Just In
- 56 min ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 2 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
- 3 hrs ago
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் விளக்குகள் ஏற்றுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
- 4 hrs ago
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
Don't Miss
- News
தமிழில் பெயர்ப்பலகை.. அரசாணையை மிகத் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.. ராமதாஸ் கோரிக்கை
- Movies
இமான் காட்டில் பெரிய நடிகர்கள் வரவு.. செம மழை.. இசை மழையும் கூட
- Automobiles
ரெனோ ட்ரைபர் காரில் விரைவில் புதிய டர்போ எஞ்சின்... மாருதி எர்டிகாவுக்கு புது நெருக்கடி
- Finance
ஆயிரக் கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தில் Audi..!
- Education
வேலை, வேலை, வேலை.! ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை!!
- Sports
ISL 2019 - 20 : செம கோல் அடித்த கோவா.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றி!
- Technology
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எப்படி டயட் இருந்தாலும் தொப்பை குறையலயா? நீங்க பண்ற இந்த 6 தப்புதான் காரணம்
ஒவ்வொருவருக்கும் தங்கள் உடல் எடையைக் குறைப்பது என்பது ஒரு சவாலான காரியம். அதிலும் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். உடல் பகுதிகளில் கரைப்பதற்கு கடினமான கொழுப்புகள் உள்ள இடமாக அறியப்படுவது வயிற்றுப் பகுதி.
எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் நபர்களுக்கும் அதாவது, சரியான உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்கள், போன்றவர்களுக்கும் வயிற்றுக் கொழுப்பை எரிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுகிறது.

வயிற்றுக் கொழுப்பு
ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வெவ்வேறானது. அவரவர் மரபணு படி அவரவர் உடல் அமைப்பு தீர்மானிக்கப்பட்டாலும் அவரவர் உடலில் சேரும் கொழுப்பிற்கு காரணம் மரபணு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உடலில் கொழுப்பு சேர்வதற்கு முதன்மைக் காரணம், நாம் உட்கொள்ளும் உணவு, நாம் பிறந்த நாள் முதல் ஒவ்வொரு பருவத்திலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு, மற்றும் நாம் செய்யும் உடல் செயல்பாடுகளின் அளவு ஆகியவை உடலின் கொழுப்பு அளவைத் தீர்மானிக்கிறது.
MOST READ: உங்க ஆள்கிட்ட கேவலமா சண்டை போட்டீங்களா? இத மட்டும் செய்ங்க... உடனே சமாதானமாகிடுவாங்க

ஏன் குறைவதில்லை?
ஆனால் எந்த வித பயிற்சி செய்தாலும் உடல் கொழுப்பைக் குறைக்க முடியாத நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் அவர்களால் எவ்வளவு முயற்சித்தாலும் வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க முடியவில்லை?
நமது உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சதைப் பகுதிக்கு அடியில் சேமித்து வைக்கப்படுகிறது, மற்றும் அடிவயிற்றின் முதன்மை உறுப்புகளைச் சுற்றி சேமித்து வைக்கப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியைச் சுற்றி இருக்கும் அதிகரித்த அளவு கொழுப்பு பல்வேறு உடல் பாதிப்புகளைத் தருகிறது என்ற கூற்று உண்மையே..

என்ன தான் செய்வது?
உடலின் பிற பகுதிகளான பிட்டப் பகுதி, தொடை போன்றவற்றில் சேரும் கொழுப்புகளின் தாக்கத்தை விட வயிற்றுப் பகுதியில் படியும் கொழுப்பின் தாக்கம் உடல் நிலையை அதிகம் பாதிக்கச் செய்கின்றன.
எவ்வளவு முயற்சித்தும் உங்கள் உடல் எடை மற்றும் வயிற்றுக் கொழுப்பு குறையாமல் இருக்க சில காரணங்கள் உள்ளது. இந்த பதிவைப் படிப்பதன் மூலம் அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.

போதுமான அளவு தூக்கம் இல்லாமை
தூக்கத்தில் குறைபாடு, என்பது சில தீவிர விளைவுகளை உண்டாக்குகிறது, குறிப்பாக , நீங்கள் எடை குறைப்பை மேற்கொள்ள விரும்பினால், போதுமான அளவு தூக்கம் தேவை. தூக்கத்தில் குறைபாடு, அல்லது மிகக் குறைந்த அளவு தூக்கம் போன்றவை க்ரேலின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது. க்ரேலின் என்பது பசியுணர்வைத் தூண்டும் ஒரு ஹார்மோன் ஆகும்.

கருப்பையில் நீர்க்கட்டிகள் இருக்கலாம்
கருப்பையில் நீர்க்கட்டிகளுக்கு காரணமான டெஸ்ட்டோஸ்டீரோன் அளவு அதிகரித்து காணப்படுவதால், உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம். இதனைக் குறைப்பது கடினம். திடீரென்று உங்கள் உடல் எடை அதிகரித்து காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதிகமான மனஅழுத்தம் இருக்கலாம்
வயிற்றுக் கொழுப்பு அதிகரித்து, அவற்றைக் குறைக்க முடியாமல் இருப்பதற்கு முதன்மைக் காரணமாக நம்பப்படுவது மன அழுத்தம். வேலை பார்க்கும் இடத்தில், உறவுகள் மத்தியில், குடும்பத்தில் அல்லது வேறு காரணமாக மனதில் உண்டாகும் அழுத்தம் காரணமாக, கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இந்த மன அழுத்த ஹார்மோன் வயிற்றுக் கொழுப்பு என்று அறியப்படும் மைய கொழுப்பு திசுக்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

அதிக உப்பு சேர்த்துக் கொள்வது
நம்மில் பலர், தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவு உப்பை விட அதிக அளவு பயன்படுத்துவதாக அறியப்படுகிறது. அதிகரித்த அளவு உப்பின் காரணமாக, இரத்த ஓட்டத்தில் அதிக நீர் சேர்ந்து சருமத்தில் பரவி, நம்மை குண்டாகக் காட்டுகிறது. இதற்குக் காரணம் உப்பில் உள்ள சோடியம் சத்தாகும்.
MOST READ: காளை மாட்டாடோ விந்துவை தலைல தேய்ச்சா எப்பேர்ப்பட்ட வழுக்கையிலும் முடி வளருமாம்...

சரியான உடற்பயிற்சி இன்மை
பொதுவாக நாம் அனைவரும் ஒரே விதமான உடற்பயிற்சியை தினமும் செய்து வருகிறோம். தினமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வோரு மாதமும் ஒரே பயிற்சியை செய்வதால் என்ன ஆகும்? நாம் செய்யும் பொதுவான உடற்பயிற்சி இதயம் தொடர்புடையதாக இருக்கும் - நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் போன்றவை. தொடக்கத்தில் இது நன்மையைச் செய்யும். இதனால் உங்கள் உடல் எடை குறையும். அடுத்த சில நாட்களில், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் இந்த மாற்றத்திற்கு பழகி, எடை குறைப்பதை நிறுத்தி விடும். ஆகவே இடைவெளி விட்டு பயிற்சி செய்வதால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதயத் துடிப்பும் அதிகரிக்கும், தசைகளும் வலிமையடையும்.