிரச்சனை பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். எனவே திருமணமான பெண்கள் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஆட்டு ஈரலை உட்கொண்டு வர, இரத்த அளவு அதிகரித்து, பாலுணர்வும் தூண்டப்படும். அதுமட்டுமின்றி இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு தயிரை தினமும் உட்கொண்டு வர வேண்டும்.

மீன்

மீன்

சால்மன், சார்டைன்ஸ், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது மூளையில் மகிழ்ச்சியை உணர வைக்கும் டோபமைன் என்னும் கெமிக்கலின் அளவை அதிகரிக்கும். இந்த டோபமைன் நரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலுணர்ச்சியை மேம்படுத்தும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள், பிறப்புறுப்புக்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த நாளங்களில் உள்ள அழற்சிகளைக் குறைக்கும். எனவே படுக்கையில் சிறப்பாக செயல்பட நினைத்தால், தினமும் 2 கப் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, இரத்த நாளங்களை தளரச் செய்யும். இரத்த நாளங்கள் தளர்ந்தால் பிறப்புறுப்புக்களிலும் இரத்த ஓட்டம் அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

கடல் சிப்பி

கடல் சிப்பி

கடல் சிப்பியில் ஜிங்க் சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இச்சத்து தான் பாலுணர்ச்சியைத் தூண்ட உதவும். இச்சத்து உடலில் குறைந்தால் தான், படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் போகும். ஆகவே உங்கள் துணையை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க நினைத்தால், கடல் சிப்பியை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள். மேலும் கடல் சிப்பியை ஆண்கள் உட்கொண்டால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Increase Female Sex Drive

These foods increase sex drive and act like Viagra. Know the list of these foods which increase sex drive in women. Read on to know how to increase your sex drive.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter