பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஜிம் சென்று பாடி பில்டர் போன்று உடலை வைத்துக் கொள்ள, புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதற்காக சிக்கன், முட்டை போன்றவற்றை அதிகம் உட்கொள்வோம். ஏனெனில் தசைகள் இருந்தால் தானே உடல் சிக்கென்று தெரியும். இருப்பினும் தசைகளின் வளர்ச்சிக்கு பழங்களையும் அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தசைகளின் வளர்ச்சியை வேகமாக்கும் பழங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

உடற்பயிற்சியினால் அதிகரிக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்கள்!!!

உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதற்கு சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால், குறைபாடுகள் ஏற்படக்கூடும். இங்கு பாடி பில்டர் போன்று உடலில் அழகாக கட்ஸ் வருதற்கு, தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி உணவில் சேர்த்து வந்தால், தசைகள் வளர்ச்சி அடைவதோடு, உடலுக்கு ஸ்டாமினா கிடைக்கும் மற்றும் கொழுப்புக்களும் விரைவில் கரையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழம்

பலருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையிலேயே பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், தசைகளின் வளர்ச்சி வேகமாகும். ஏனெனில் பேரிச்சம் பழத்திலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.

கிவி

கிவி

பாடி பில்டிங் நிபுணர்கள் சிலர் கிவி பழங்களை எடுக்கச் சொல்வார்கள். இதற்கு அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் கொழுப்புக்களை எரிக்கும் குணம் உள்ளது தான் காரணம்.

கொடிமுந்திரி (Prunes)

கொடிமுந்திரி (Prunes)

கொடிமுந்திரி உடலின் ஸ்டாமினா அளவை அதிகரிக்கம். மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கும். அதுமட்டுமின்றி, இதில் நார்ச்சத்துக்களும் அதிகம்.

அவகேடோ/வெண்ணெய் பழம் (Butter Fruit)

அவகேடோ/வெண்ணெய் பழம் (Butter Fruit)

உங்களின் டயட்டில் நார்ச்சத்து குறைவாக இருந்து, நீங்கள் பாடி பில்டிங்கில் ஈடுபட்டிருந்தால், வெண்ணெய் பழ மில்க் ஷேக்கை தினமும் குடித்து வருவது நல்லது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள புரொமெலைன், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமானால், அது தசைகளின் வளர்ச்சியில் நல்ல பலனைத் தரும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள ஒருசில சேர்மங்கள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் உடலின் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவும். மற்றும் இதில் புரோட்டீனும் உள்ளதால், இதனை உடற்பயிற்சிக்கு பின் உட்கொண்டு வருவது நல்லது.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொழுப்புக்கள் எரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இது தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவி புரியும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். எனவே தினமும் ஒரு பௌல் தர்பூசணியை வாங்கி சாப்பிடுங்கள்.

உங்களுக்கு ஜிம் செல்வோர் சாப்பிட வேண்டிய வேறு ஏதேனும் பழங்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eat These Fruits To Build Muscles Faster

Are there any fruits for bodybuilding? Well banana is one of the muscle building fruits. Read on to know about such fruits....
Please Wait while comments are loading...
Subscribe Newsletter