For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கார்போஹைட்ரேட் உணவுகள் என்னென்ன தெரியுமா?

மற்ற ஊட்டச்சத்துக்களைப் போலவே, உங்கள் உணவில் கார்ப்ஸையும் சேர்க்க வேண்டியது அவசியம். இதை முற்றிலுமாக விலக்குவது மலச்சிக்கல் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும்.

|

நீரிழிவு போன்ற நாட்பட்ட நோயால் நீங்கள் பாதிக்கப்படும்போது ஆரோக்கியமான உணவு தேர்வுகளை செய்வது மிக அவசியம். உங்கள் அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஊட்டச்சத்து அடர்த்தியான மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை சாப்பிட உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் என ஒரு நீண்ட பட்டியலே இங்கு உள்ளது.

Healthy sources of carbs that every diabetic patient must have

சில உணவுகள் அவர்களுக்கு நன்மை அளிக்கலாம். சில உணவுகள் அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவுடன், அவர்கள் முதலில் கார்போஹைட்ரேட் உணவுகளைதான் தவிர்ப்பார்கள். ஆனால், கார்பஸ் உணவுகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் சாப்பிட வேண்டிய கார்ப்ஸின் ஆரோக்கியமான உணவுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோயாளிக்கு கார்ப்ஸ் சாப்பிடலாம்

நீரிழிவு நோயாளிக்கு கார்ப்ஸ் சாப்பிடலாம்

நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட பின்னர் பெரும்பாலான மக்கள் தங்கள் உணவில் இருந்து நீக்குவது கார்ப்ஸ் உணவுகளைதான். ஏனென்றால், கார்ப்ஸ் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கருதப்படுவதில்லை. இருப்பினும், இந்த அறிக்கை முற்றிலும் உண்மை இல்லை. மற்ற ஊட்டச்சத்துக்களைப் போலவே, உங்கள் உணவில் கார்ப்ஸையும் சேர்க்க வேண்டியது அவசியம். இதை முற்றிலுமாக விலக்குவது மலச்சிக்கல் மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஆரோக்கியமற்ற கார்ப்ஸின் ஆதாரங்களை சில ஆரோக்கியமான விருப்பங்களுடன் மாற்றுவதுதான். உங்கள் வசதிக்காக, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் கொண்டிருக்க வேண்டிய ஆரோக்கியமான கார்ப் மூலங்கள் பற்றி இங்கு காணலாம்.

MOST READ: உங்க எடையை இந்த சிறிய அளவிற்கு குறைத்தால் நீங்க சர்க்கரை நோய் பற்றி கவலைப்படவே வேண்டாம்..!

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு. நார்ச்சத்து மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ், உங்கள் சர்க்கரையின் அளவை நீண்ட மற்றும் குறைந்த வேகத்தில் வைத்திருக்க முடியும். நீங்கள் எதை வேண்டுமானாலும் உப்பு அல்லது இனிப்பு ஓட்ஸ் சாப்பிடலாம். இது உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

பழங்கள்

பழங்கள்

பல நீரிழிவு நோயாளிகள் பழங்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். ஆனால் இது உண்மை இல்லை. பழங்களில் இயற்கையான சர்க்கரை உள்ளது மற்றும் கார்ப்ஸின் ஆரோக்கியமான மூலமாகும். தவிர, இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே பழங்களை ஒதுக்கிவிடாதீர்கள். ஆப்பிள், வாழைப்பழம், பெர்ரி மற்றும் திராட்சை போன்ற ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்வுசெய்யவேண்டும். ஆனால், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பருப்பு

பருப்பு

பருப்பு ஆரோக்கியமானது மற்றும் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல்வேறு வகையான வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. அவற்றில் சில அளவு கார்ப்ஸ் உள்ளன. ஆனால் அவை ஆரோக்கியமானவை மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை மட்டத்தில் எந்தவிதமான மோசமான விளைவையும் ஏற்படுத்தாது. நீரிழிவு நோயாளிகளிடையே பொதுவாகக் காணப்படும் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க பருப்பு வகைகள் உதவுகின்றன.

MOST READ: நீங்க ஃபாலோ பண்ணுற டயட்டில் இந்த உணவுகள மட்டும் சேர்த்தா போதும்.. எடை சீக்கிரமா குறையுமாம்...!

இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கு

வேர் காய்கறிகள் என்றாலே நம் மனதில் முதலில் தோன்றும் காய்கறி உருளைக்கிழங்கு தான். இதில் மாவுச்சத்து அதிகம். ஆனால் எல்லா ரூட் காய்கறிகளும் ஒன்றல்ல. சில ஆரோக்கியமானவை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் கேரட் போன்ற குறைவான கார்ப்ஸைக் கொண்டிருக்கின்றன. இனிப்பு உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இனிப்பு உருளைக்கிழங்கின் எண்ணிக்கையைப் பற்றி கவனமாக இருங்கள்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

உங்கள் ஆரோக்கியமற்ற சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பாஸ்தா, வெள்ளை அரிசி மற்றும் ரொட்டியை தவிர்த்தது முழு தானிய உணவுகளுக்கு மாறுங்கள். பார்லி, குயினோவா மற்றும் முழு தானிய ரொட்டி போன்ற முழு தானியங்கள் கார்போஹைட்ரேட்டுகளின் ஆரோக்கியமான ஆதாரங்கள். அவை ஆரோக்கியமான ஃபைபர், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களால் நிரம்பியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy sources of carbs that every diabetic patient must have

Here we are talking about the healthy sources of carbs that every diabetic patient must have.
Desktop Bottom Promotion