40 வயதிற்கு மேல் தசை பயிற்சிகளை செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்!

குறிப்பாக 40 வயதிற்கு மேல் உடற்பயிற்சி செய்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சி செய்பவர்களாகவும், மெதுவான எடை பயிற்சியில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

எல்லா வயதினருக்கும் உடற்பயிற்சி எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதிலும் 40 வயதிற்கு மேல் உடற்பயிற்சி செய்யும் போது சில ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக 40 வயதிற்கு மேல் உடற்பயிற்சி செய்பவர்கள் வழக்கமான உடற்பயிற்சி செய்பவர்களாகவும், மெதுவான எடை பயிற்சியில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர்.

Muscle Training Over The Age Of 40? Do Not Commit These 4 Mistakes

இருப்பினும் ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ற படி சரியான உடற்பயிற்சியை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. 40 வயதிற்கு மேல் அதிகமான எடையை தூக்குவது உங்களுக்கு தசைகளை கிழிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான உடற்பயிற்சி தவறுகள் பிறகு ஆபத்தில் முடியலாம். எனவே இனி 40 வயதிற்கு மேல் இருப்பவர்கள் உடற்பயிற்சியின் போது கீழ்க்கண்ட நான்கு தவறுகளை செய்து விடாதீர்கள். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வார்ம் அப் செய்யுங்கள்

வார்ம் அப் செய்யுங்கள்

வார்ம் அப் என்பது உடற்பயிற்சியின் மிக முக்கியமான அம்சமாகும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உடம்புக்கு சில வார்ம் அப் உடற்பயிற்சி செய்யாமல் ஆரம்பிப்பது நல்லதல்ல. 40 வயதை அடைந்தவர்கள் தசை உடற்பயிற்சி செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் ஆரம்பிக்கும் முன் வார்ம் அப் செய்யாமல் செய்வது தவறானது. அதிலும் இந்த வார்ம் அப் உடற்பயிற்சி உங்கள் உடலை கஷ்டப்படுத்தாமல் இருக்க வேண்டும். உடம்பில் வியர்வை வழியும் படி நீங்கள் விரும்பியதை செய்யலாம். ஜாக்கிங் செய்தல், லேசான ஜாக்கிங் மேற்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.

போதுமான வலிமை

போதுமான வலிமை

உடற்பயிற்சி செய்ய கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் போதுமான வலிமை என்பது அவசியம். 20 வயதில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். ஆனால் 40 வயதை அடைந்தவர்களுக்கு கூடுதல் வலிமை தேவைப்படுகிறது. ஆனால் அதற்காக அதிகமான எடையை தூக்குவது, அதிகமான உடற்பயிற்சி செய்வது என்பது தவறானது. பெஞ்ச்பிரஸ் செய்யும் போது உங்களால் முடியாவிட்டால் இடையில் நிறுத்தி செயல்படுங்கள்.

உடல் உணர்தலை புறக்கணிக்காதீர்கள்

உடல் உணர்தலை புறக்கணிக்காதீர்கள்

ஜிம்மில் மற்றவர்கள் செயல்படுவதை நீங்கள் கவனிக்கலாம். ஆனால் அவர்களுடன் உங்களை ஒப்பிட்டு செயல்படாதீர்கள். ஒவ்வொரு உடல் அமைப்பும் வித்தியாசமானது. எனவே ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு இடைவெளி கொண்டு செயல்பட வேண்டும். அவர்கள் அதிகமான எடையை தூக்குகிறார்கள் என்று நீங்களும் அதையே செய்யக் கூடாது.

40 வயதிற்கு பிறகு உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று கூறுதல்

40 வயதிற்கு பிறகு உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று கூறுதல்

மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று வயதைப் பொருப்படுத்தாமல் செய்வது. நிறைய பேர் 40 வயதிற்கு மேல் தசையைப் பெறுவது அல்லது வலிமைப்படுத்துவது கடினம் என்கின்றனர். ஆனால் ஜிம்மில் உங்கள் வயதை பற்றி பொருப்படுத்தாமல் ஈடுபடலாம். உங்கள் வயதுக்கு ஏற்ப உடல் நலத்தைக் கவனித்துக் கொள்வதால் சில கடுமையான விளைவுகளை தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion