For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...

|

'ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள், நீங்கள் மருத்துவரிடம் செல்வதை விலக்கி வைக்கிறது!' இந்த வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாதது என்னவென்றால், ஆப்பிள்களால் உடல் எடை அதிகரிப்பைக் குறைக்கக் கூட முடியும்.

நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஆப்பிள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு சிறந்த பழமாகும். ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிளில் 4 கிராம் ஃபைபர் உள்ளது, இது பெண்களுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட ஃபைபர் உட்கொள்ளலில் 16 சதவீதமும் ஆண்களுக்கு 11 சதவீதமும் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் எனர்ஜி பார்கள்

ஆப்பிள் எனர்ஜி பார்கள்

இந்த ஆப்பிள் எனர்ஜி பார், ஓட்ஸ், பாதாம் வெண்ணெய் மற்றும் ப்ரெஷ் ஆப்பிள் ஆகியவற்றால் நிறைந்தது. ஃபைபர் நிறைந்த இந்த எனர்ஜி பார் அனைத்து வயதினருக்கும் நல்லது.

தேவையான பொருட்கள்

 • 2 கப் ஓட்ஸ்
 • 1/4 கப் கப் கிரவுண்ட் ஆளி விதை
 • 3/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை
 • 1/2 கப் பாதாம் வெண்ணெய்
 • 1/4 கப் பிளஸ் 1 தேக்கரண்டி தேன்
 • 1 டீஸ்பூன் வெண்ணிலா சாறு
 • 1 சிட்டிகை உப்பு
 • 1 கப் அரைத்த ஆப்பிள்

இதை எப்படிச் செய்வது

ஓட்ஸ், ஆளி விதை, இலவங்கப்பட்டை ஆகியவற்றை ஒரு பெரிய கிண்ணத்தில் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில், பாதாம் வெண்ணெய், தேன், வெண்ணிலா, மற்றும் ஒரு சிட்டிகை உப்பு போன்ற அனைத்துத் திரவ பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும். இந்த திரவக் கரைசலை ஓட்ஸ் கலவையின் மீது ஊற்றி எல்லாவற்றையும் நன்றாகக் கிளறவும்.

இப்போது அரைத்த ஆப்பிளை சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் கையில் ஒரு சிறிய அளவு கலவையை எடுத்து ஒரு சிறிய வட்டப் பந்துகளாக மாற்றவும். நீங்கள் விரும்பும் எந்த வடிவத்தையும் கொடுக்கலாம். அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும்.

MOST READ: கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார்? அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு?

ஆப்பிள் சாலட்

ஆப்பிள் சாலட்

இந்த ரெசிபியில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. ஆப்பிள் சாலட் ஒரு உபயோகத்திற்கு 22 கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது மற்றும் உடல் எடையை குறைக்க இது மிகச்சரியானது.

தேவையான பொருட்கள்:

 • 2 கப் கீரை
 • 1/2 கப் மாதுளை விதைகள்
 • 1 வெட்டப்பட்ட ஆப்பிள்
 • 1/2 கப் சீஸ்
 • 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்,
 • 2 தேக்கரண்டி தேன்
 • 1 சிட்டிகை கருப்பு மிளகு

இதை எப்படிச் செய்வது

அனைத்துப் பொருட்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்க்கவும் . இப்போது ஒரு கரண்டியால் நன்றாக கலந்து அதை உபயோகப்படுத்தலாம் .

பாதாம் வெண்ணெய் கொண்ட ஆப்பிள்கள்

பாதாம் வெண்ணெய் கொண்ட ஆப்பிள்கள்

ஆப்பிள் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மிகவும் ஆரோக்கியமான கலவையாகும். வேர்க்கடலை வெண்ணெய் அதிக கலோரிகள், கொழுப்பு சத்தைக் கொண்டிருந்தாலும் குறைந்த அளவு சர்க்கரையுடன் இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய் தேர்ந்தெடுக்கும் வரை நீங்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை .

தேவையான பொருட்கள்:

 • 2 வெட்டப்பட்ட ஆப்பிள்கள்
 • 1/4 கப் இயற்கையான சூடான வேர்க்கடலை வெண்ணெய்
 • 2 டீஸ்பூன் கிரானோலா
 • 1 டீஸ்பூன் உலர்ந்த கிரான்பெர்ரி

இதை எப்படிச் செய்வது

ஒரு தட்டை எடுத்து, அதன் மீது ஆப்பிள்களை வைத்து அதன் மேல் வெண்ணெய், கிரானோலா, கிரான்பெர்ரி ஆகியவற்றை வைக்கவும். இந்த டிஷ் தயாரிக்க எளிதானது மற்றும் வேகமாக உங்கள் வயிற்றை நிரப்புகிறது.

ஆப்பிள் சிப்ஸ்

ஆப்பிள் சிப்ஸ்

முழு குடும்பத்திற்கும் ஒரு ஆரோக்கியமான தின்பண்டம் இந்த ஆப்பிள் சிப்ஸ் . இது எளிதானது மற்றும் நிறைய கார்ப்ஸைக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை விட மிகவும் சிறந்தது.

தேவையான பொருட்கள்

* 4 ஆப்பிள்கள், மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்டவை

* 1-2 தேக்கரண்டி. அரைத்த பட்டை

* சமையல் ஸ்பிரே

இதை எப்படிச் செய்வது

உங்கள் ஓவென்- ஐ 200 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சூடுபடுத்தவும். வெட்டப்பட்ட ஆப்பிள்களை ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு இலவங்கப்பட்டை தூளை மேலே பூசவும். பேக்கிங் தாளில், சமையல் தெளிப்பு போட்டு, ஆப்பிள்களை pan -ல் வைக்கவும். ஆப்பிள் சிப்ஸ் வறண்டு நன்கு மென்மையாக இருக்கும் வரை பேக் செய்யவும்.

MOST READ: 5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...

வறுத்த ஆப்பிள்கள்

வறுத்த ஆப்பிள்கள்

எளிதான, மனம் நிறைந்த மற்றும் ஆரோக்கியமான, இந்த சாலட் மைண்ட்லெஸ் சிற்றுண்டியைத் தவிர்ப்பதற்காக உணவு இடையில் இருப்பது மிகச்சரியானது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்கிறது.

தேவையான பொருட்கள்

 • 1 நடுத்தரமாக நறுக்கப்பட்ட பட்டர்நட் ஸ்குவாஷ்
 • 1 கப் ப்ரெஷ் கிரான்பெர்ரி
 • 1 நறுக்கிய ஆப்பிள்
 • 1 நடுத்தரமாக நறுக்கிய வெங்காயம்
 • 2 தேக்கரண்டி கூடுதல் விர்ஜின் ஆலிவ் எண்ணெய்
 • 1/2 டீஸ்பூன் கறி தூள்
 • 1 சிட்டிகை உப்பு மற்றும் கருப்பு மிளகு

அதை எப்படிச் செய்வது

உங்கள் ஓவென்- ஐ 400 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் சூடாக்கவும். அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். இப்போது எல்லாவற்றையும் பேக்கிங் தாளில் பரப்பி ஓவெனுக்குள் வைக்கவும். 45 நிமிடங்கள் வறுக்கவும்.சமையல் நேரத்தின் பாதியிலேயே மெதுவாக கிளறி, காய்கறிகளை நன்றாக பழுப்பு நிறமாகும் வரை வறுக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Smart Ways To Have An apple For Weight Loss

We all know that 'an apple a day, keeps the doctor away!' but what most people don't know is that apples can even keep weight gain at bay. Full of fiber, nutrients, and vitamins, apple is an excellent fruit for those trying to shed kilos.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more