சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் முக்கிய உறுப்பு தான் சிறுநீரகம். அத்தகைய சிறுநீரகங்களில் பிரச்சனையானது தற்போது அதிக அளவில் வருகிறது. பெரும்பாலான மக்கள் சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதர சிறுநீரக பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர்.

இதற்கு காரணம் பல இருந்தாலும், இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, அந்த நச்சுக்கள் முற்றிலும் வெளியேறாமல், சிறுநீரகத்திலேயே தங்கியிருப்பதும் ஒரு காரணம். இப்படி சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற சிறந்த வழி உணவுகள் தான்.

அதற்கு சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை உண்ணும் உணவில் தவறாமல் சேர்த்து வர வேண்டும். இங்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகாய்

குடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின் சி, ஏ, பி6 மற்றும் ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து போன்றவை அதிகமாகவும் உள்ளது. மேலும் லைகோபைன் என்னும் புற்றுநோய்க்கு எதிராக போரராடும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. ஆகவே இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் குறையும், மலச்சிக்கல் நீங்கும், இதய நோய், புற்றநோய் போன்றவை தடுக்கப்படும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் வைட்டமின் கே, வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் முட்டைக்கோஸ் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

பூண்டு

பூண்டு

பூண்டு சாப்பிட்டால், பற்களில் ப்ளேக் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொலஸ்ட்ரால் குறையும். மேலும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இயங்கும்.

வெங்காயம்

வெங்காயம்

அனைத்து சமையலிலும் சேர்க்கப்படும் வெங்காயத்தில் ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை வளமாக நிறைந்துள்ளதால், அவை உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். வெங்காயத்தில் பொட்டாசியம் குறைவாகவும், குரோமியம் அதிகமாகவும் உள்ளது. இதனால் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்படும்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு பீட்ரூட்டில் பொட்டாசியம் குறைவாக இருப்பதே காரணம்.

பசலைக் கீரை

பசலைக் கீரை

வாரம் ஒருமுறை பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களில் பிரச்சனை வருவதைத் தடுக்கலாம். எனவே பசலைக் கீரையை கடைந்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுங்கள்.

கத்திரிக்காய்

கத்திரிக்காய்

கத்திரிக்காய் கூட சிறுநீரகங்களை நன்கு இயங்க உதவி புரியும். எனவே இந்த காய்கறியையும் அன்றாட உணவில் சிறிது சேர்த்து வாருங்கள்.

பேரிக்காய்

பேரிக்காய்

ஆப்பிளுக்கு இணையான சத்தைக் கொண்டுள்ள பேரிக்காய்க்கும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி உள்ளது. ஆகவே பேரிக்காயை எங்காவது கண்டால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

தண்ணீர்

தண்ணீர்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்பட தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த பழச்சாறுகள், இஞ்சி டீ போன்றவற்றை குடித்து வரை வேண்டும். மேலும் டீ அல்லது காபி குடிக்கும் அளவைக் குறைக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Foods For Healthy Kidneys

Kidneys are extremely vital to your body as their main job is to filter your blood. Include these foods in your diet if you are suffering from kidney-related diseases or to maintain healthy kidneys.