For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை சாப்பிட்டா தூக்கம் சொக்கும் என்பது தெரியுமா?

|

என்ன தான் இரவில் நன்கு தூங்கி எழுந்தாலும், வயிற்றை நிரப்பிய பின் வேலையில் ஈடுபடும் போது தூக்கம் வருகிறதா? அதற்கு காரணம் நாம் சாப்பிட்ட உணவுகள் தான். அதற்காக அனைத்து உணவுகளையும் உட்கொண்ட பின் தூக்கம் வராது. ஒரு குறிப்பிட்ட உணவுகள் மற்றும் அந்த உணவுகளில் உள்ள உட்பொருட்கள் தான் சோம்பலை அதிகரித்து தூக்கத்தை வரவழைக்கிறது.

Foods That Can Make You Drowsy

இங்கு சோம்பலை அதிகரித்து தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அலுவலக நேரத்தில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாதம்

சாதம்

சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதனால் தான் மதிய வேளையில் உணவு உட்கொண்ட பின் பலருக்கு தூக்கம் சொக்குகிறது.

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட்

வெள்ளை பிரட் கூட சோம்பலை உண்டாக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுடன், கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளதால், எளிதில் செரிமானமாகாமல், உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் சோம்பல் அதிகரித்து, தூக்க உணர்வை பெற நேரிடுகிறது.

ஹம்மஸ்

ஹம்மஸ்

கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் ஹம்மஸில், தூக்கத்தை வரவழைக்கும் ட்ரிப்டோபேன் உள்ளது. எனவே தான் கொண்டைக்கடலை அல்லது ஹம்மஸை சாப்பிட்டால் தூக்கம் வருகிறது.

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி

மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனை செரிப்பதற்கு அதிகப்படியான ஆற்றல் வேண்டும். எனவே இதனை உட்கொண்டால், அதனை செரிக்க உடலின் அனைத்து ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, உடல் சோம்பலாகி தூக்கம் வருவது போன்ற உணர்வை பெறக்கூடும்.

இனிப்புகள்

இனிப்புகள்

இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் இன்சுலின் வெளியிடப்பட்டு, மூளையில் செரடோனின் என்னும் தூக்க ஹார்மோனின் வெளியீட்டை அதிகரித்து, தூக்கத்தை வரவழைக்கும். எனவே இனிப்புக்களை அலுவலக நேரம் மற்றும் முக்கிய வேலைகளின் போது சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Can Make You Drowsy

Here are some foods that can make you drowsy. Read on to know more...
Story first published: Saturday, October 8, 2016, 15:41 [IST]
Desktop Bottom Promotion