For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூளை எப்பவும் சுறுசுறுப்புடன் செயல்படணுமா? அப்ப இத படிச்சு ஃபாலோ பண்ணுங்க...

|

இன்றைய இயந்திர வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். ஆரோக்கியத்தை மறந்து, சம்பாத்தியத்தில் செலுத்தப்படும் கவனம் நிலைக்காது என்பதை எவரும் மறக்கக்கூடாது. சீரான ஆரோக்கியம், நிலையான செல்வத்திற்கு வழிவகுக்கும் என்பதை மறுப்பார் யாருமில்லை.

ஆரோக்கியம் என்பது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் தேவைப்படக்கூடிய ஒன்று. உடனடியாக உடல் எடையை குறைக்க நினைத்து பலர் மேற்கொள்ளக்கூடிய முறையற்ற உணவுப் பழக்கம் உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கும். எனவே, அதுப்போன்ற உணவுப்பழக்கத்திற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவில் கவனத்தை செலுத்தி, சிறந்த உணவுப்பழக்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பட்டினியில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்திடும்.

MOST READ: சிறுநீரகங்களில் உள்ள அழுக்கை வெளியேற்ற அடிக்கடி குடிக்க வேண்டிய ஜூஸ்கள்!

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றால், மைண்ட் டயட் தான். இந்த மைண்ட் டயட்டை பின்பற்றுவதன் மூலம் மன ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் மேம்பாடு இரண்டையுமே சிறப்பாக பெற்றிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைண்ட் டயட் என்றால் என்ன?

மைண்ட் டயட் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவு மற்றும் அது நம் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள் இடையேயான உறவு குறித்து புரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் விரும்புனர். அந்த வகையில் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளை சோதித்து, மைண்ட் டயட் என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.

* மைண்ட் டயட் என்பது டாஸ் (DASH) மற்றும் மத்திய தரைக்கடல் உணவின் கலவையாகும். இது முதுமை மற்றும் குறையும் மூளையின் செயல்பாட்டை தடுக்க உதவுகிறது.

* டாஸ் (DASH) மற்றும் மத்திய தரைக்கடல் உணவு இரண்டுமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவக்கூடிய சிறந்த உணவுகளாகும்.

* அல்சைமர் நோய்க்கு முக்கிய காரணமான பீட்டா-அமிலாய்ட் பிளேக் உருவாவதை மைண்ட் டயட் தடுக்கிறது. மேலும், இது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது.

மைண்ட் டயட்டில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

மைண்ட் டயட்டில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

இங்கே மைண்ட் டயட்டை மேற்கொள்ளும் போது சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகள்

நாளொன்றிற்கு எவ்வளவு பச்சை நிற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு சேர்த்துக் கொள்ளவும். பச்சை நிற காய்கறிகளில் மிகவும் சிறந்தது என்றால் கீரை, கேல், சமைத்த கீரை மற்றும் காய்கறி சாலட். பச்சை காய்கறிகளில் அதிகப்படியான ஆன்டி?ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை, தசை சிதைவு மற்றும் கண்புரை போன்றவை ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவிடும்.

நட்ஸ்

நட்ஸ்

வாரத்திற்கு 5 முறையாவது நட்ஸ், அதாவது பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவிடும்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள்

மைண்ட் டயட் பின்பற்றும் போது ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்றவற்றை வாரத்திற்கு 2 முறையாவது சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நாம் உண்ணும் உணவில் பெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையான நாள்பட்ட நோய்களுக்கான அறிகுறிகளை குறைத்திடலாம்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

தினந்தோறும் 3 முறையாவது முழு தானியங்களை சாப்பிட வேண்டும். திணை, ஓட்ஸ், முழு கோதுமை பாஸ்தா, முழு கோதுமை ப்ரட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

மீன்

மீன்

உங்கள் டயட்டில் கொழுப்பு நிறைந்த மீன்கள் அதாவது, மத்தி, டுனா, சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களை சேர்த்துக் கொள்ளவும். இதன்மூலம் உடலுக்கு ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைத்திடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை உபயோகப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மனஅழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, எலும்பு இழப்பு ஏற்படுவதை தடுத்திட உதவுவதோடு, கொழுப்பின் அளவையும் சீர்ப்படுத்த உதவும். சாதாரண சமையல் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயில் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸ், பயறு வகைகள் மற்றும் சோயாவில் ஆன்டிஆன்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமல்லாது, இவற்றிலுள்ள புரதச்சத்துக்கள் கொழுப்பை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கவும் உதவும்.

கோழி

கோழி

கோழி அல்லது வான்கோழியை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பை பெற்றிடலாம். தசைகளை பராமரிக்கவும், உடலுக்கு வலு சேர்க்கவும் இது பெரிதும் உதவும்.

ஒயின்

ஒயின்

ஆய்வுகளின் மூலம் ரெட் மற்றும் ஒயிட் ஒயின் இரண்டுமே அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. பப்மெட் சென்ட்ரல் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், ரெட் ஒயினானது ஒருவருக்கு அல்சைமர் ஏற்படாமல் பாதுகாத்திட உதவுகிறது என தெரிகிறது.

மைண்ட் டயட்டில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:

மைண்ட் டயட்டில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்:

* சீஸ்

* வெண்ணெய்

* சிவப்பு இறைச்சி

* எண்ணெயில் பொறித்த உணவுகள்

* மாவுப்பண்டம் மற்றும் இனிப்புகள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உடலில் சேரக்கூடிய தேவையற்ற ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடிய நிறைவுற்ற கொழுப்பு மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு சேருவதை தடுத்திட உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Everything You Need To Know About The MIND Diet

Looking for a healthy addition to your diet? MIND Diet is the one to choose. Read on to know more…
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more