For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க உடல் எடையை குறைக்க நீங்க காலை உணவை தவிர்க்கணுமா? இல்ல இரவு உணவை தவிர்க்கணுமா?

காலை உணவைத் தவிர்ப்பது ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கும். அதற்கு மேல், காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும்.

|

உடல் எடையை குறைப்பது என்பது இன்றைய இளைஞர்களிடம் சவாலான பணியாக உள்ளது. பல்வேறு காரணங்களால் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த உடல் பருமானால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று இடைப்பட்ட உண்ணாவிரதம். இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent fasting) என்பது வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக தவிர்க்க செய்வது. இதை விட மிகவும் பிரபலமாக இருந்து வரும் விரத முறை ட்ரை பாஸ்டிங் என்றழைக்கப்படும் உலர் உண்ணாவிரதம். இதை முழுமையான உண்ணா விரதம் என்றும் குறிப்பிடலாம்.

Weight loss: Should you miss your breakfast or dinner in tamil?

இந்த உண்ணாவிரதம் இருக்கும் போது எந்த வடிவத்திலும் உணவு மற்றும் திரவம் ஆகிய இரண்டையும் உட்கொள்ள கூடாது. இந்த உண்ணாவிரதத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சாப்பிடுவீர்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு வேளை சாப்பிடுவது, உங்கள் உடல் கொழுப்பை எரிக்க உதவும். அறிவியல் சான்றுகள் சில ஆரோக்கிய நன்மைகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இடைப்பட்ட உண்ணாவிரதத்திற்கு உங்கள் காலை உணவைத் தவிர்க்க வேண்டுமா? அல்லது இரவு உணவைத் தவிர்க்க வேண்டுமா? என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இடைப்பட்ட உண்ணாவிரத முறை

இடைப்பட்ட உண்ணாவிரத முறை

எடை குறைவதற்கோ அல்லது உடல்நிலையை மேம்படுத்துவதற்கோ, இடைப்பட்ட உண்ணாவிரத முறை உங்களின் அனைத்து உடல்நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். இந்த உணவு முறை எந்தவொரு உணவுக் குழுவையும் கட்டுப்படுத்தாது. இது மக்களிடையே அதன் பிரபலத்திற்கு முக்கிய காரணமாகும்.

டயட் முறை

டயட் முறை

பல்வேறு வகையான இடைவிடாத உண்ணாவிரத முறைகளில், நேரம் கட்டுப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை மிகவும் விரும்பத்தக்க ஒன்றாகும். ஏனெனில் இது பின்பற்ற எளிதானது மற்றும் வசதியானது. இதில், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து கலோரிகளையும் மட்டுமே உட்கொள்ள வேண்டும் மற்றும் மீதமுள்ள 16 மணிநேரம் அல்லது 14 மணிநேரம் என, அவரவர் வசதிக்கேற்ப உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த டயட் முறையைப் பின்பற்றும்போது ஒருவர் சந்திக்கும் ஒரே முக்கியப் பிரச்சினை, உங்கள் உணவை எவ்வாறு சரிசெய்வது என்பதுதான்.

கலோரிகளின் அளவு

கலோரிகளின் அளவு

இன்றைய நவீன காலகட்டத்தில் காலை உணவைத் தவிர்ப்பது ஒரு பிரபலமான ட்ரெண்டாகிவிட்டது. உடல் எடையைக் குறைக்க முயல்பவர்கள் அனைவரும், காலை உணவைத் தவிர்த்துவிட்டு, மதியம் நேரடியாக முதல் உணவை சாப்பிடுவார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்கள் கலோரி எண்ணிக்கையை நிர்வகிக்கவும். மற்ற நேரங்களில் அதிகமான உணவையும் எடுத்துக்கொள்கிறார்கள். இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் விஷயத்தில் கூட, உணவு உண்ணும் நேரத்தை சரிசெய்து, அன்றைய கலோரி எண்ணிக்கையை நிர்வகிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்கள் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, மதியம் முதல் உணவாக அதிக கலோரி உணவை சாப்பிடுகிறார்கள்.

காலை உணவு அல்லது இரவு உணவு எதை தவிர்க்க வேண்டும்?

காலை உணவு அல்லது இரவு உணவு எதை தவிர்க்க வேண்டும்?

16 மணி நேர உண்ணாவிரதம் மற்றும் 8 மணிநேர உணவு உண்ணும் முறை 16:8 என்பது மிகவும் பாரம்பரியமான நேரம் கட்டுப்படுத்தப்பட்ட இடைப்பட்ட உண்ணாவிரத முறையாகும். இந்த வழியில் இரவு உணவு மற்றும் காலை உணவைத் தவிர்ப்பது தர்க்கரீதியானதாகத் தெரிகிறது. இருப்பினும், இது அனைவருக்கும் ஒரு நல்ல தேர்வாக இருக்காது மற்றும் அனைவருக்கும் பொருந்தாது.

காலை உணவு முக்கியம்

காலை உணவு முக்கியம்

காலை உணவைத் தவிர்ப்பது ஒவ்வொருவரையும் வித்தியாசமாக பாதிக்கும். அதற்கு மேல், காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும். இது தசை வலி மற்றும் காயம் ஆபத்தை அதிகரிக்கலாம். எனவே, இடைப்பட்ட உண்ணாவிரதத்தைப் பின்பற்றும்போது காலை உணவு அல்லது இரவு உணவைத் தவிர்க்க தேர்வு செய்ய வேண்டியிருந்தால், இரவு உணவைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கிறோம். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.

இரவு உணவு

இரவு உணவு

இடைப்பட்ட உண்ணாவிரதத்தின் விஷயத்தில், இரவு உணவைத் தவிர்ப்பது சிறந்தது மற்றும் எளிதானது. நீங்கள் இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடலாம் அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டியை சாப்பிட்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம். உடல் எடையை குறைக்க, மாலை மற்றும் இரவில் உண்ணாவிரதம் இருந்து, காலையில் சீக்கிரம் சாப்பிடுவது இந்த உணவைப் பின்பற்ற சிறந்த வழி என்று ஆராய்ச்சி கூறுகிறது. இரவு உணவை சீக்கிரமாகச் சாப்பிடுவது, இரவு நேர சிற்றுண்டியில் இருந்து உங்களைத் தடுக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

எடை இழப்பு தவிர, இடைப்பட்ட உண்ணாவிரதத்திற்கு வேறு பிற நன்மைகளும் உள்ளன. இந்த உண்ணாவிரதம் உடல் எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், கொழுப்பைக் குறைக்கவும், குளுக்கோஸ் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், கல்லீரல் கொழுப்பைக் குறைக்கவும் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த டயட் முறையால் சகிப்புத்தன்மை மற்றும் மேம்பட்ட தூக்கம் ஆகியவற்றை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight loss: Should you miss your breakfast or dinner in tamil?

Here we are talking about the Weight loss: Should you miss your breakfast or dinner in tamil
Story first published: Thursday, February 17, 2022, 13:21 [IST]
Desktop Bottom Promotion