Latest Updates
-
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும்
தினமும் ஜிம் போவீங்களா? அப்ப ஜிம்முக்கு போகும் முன் இந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுங்க...
உடற்பயிற்சிக்கு முன் ஸ்நாக்ஸ்களை சாப்பிடும் போது, அது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சியின் போது சிறப்பாக உடற்பயிற்சி செய்யவும் முடியும்.
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் தினமும் உடற்பற்சியை செய்ய வேண்டும். உடற்பயிற்சியானது உடல் ஆரோக்கியத்திற்காக செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். உடற்பயிற்சி செய்யும் போது பலர் வெறும் வயிற்றில் செய்வார்கள். ஆனால் உடற்பயிற்சியை செய்வதற்கு என்று ஆற்றல் வேண்டும் அல்லவா? அந்த ஆற்றலை உணவுகளின் உதவியுடன் தானே பெற முடியும். அதற்காக உடற்பயிற்சிக்கு முன் வயிறு நிறைய சாப்பிட சொல்லவில்லை. உடலுக்கு ஆற்றலை வழங்கும் சில ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டலே போதும்.

அப்படி உடற்பயிற்சிக்கு முன் ஸ்நாக்ஸ்களை சாப்பிடும் போது, அது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உடற்பயிற்சியின் போது சிறப்பாக உடற்பயிற்சி செய்யவும் முடியும். இப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிட வேண்டிய சில ஸ்நாக்ஸ்களைக் காண்போம்.

வாழைப்பழ ஸ்மூத்தி
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஒரு டம்ளர் வாழைப்பழ ஸ்மூத்தி குடிப்பது நல்லது. இதில் பெக்டின் அல்லது எதிர்ப்பு திறன் கொண்ட ஸ்டார்ச் இருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும். மேலும் வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேட் உள்ளதால், இது உடற்பயிற்சியின் போது தேவையான ஆற்றலை வழங்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் சிக்கலான கார்போரைஹட்ரேட்டுன், குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளது. எனவே இதை உடற்பயிற்சிக்கு முன் உண்ணும் போது, உடலில் மெதுவாக ஆற்றலை வெளியிட்டு, நீண்ட நேரம் உடற்பயிற்சியில் சிறப்பாக ஈடுபட உதவும். எனவே உடற்பயிற்சிக்கு முன் வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுங்கள்.

வாழைப்பழம் மற்றும் ப்ளாக் காபி
ஒரு கப் ப்ளாக் காபியை உடற்பயிற்சி செய்யும் முன் குடித்தால், அது உடற்பயிற்சியின் போது கூடுதல் ஊக்கத்தை கொடுக்கும். இந்த பிரபலமான பானம் உடற்பயிற்சியின் போது, அதிக வலிமை, ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை வழங்குவதில் சிறந்தது. அத்துடன் ஒரு வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், உடற்பயிற்சியில் இன்னும் சிறப்பாக ஈடுபடலாம். ஏனெனில் வாழைப்பழத்தில் அதிகளவில் பொட்டாசியம் உள்ளது மற்றும் இது எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட.

இளநீர்
உடற்பயிற்சி செய்வதற்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இது உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கவும், உடற்பயிற்சியின் போது இழக்கப்படும் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்பவும் உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது உடற்பயிற்சியின் போது தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முழு தானிய பிரட் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய்
உடற்பயிற்சியின் போது உடலில் போதுமான ஆற்றல் இருந்தால் தான், உடற்பயிற்சியை நன்கு செய்ய முடியும். அப்படிப்பட்ட ஆற்றலை முழு தானிய பிரட் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் வழங்கும். எனவே இவற்றை ஜிம் செல்வதற்கு முன் சாப்பிடுங்கள். இதனால் அவற்றில் உள்ள நல்ல கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நல்ல எரிபொருளாக விளங்கி, உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.



Click it and Unblock the Notifications