For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்ருடை நீங்க இப்படி செஞ்சி சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமாவே குறைஞ்சிடுமாம்...!

உங்கள் உடலில் நீர்ச்சத்து சீரான அளவு இருந்தாலே உங்கள் உடலில், உடல் உறுப்புகளில் எந்த விதமான பாதிப்புகளும் வராது. இதற்கு நீங்கள் அன்றாடம் தேவையான அளவு காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

|

டீடாக்ஸ் நீரின் வேலை உடலை சுத்தப்படுத்துவதோடு உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் அகற்றுவதாகும். இந்த செயல்முறை தானாகவே கூடுதல் கிலோவை இழக்க உதவுகிறது. ஏனென்றால் உடலில் சேமிக்கப்படும் கூடுதல் கொழுப்பு நச்சுகளைத் தவிர வேறொன்றுமில்லை, இது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தின் விளைவாகும். உங்கள் உடல் எடையை குறைக்கவும், செரிமான கோளாறுகளை சரி செய்யவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்களுக்கான சிறந்த தீர்வு இந்த நச்சுக்களை நீக்கும் அற்புத பலன் கொண்ட டீடாக்ஸ் வாட்டர்தான்.

Beetroot Detox Water is effective in weight loss

உங்கள் உடலில் நீர்ச்சத்து சீரான அளவு இருந்தாலே உங்கள் உடலில், உடல் உறுப்புகளில் எந்த விதமான பாதிப்புகளும் வராது. இதற்கு நீங்கள் அன்றாடம் தேவையான அளவு காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீர்ச்சத்து மட்டும் தான் உடலில் நச்சுக்கள் மற்றும் கொழுப்பை கரைக்க உதவும் சிறந்த மூலப்பொருள். இக்கட்டுரையில், வறுத்த பீட்ரூட் மூலம் தயாரிக்கப்படும் எளிய மற்றும் பயனுள்ள டீடாக்ஸ் நீரைப் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

  • 3 கப் தண்ணீர்
  • சிறிதளவு புதினா இலைகள்
  • 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்
  • 1/2 எலுமிச்சை பழம்
  • 1/2 வறுத்த பீட்ரூட்
  • MOST READ: உங்க அப்பா சர்க்கரை நோயாளியா? நீண்ட காலம் அவர் ஆரோக்கியமா இருக்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

    பீட்ரூட் டீடாக்ஸ் வாட்டர் செய்வது எப்படி?

    பீட்ரூட் டீடாக்ஸ் வாட்டர் செய்வது எப்படி?

    ஒரு ஷேக்கரை எடுத்து, தண்ணீர், புதினா இலைகள், ஆப்பிள் சைடர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பீட்ரூட் சேர்க்கவும். நன்றாக குலுக்கி, 5-10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இப்போது சுவையான பீட்ரூட் டீடாக்ஸ் வாட்டர் குடிக்கவும். வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

    எடையை குறைக்க உதவுகிறது

    எடையை குறைக்க உதவுகிறது

    நீர் உள்ளடக்கம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள இந்த பருவகால பானம் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறது. இது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவுகிறது. ஜப்பானிய ஆய்வின்படி, வெற்று வயிற்றில் உங்கள் உடலில் 1 அல்லது 2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

    கொழுப்பை குறைக்கிறது

    கொழுப்பை குறைக்கிறது

    இந்த பானம் உடலில் உள்ள கொழுப்பு சதவீதத்தை குறைக்கிறது. வயிற்று கொழுப்பை இழக்கச் செய்கிறது மற்றும் இரத்த ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதினா இந்த டீடாக்ஸ் தண்ணீருக்கு புத்துணர்ச்சியூட்டும் நறுமணத்தை அளிக்கும் அதே வேளையில், எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் கலோரிகளை எரிக்கிறது மற்றும் குறைந்த கொழுப்பை சேமிக்கிறது.

    MOST READ: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'இந்த' சத்து நிறைந்த உணவு மிக முக்கியமாம்.. ஏன் தெரியுமா?

    செரிமான பிரச்சனை

    செரிமான பிரச்சனை

    இந்த நீரை குடிப்பது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். இது உங்கள் வயிறை சுத்தப்படுத்துவதுடன் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது. தினமும் இந்த டீடாக்ஸ் நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குவது நல்லது.

    இதய ஆரோக்கியம்

    இதய ஆரோக்கியம்

    இது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை தக்கவைப்பதுடன் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களுடன் சண்டையிடுவதுடன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beetroot Detox Water is effective in weight loss

Here we are talking about the Beetroot Detox Water is effective in weight loss.
Story first published: Monday, June 21, 2021, 17:09 [IST]
Desktop Bottom Promotion