தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: ப்ளோரிடா ஆய்வு தகவல்!

Posted By:
Subscribe to Boldsky

நட்ஸ் உணவுகளில் பாதாம் மிகவும் சிறந்த உணவு. இது உடல் வலிமையையும், எலும்பின் வலிமையையும் ஊக்கவிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் பாதாமை தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது எலும்பு நன்கு உறுதியாவதுடன், அவர்கள் சீக்கிரம் நடைபழக ஆரம்பித்துவிடுவார்கள்.

பாதாம் உட்கொள்வதால், இதய கோளாறுகள், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன், பற்கள் வலி, பித்தக்கற்கள், இரத்த சோகை, மூளை சோர்வு, மலச்சிக்கல் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு சீரான தீர்வுக் காண முடியும். இனி, ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பாதாம் குறித்து மேற்கொண்ட ஆய்வின் தகவல்கள் பற்றி காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எச்.ஈ.ஐ (H.E.I)

எச்.ஈ.ஐ (H.E.I)

எச்.ஈ.ஐ என்பது Healthy Eating Index (H.E.I) ஆகும். நாம் உட்கொள்ளும் உணவுமுறை அல்லது டயட்டினால் நாம் பெரும் நன்மைகள் அல்லது தீமைகளை குறித்த அளவுகோல் என்று கூட இதை கூறலாம். இந்த கணக்கின்படி தினமும் 14கிராம் பாதாம் உட்கொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என ப்ளோரிடா ஆய்வாளர்கள் ஆய்வொன்றை மேற்கொண்டனர்.

பாதாமில் இருக்கும் சத்துக்கள்

பாதாமில் இருக்கும் சத்துக்கள்

பாதாமில் தாவர புரதம், கொழுப்பு அமிலம், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நமது உடற்சக்தியை அன்றாடம் சீர்கெடாமல் பார்த்துக்கொள்பாவை ஆகும்.

14 வார ஆய்வு

14 வார ஆய்வு

ப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தினமும் பாதாம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து 14 வார ஆய்வொன்றை நடத்தினர். இதில் 29 தம்பதியினர் அவர்களது குழந்தைகளுடன் பங்குப்பெற்றனர். இதில் பங்குபெற்ற பெண்களின் வயது ஏறத்தாழ 35, குழந்தைகளின் வயது 5-6 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதாம் முறை

பாதாம் முறை

குழந்தைகளுக்கு தினமும் 14 கிராம் பாதாம் வெண்ணெய் உணவும், பெற்றோர்களுக்கு தினமும் 14 கிராம் பாதாமும் உட்கொள்ள ஆய்வாளர்கள் வலியுறுத்தினர். இதை ஆன்லைன் மூலமாக தினமும் அவர்களுக்கு நினைவூட்டவும் செய்தார்கள்.

எச்.ஈ.ஐ கணக்கு

எச்.ஈ.ஐ கணக்கு

14 வார இறுதியில் அவர்களது எச்.ஈ.ஐ எந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அவர்களது உடலில் புரதச்சத்து மேலோங்கியிருந்தது. அவர்களது எச்.ஈ.ஐ. ஸ்கோர் 53.7-ல் இருந்து 61.4 என்ற கணக்கிற்கு உயர்ந்திருந்தது.

ஊட்டச்சத்து மாற்றம்

ஊட்டச்சத்து மாற்றம்

குழந்தைகள் மற்றும் பெற்றோர் மத்தியில் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் அதிகரித்திருந்ததை ஆய்வாளர்கள் உணர்ந்தனர்.இதனால் அவர்களது உடற்திறன் மேலோங்கி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வறிக்கை ஊட்டசத்து ஆய்வறிக்கை பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது (Journal nutrition Research)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eat 14g Of Almonds Daily To Boost Your Health

Having 14g of almonds daily will help you to boost your health as per Healthy Eating Index, researchers says.
Subscribe Newsletter