For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இரத்த பிரிவை சொல்லுங்க.. எடை குறைய எந்த மாதிரி உணவை சாப்பிடணும்-ன்னு சொல்றோம்...

எடை இழப்பு என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாகும். இரத்த வகைக்கேற்ப உணவுகளை உண்பது உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

|

எடை இழப்பு என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாகும். எடை இழப்பிற்கு உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான காரணிகளாக இருந்தாலும், ஒருவரது வேலை செய்யும் நேரம் மற்றும் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் போன்ற காரணிகளும் எடை இழப்பு முயற்சிகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எப்படி ஆரோக்கிய பிரச்சனைகள் ஒருவரது உடல் எடையை பாதிக்கிறதோ, அதேப் போல் இரத்த வகையையும் இது பாதிக்கும்.

What Should You Eat To Lose Weight According To Your Blood Type?

இரத்த வகைக்கேற்ப உணவுகளை உண்பது உடல் எடையைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். வெவ்வேறு இரத்த வகைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பல்வேறு நோய்கள் மற்றும் நிலைமைகளுக்கு பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இது உடல் எடை இழப்பு பயணத்தையும் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை இழப்பில் இரத்த வகையின் பங்கு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை

எடை இழப்பில் இரத்த வகையின் பங்கு ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படவில்லை

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு குறிப்பிட்ட இரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பிட்ட உணவுகள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. PLOS இல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், ஒரு குறிப்பிட்ட உணவைப் பின்பற்றுபவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்களைக் கண்டனர், ஆனால் அந்த நன்மைகள் இரத்த வகையிலிருந்து சுயாதீனமானவை.

காலப்போக்கில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், இரத்த வகைக்கும், எடை இழப்பு டயட்டுகளின் விளைவுகளுக்கும் இடையில் எந்தவொரு குறிப்பிட்ட தொடர்பு இருப்பதையும் கண்டுபிடிக்கவில்லை.

இரத்த வகைக்கு ஏற்ப உடல் எடையைக் குறைக்க என்ன சாப்பிட வேண்டும்?

இரத்த வகைக்கு ஏற்ப உடல் எடையைக் குறைக்க என்ன சாப்பிட வேண்டும்?

ஆய்வுகளில் கூட இதுக்குறித்து எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றாலும், இரத்த வகைகளுக்கும், நோய்களுக்கும் தொடர்பு இருப்பதால், இரத்த வகைக்கேற்ப உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது என்று சிலர் நம்புகிறார்கள். நீங்கள் இரத்த வகைக்கேற்ப உடல் எடையைக் குறைக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைக் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

ஏ இரத்த வகை

ஏ இரத்த வகை

இரத்த வகைக்குரிய உணவு குறித்து வலைத்தளம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, ஏ வகை இரத்த பிரிவினர்கள் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் தூய்மையான, நற்பதமான உணவுகளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பி இரத்த வகை

பி இரத்த வகை

பி வகை இரத்தப் பிரிவினர்கள் பச்சை இலைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், முட்டைகள் மற்றும் ஆட்டிறைச்சி போன்ற குறிப்பிட்ட இறைச்சிகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம் இந்த வகை இரத்த பிரிவினர்கள் சோளம், கோதுமை, பருப்பு வகைகள், தக்காளி, வேர்க்கடலை, எள்ளு விதைகள் மற்றும் சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

ஓ இரத்த வகை

ஓ இரத்த வகை

ஓ வகை இரத்தப் பிரிவினர்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளான இறைச்சிகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆனால் தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

ஏபி இரத்த வகை

ஏபி இரத்த வகை

ஏபி வகை இரத்த பிரிவினர்கள் டோஃபு, பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் நெருப்பில் சுட்ட இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

முடிவு

முடிவு

அனைத்து வயதினருக்கும் சரியான அளவிலான ஆரோக்கியமான உணவுகள் மற்றும் அன்றாட உடற்பயிற்சி போன்றவை எடை இழப்பிற்கு மிகவும் முக்கியம். எடையை இழக்க நினைப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், வறுத்த மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேற்கூறிய உணவுகள் ஆரோக்கியமானவையாக இருந்தாலும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட டயட்டுகள் எப்போதும் பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் எந்த ஒரு டயட்டை மேற்கொள்வதாக இருந்தாலும், சரியான ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்து மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Should You Eat To Lose Weight According To Your Blood Type?

Many people believe that a diet depending on your blood type may play a crucial role in weight loss. Can your blood type also affect your weight loss? Find out.
Desktop Bottom Promotion