நடு ராத்திரியில பசிக்குதா? அப்ப கண்டதை சாப்பிடாம.. ஆரோக்கியமான இத சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நடு ராத்திரியில் சாப்பிடுவது கெட்ட பழக்கமாகும். அப்பழக்கம் இருந்தால், உடனே அதைத் நிறுத்துங்கள். இருப்பினும் நடுராத்திரியில் பசிக்கும் போது என்ன செய்வது? வெறும் வயிற்றில் தான் தூங்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம்.

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

நடு ராத்திரியில் பசிக்கும் போது, பசியைத் தணிக்கும் வகையிலான உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அப்படி உட்கொள்ளும் உணவுகள் தூக்கம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற உதவும் உணவுகள்!!!

மேலும் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், புரோட்டீன் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிறு விரைவில் நிறைந்துவிடும். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. சரி, நடு ராத்திரியில் எதை சாப்பிடுவது நல்லது என்று பார்ப்போமா!!!

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

கொழுப்பு இல்லாத தயிரை நடுராத்திரியில் உட்கொள்வது நல்லது. மேலும் இதில் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை உட்கொண்டால், அதில் உள்ள புரோட்டீனால் பசி விரைவில் அடங்கிவிடும். ஆனால் தயிரில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வீட்டில் வெள்ளரிக்காய் இருந்தால், அதனை சாப்பிடலாம். இதனால் அதில் உள்ள நீர்ச்சத்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.

பாதாம்

பாதாம்

பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து மக்கும் மக்னீசியம் போன்றவை உள்ளதால், இவற்றை ஒரு கையளவு சாப்பிட்டு தூங்கினால், பசி தணிவதோடு, தூக்கமும் நன்கு வரும்.

கேரட்

கேரட்

கேரட்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், இவற்றை நடு ராத்திரியில் உட்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, பசியும் தணியும். முக்கியமாக இதில் கலோரிகள் இல்லாததால், இவை உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் செய்யும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

நடு ராத்திரியில் வாழைப்பழம் சாப்பிடுவதும் சிறந்தது. இவை எளிதில் செரிமானமாவதோடு, தூக்கத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாது.

நண்பர்களே! உங்களுக்கு நடு ராத்திரியில் சாப்பிட வேறு ஏதேனும் ஆரோக்கியமான உணவுகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Midnight Snack Ideas

A healthy midnight snack wont kill you. On inevitable situations, you may need healthy midnight snack ideas. Read on...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter