For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட ஆயுளை பெற இதையெல்லாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் !!

|

அன்றாடம் என்ன தேவையோ அதை சாப்பிடுவதை நாம் மறந்து பல காலமாயிற்று. இந்த அவசர உலகத்தில் எது கையில் கிடைக்கிறதோ அதை கொறித்து வயிற்றை சமாதானப்படுத்துகிறோம்.

இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போல என்பதை கூட நாம் புரிந்து கொள்வதில்லை. வேறென்ன செய்வது நேரமில்லை என அதன் மீது பழி சுமத்திவிடுகிறோம்.

Foods to be consumed for detoxifying.

இந்த மோசமான பழக்கம், நமது உடலில் தினமும் நடக்கும் செயல்களை வெகுவாக மாற்றிவிடுகிறது. உடலின் மொத்த வளர்சிதை மாற்றமும் குழம்பிப்போகிறது. பலப்பல புதுவியாதிகளை நமது உடலுக்குள் வர வழிவகுக்கிறது.

உங்களுக்கு உடலின் மீது நிஜமான அக்கறை இருந்தால், இனிமேலாவது சில உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை நீங்கள் சாப்பிடும் வேண்டப்படா, ஆரோக்கியமற்ற உணவுகளின் நச்சுக்களை முறியடிக்கும். எவை என தெரிய தொடர்ந்து படியுங்கள்.

மீன் :

மீன் வகைகளில் சால்மன், மத்தி மீன் ஆகியவற்றில் DHA , விட்டமின் டி செல்னியம் உள்ளது. DHA மூளையின் வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கியமான கொழுப்பு அமிலமாகௌம். செலினியம் புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். விட்டமின் டி கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் மற்றும் ஹார்மோன் சுரப்பை தூண்டும். இந்த மிக முக்கியமான சத்துக்கள் கொண்ட மீனை தினமும் சேர்த்துக் கொண்டால், உடலில் உண்டாகும் நச்சுக்களை முறியடிக்கலாம்.

ஆளி விதைகள் :

நீங்கள் சைவமென்றால் மீன் வகைகளை எடுத்துக் கொள்ள முடியாது. மீனிற்கு மாற்றாக ஆளி விதைகள் மற்றும் சீயா விதைகளை சாப்பிடலாம். இவற்றில் அனைத்துவிதமான சத்துக்களும் உள்ளது. சாப்பிடவும் சமைக்கவும் அதிக நேரம் தேவையில்லை. நச்சுக்களை வெளியேற்றிவிடும் குணங்கள் கொண்டவை. உங்கள் டயட்டில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சோற்றுக் கற்றாழை :

சோற்றுக் கற்றாழை வயிற்றை சுத்தப்படுத்தும். நீங்கள் ஹோட்டலிலோ ஏதாவது விருந்திலோ வயிறு நிறைய மசாலா நிறைந்த பொருட்களை சாப்பிட்டு இருந்தால், அடுத்த நாளில் சோற்றுக் கற்றாழையிலுள்ள சதைப்பகுதியை ஒன்றிற்கு ஐந்து தடவை கழுவியபின் அதனை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள கிருமிகளை, நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்தும். சதைபகுதியை ஜூஸ் செய்து குடித்தாலும் நல்ல பலன்களை தரும்.

நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கடைகளில் வயிறுமுட்ட சாப்பிட்டபின், அடுத்த நாள் எப்போதும் விரைவில் ஜீரணமாகின்ற எளிமையான உணவைத்தான் சாப்பிட வேண்டும்.

இல்லையெனில் வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை கொண்டு தரும். ஒரு ஜான் வயிற்றிற்காகத்தான் ஒரு காலத்தில் உழைத்தார்கள். அதனால்தான் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். இப்போது உடல் உழைப்பும் இல்லை. ஆரோக்கியத்தை பற்றி அக்கறையுமில்லை. இதனால்தான் வாழ்முழுவதும் நோயுடன் வாழ்கிறோம்.

English summary

Foods to be consumed for detoxifying

Foods to be consumed for detoxifying.
Desktop Bottom Promotion