Latest Updates
-
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
மாதுளையை 'இப்படி' சாப்பிட்டா தொப்பை குறையுமாம்... அட இத்தன நாள் இது தெரியாம போச்சே...
மாதுளை அனைத்து பருவ காலங்களிலும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடியது. நீங்கள் அதிக பக்கவிளைவுகளின்றி உடல் எடையைக் குறைக்க விரும்பினால், மாதுளையை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அனைவருக்குமே சிக்கென்று அழகான உடலமைப்புடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும், அந்த ஆசையை அடைய விடாமல் தடுக்கின்றன. சொல்லப்போனால் தற்போது நிறைய பேர் பானை போன்ற தொப்பையை வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள். மேலும் அந்த தொப்பையைக் குறைக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொப்பை வந்துவிட்டால் அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். ஆயினும் கடுமையான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தொப்பையைக் குறைக்க முடியும்.

குறிப்பாக உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்க பல உணவுகள் உதவி புரிகின்றன. அவற்றில் ஒன்று தான் மாதுளை. இந்த மாதுளை அனைத்து பருவ காலங்களிலும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடியது. நீங்கள் அதிக பக்கவிளைவுகளின்றி உடல் எடையைக் குறைக்க விரும்பினால், மாதுளையை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சரி, மாதுளை எப்படி உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது மற்றும் உடல் எடையைக் குறைக்க மாதுளையை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இக்கட்டுரையில் இதுக்குறித்து தான் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எடையைக் குறைக்க மாதுளை உதவுமா?
மாதுளையில் எடை இழப்பில் முக்கிய பங்கை வகிக்கும் டயட்டரி நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. எனவே மாதுளையை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை வேகப்படுத்தி, எடை இழப்பிற்கு உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை அல்லது தொப்பையைக் குறைக்க விரும்பினால் மாதுளையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மாதுளை எப்படி எடை இழப்பிற்கு உதவுகிறது?
நார்ச்சத்துள்ள பழம்
மாதுளையில் எடை இழப்பிற்கு மற்றும் உடல் எடையைப் பராமரிக்க உதவும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. 100 கிராம் மாதுளையில் 4 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு வேண்டிய நார்ச்சத்தில் 16% ஆகும்.

பசியைக் கட்டுப்படுத்தும்
மாதுளையானது வயிற்றை நிரப்பி, ஒருவரது பசியைக் கட்டுப்படுத்தும். இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து தான் முக்கிய காரணமாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஆய்வுகளும், குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும் போது, அது உண்ணும் உணவின் அளவைக் குறைத்து, ஒருவரது உடல் எடை அதிகரிப்பதை தடுப்பதாக கூறுகின்றன.

எடை இழப்பிற்கு உதவும் பாலிஃபீனால்கள்
மாதுளையில் ஏராளமான அளவில் பாலிஃபீனால்கள் உள்ளன. இவை இயற்கையாகவே கொழுப்புக்களை கரைக்கக்கூடியவை. ஆய்வுகளின் படி, பாலிஃபீனால்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது எடை இழப்பிற்கு உதவுவதோடு, உடலில் கொழுப்புக்கள் தேங்குவதையும் தடுக்கின்றன.

கலோரி குறைவான பழம்
பொதுவாக எடையைக் குறைக்க வேண்டுமானால் கலோரி குறைவான உணவுகளை உண்ண வேண்டும். மாதுளையில் கலோரிகள் குறைவு. அதுவும் 100 கிராம் மாதுளையில் 83 கலோரிகளே உள்ளன. எனவே இந்த மாதுளையை தினசரி உணவில் சேர்த்து, உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வரும் போது, உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். முக்கியமாக உடல் பருமனுள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு மாதுளை ஒரு சிறந்த பழம்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம்
மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை ப்ரீ-ராடிக்கல்களை எதிர்ப்பதோடு, செல்களின் மீதான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆய்வுகளின் படி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை ஒருவர் தினமும் போதுமான அளவில் உட்கொள்ளும் போது, அது உடலில் மெட்டபாலிச அளவை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

உடல் எடையைக் குறைக்க மாதுளையை எப்படி உட்கொள்ள வேண்டும்?
மாதுளையை ஒருவர் மூன்று வழிகளில் தங்களின் தினசரி உணவில் சேர்க்கலாம். அதில் ஒரு கப் நற்பதமான மாதுளை விதைகளை மட்டும் சாப்பிடலாம் அல்லது மாதுளை விதைகளை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், மாதுளையைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடிக்கலாம். ஆனால் அந்த ஜூஸில் சர்க்கரை எதுவும் சேர்க்கக்கூடாது. சிறந்த பலனைப் பெற ஒரு நாளைக்கு 250 மிலி முதல் 300 மிலி மாதுளை ஜூஸைக் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications
