For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் மூளையில் என்ன நடக்கும்?

|

எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்பது உங்களுக்கு தெரிந்தாலும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? ஃபிங்கர் சிப்ஸ், பஜ்ஜி, சமோசா என எண்ணெயில் மூழ்கும் பதார்த்தங்களைக் கண்டாலே சாப்பிட தோன்றுகிறதா? அப்படியெனில் இதற்கு மூளையில் உண்டாகும் மாற்றங்கள்தான் காரணம்.

வெண்ணெய், சீஸ் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதால் , எதை சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என மூளையில் குழப்பங்கள் உண்டாகுமாம்.

Eating fried food makes significant changes in your brains

நமது மூளைதான் எல்லா நாடி நரம்புகளையும் கட்டுப்படுத்தி, ஆளுகிறது. ஆனால் நிறைவுறும் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மூளையிலிருக்கும் ஹைபோதலாமஸ் பாதிக்கிறது. இது பசியை மேலும் தூண்டி நிறைய சாப்பிட வைக்கிறது. இதனால் உடல் பருமனாகிறது.

பொதுவாக கொழுப்பு நிறைந்த எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டால் கல்லீரலில் எவ்வாறு கொழுப்பு ஜீரனித்து, அதிகப்படியான கொழுப்பு உடல் பருமனை தருகிறது என தெரிய வந்ததோ, அது போல், மூளையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என இத்தாலியில் நேப்லஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அவாகாடோ, பாதாம், மீன், ஆலிவ் எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நல்ல மாற்றங்களை மூளையில் உண்டு பண்ணுகின்றன. பசியை கட்டுப்படுத்தி, கொழுப்புகளை குறைக்கின்றன.

ஆனால் எண்ணெய் பதார்த்தங்கள் மூளையில் பாதிப்பை, சிதைவை உண்டாக்கி, பசியை கட்டுப்படுத்த தவறவிடுகின்றன. இதனால்தான் அதிகம் சாப்பிடும்படி, உங்கள் உள்ளுணர்வு தூண்டப்படுகிறது என பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மரியானா கூறுகிறார்.

மேலும் கொழுப்பு உணவுகள் மூளையில் உண்டாகும் மாற்றங்கள் மிகவும் ஆச்சரியப்படும்படி உள்ளது. இதன் மற்ற செயல்திறன்கள் சாதரணமாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாட்டில் பாதிப்புகளையே மூளை ஏற்படுத்துகின்றது.

ஆகவே உங்கள் டயட்டை தேர்ந்தெடுக்கும்போது, ஆரோக்கியமானதை மட்டுமே தேர்ந்தெடுங்கள். இதனால் உடல் பருமன் மற்றும் மற்ற நோய்களான சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதய நோய்களை வராமல் தடுக்கலாம்.

இந்த ஆய்வுக் கட்டுரை ஜர்னல் ஃப்ரண்டியர்ஸ் இன் செல்லுலார் நியுரோசயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary

Eating fried food makes significant changes in your brains

Eating fried food makes significant changes in your brains
Story first published: Monday, August 1, 2016, 17:42 [IST]
Desktop Bottom Promotion