ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் சிறப்பான சில உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் தம்பதியர்களுக்குள் விரைவில் மனக்கசப்புகள் வந்துவிடுகிறது. இப்படி மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று படுக்கை அறையில் சிறப்பாக செயல்படாதது. ஆம், பொதுவாக பெண்களுக்கு பாலுணர்ச்சி அதிகம் இருக்கும். ஆனால் அத்தகைய உணர்ச்சி தன் துணைக்கு இல்லாவிட்டால், விரைவில் மனக்கசப்புகள் ஏற்பட்டு பின் இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்பட ஆரம்பித்து, நாளடைவில் வெறுப்புகள் வந்துவிடும்.

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

தற்போதைய வேலைப்பளு மிக்க வாழ்க்கை முறையில் அதிகப்படியான மன அழுத்தத்தினால், ஆண்களுக்கு விரைவில் பாலுணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இதனால் படுக்கையில் ஆண்களால் சரிவர செயல்பட முடியவில்லை. இருப்பினும் ஆண்கள் தங்களின் டயட்டில் ஒருசில உணவுகளை சேர்த்து வந்தால், பாலுணர்ச்சியை சிறப்பாக தூண்டலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொஞ்சி விளையாடுங்க...

அதிலும் ஆய்வுகள் பலவற்றில் நிறைய உணவுகள் பாலுணர்ச்சியைத் தூண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை உணவில் சேர்த்து வந்தால், பின் என்ன புகுந்து விளையாட வேண்டியது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

சமீபத்திய ஆய்வு ஒன்றில் தர்பூசணியை சாப்பிட்டால் படுக்கையில் சிறப்பாக விளையாட முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதில் உள்ள சிட்ருலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஒரு சிறந்த வயாகராவாக செயல்படுகிறது. ஆகவே முடிந்தால், தினமும் தர்பூசணியை சாலட் செய்து சாப்பிட்டு வாருங்கள்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்தால், தாம்பத்திய வாழ்க்கை செழிக்கும். ஏனென்றால் அதில் உள்ள காப்சைசின் என்றும் பொருள், உடலின் வெப்பத்தை தூண்டி, இதயத் துடிப்பை அதிகரித்து, எண்டோர்பின் என்னும் ஹார்மோனை வெளியேற்றி, தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக வைக்கும். எனவே சமைக்கும் போது உணவில் சிவப்பு மிளகாயை சேர்த்து வாருங்கள்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

தற்போது ஸ்ட்ராபெர்ரி அதிக அளவில் கிடைக்கிறது. எனவே தவறாமல் இந்த ஹாட் நிற ஸ்ட்ராபெர்ரியை அவ்வப்போது வாங்கி சாப்பிடுங்கள். ஆய்வு ஒன்றில் ஸ்ட்ராபெர்ரிக்கும், பாலுணர்ச்சியை அதிகரிப்பதற்கும் நிறைய தொடர்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

பாலுணர்ச்சியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் ரெட் ஒயின். எப்படியெனில் ரெட் ஒயின் இரத்தத்தில் உள்ள நைட்ரிக் ஆசிட்டை தூண்டும். இதனால் இரத்த நாளங்களானது ரிலாக்ஸ் ஆகி, பிறப்புறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலுணர்ச்சியை அதிகரிக்கும்.

தோல் நீக்கப்பட்ட இறைச்சி

தோல் நீக்கப்பட்ட இறைச்சி

தோல் நீக்கப்ட்ட இறைச்சி கூட பாலுணர்ச்சியைத் தூண்டுவதில் சிறப்பானது. ஏனெனில் தோல் நீக்கப்பட்ட இறைச்சியில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், ஸ்டாமினா அதிகரித்து, நீண்ட நேரம் நன்கு செயல்பட முடியும். எனவே இதனை உணவில் சேர்த்து வாருங்கள்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழமும் பாலுணர்ச்சியைத் தூண்டும். அதிலும் உறவில் ஈடுபடும் முன் 5 பழத்தினை உட்கொண்டால், படுக்கையில் சிறப்பாக இருக்கலாம்.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்

ஸ்ட்ராபெர்ரி போல டார்க் சாக்லெட்டிலும் பாலுணர்ச்சியைத் தூண்டும் பொருள் உள்ளது. அதிலும் டார்க் சாக்லெட்டை ஸ்ட்ராபெர்ரியுடன் சேர்த்து சாப்பிட்டால், பாலுணர்ச்சி அதிகரிப்பதை நன்கு உணர முடியும்.

குங்குமப்பூ

குங்குமப்பூ

குங்குமப்பூவை சூடான பாலில் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து, குடித்து வந்தால், பாலுணர்ச்சி அதிகரிப்பதாக கனடாவில் உள்ள பல்கலைகழத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Foods To Increase Male Libido

If you want to know the different ways on how to increase male libido, here are some foods to do the trick.
Story first published: Friday, December 5, 2014, 11:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter