For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை உங்கள் எடையைக் குறைத்த டயட்டால், திடீரென்று எடை குறையமாட்டீங்குதா? அதுக்கு இதாங்க காரணம்...

உங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? இதற்காக கடுமையான பயிற்சிகளைத் தேடி கண்டுபிடித்து எடை இழப்பு முறையை முயற்சித்து வருபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது!

|

உங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? இதற்காக கடுமையான பயிற்சிகளைத் தேடி கண்டுபிடித்து எடை இழப்பு முறையை முயற்சித்து வருபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது!

ஆரம்ப கட்டத்தில் உங்களுக்கு தேவையான முடிவுகளைக் கொடுத்த கடுமையான எடை இழப்பு முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால், திடீரென்று நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் எடை இழப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்றால், நீங்கள் எடை இழப்பு தேக்க நிலையை அடைந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். எடை இழப்பு செயல்முறையின் தேவையற்ற கட்டம், அந்த கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்கிய பின் கிட்டத்தட்ட அனைவரின் வாழ்க்கையிலும் நிகழ்கிறது. இது ஒவ்வொரு முயற்சியையும் வீணாக்குகிறது.

Weight Loss Plateau: Commom Mistakes You Must Not Do Avoid The Phase

எடை இழப்பு வழக்கத்தை நீங்கள் ஆரம்பித்தவுடன், எடையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படுகிறது. உடல் கலோரிகளை இழப்பதால் உங்கள் உடல் தசைகளில் இருக்கும் கிளைகோஜனை ஆற்றலுக்காக பயன்படுத்துவதால் இது நிகழ்கிறது. மேலும், கிளைகோஜன் உடலில் எரிக்கப்படும் போது தண்ணீரை வெளியிடுகிறது. இதனால் உடல் எடை குறைகிறது. படிப்படியாக, உடல் உங்கள் வளர்சிதை மாற்றத்தை உகந்ததாக வைத்திருக்க தேவையான தசைகள் மற்றும் கொழுப்பை இழக்கிறது. இந்த காரணிகளின் குறைபாடு மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது, இது எடை அதிகரிப்புடன் தொடர்புடையது. இந்த நேரம், நீங்கள் எடை இழப்பு தேக்க நிலை அடைந்து அதிக கலோரிகளை அகற்றுவதை நிறுத்துகிறீர்கள். சில பொதுவான தவறுகளால் நீங்கள் எடை இழப்பு தேக்க நிலையை அடைகிறீர்கள். அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்தியாசமான உடற்பயிற்சி

வித்தியாசமான உடற்பயிற்சி

தினமும் ஒரே மாதிரியான உடற்பயிற்சியைச் செய்வதால் எடை இழப்பு தேக்க நிலையை அடைய முடியும். இது உங்கள் உடலுக்கு ஒர்க்அவுட் அமர்வை சலிப்பானதாக ஆக்குகிறது. மேலும் இது எதிர்வினையாற்றுவதையும் தேவையான முடிவுகளைக் கொண்டு வருவதையும் நிறுத்துகிறது. எனவே, நீங்கள் அடிப்படையில் உங்கள் உடலுக்கு சவால் விட வேண்டும். அதற்கு சில கடினமான மற்றும் புதிய பயிற்சிகளை அறிமுகப்படுத்துங்கள். மேலும், நீங்கள் ஏற்கனவே செய்து வரும் பயிற்சிகளின் அளவை மாற்றவும். எடை இழப்பு தேக்க நிலையை உடைக்க எதிர்ப்பு பயிற்சி ஒரு சிறந்த வழியாகும்.

கலோரிகள்

கலோரிகள்

உங்கள் கலோரி அளவை எப்போதும் கண்காணிக்கவும். நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சிக்கு முன், பின் உண்ணவும்

உடற்பயிற்சிக்கு முன், பின் உண்ணவும்

உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உணவைத் தவிர்ப்பது மெலிதான உடலைப் பெற உதவும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் எண்ணம் தவறு. அது உங்களை பலவீனமாக்கும். எனவே, எதையாவது சாப்பிட்ட பிறகு எப்போதும் ஜிம்மை நோக்கி சென்று பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்களை சோர்வடையாமல் இருந்து உடற்பயிற்சி செய்ய போதுமான ஆற்றலை கொடுக்கும். மேலும், உடற்பயிற்சிக்கு பின் உணவை சாப்பிட மறக்காதீர்கள். இது தசைகள் வேலை செய்ய உதவும்.

நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி

நீங்கள் உட்கார்ந்தபடி செய்யும் வேலையில் நீண்ட நேரம் ஈடுபடுவீர்கள் என்றால், மெலிதான உடலைப் பெற வெறும் உடற்பயிற்சி உங்களுக்கு உதவாது. சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வைத்திருப்பது எடை இழப்பில் முன்னேற்றத்தை அனுபவிக்க உதவும். ஆகவே அடிக்கடி எழுந்து நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

எடை இழப்பு செயல்பாட்டின் போது போதுமான தண்ணீரை உட்கொள்வது அவசியம். நீரிழப்பு எடை அதிகரிப்போடு ஏற்கனவே தொடர்புடைய அதிக கலோரிகளை உட்கொள்ள வைக்கும். எனவே உங்களால் முடிந்த அளவு தண்ணீர் குடிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weight Loss Plateau: Commom Mistakes You Must Not Do Avoid The Phase

If you are following a strict weight loss regimen that gave you the required results during the initial phase, however suddenly you have stopped losing weight for no reason, it means you have reached a weight loss plateau.
Story first published: Thursday, November 14, 2019, 16:02 [IST]
Desktop Bottom Promotion