For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யோகா, வாக்கிங் - ரெண்டுல எது பெஸ்ட்?... யார் எதை செய்யலாம்?...

யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. ஆனால் இதில் எது சிறந்தது.

|

நமது உடலை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. உடல் ஆரோக்கியம் மூலமாக உடலை நோயின்றி வைத்துக் கொள்ள முடியும். இதனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். மக்கள் பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றனர்.

health benefits of yoga in tamil

Image Courtesy

பேலேட்ஸ், ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம் செல்வது என்று சிலர் சிலவகை உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். சிலர் விளையாட்டு மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்கின்றனர். சிலர் நடைபயிற்சி, யோகா என்று பயிற்சிகள் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. யோகா மூலமாகவும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இது ஒரு கடினமான கேள்விதான். ஆனால் இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

யோகா மற்றும் நடைபயிற்சி :

யோகா மற்றும் நடைபயிற்சி :

யோகா மற்றும் நடைபயிற்சி , இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாகும். இவை, உங்கள் உடல் எடையை குறைக்கவும், எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது. நீரிழிவை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. ஆனால் இவை இரண்டையும் நிலையாக ஒப்பிடும்போது, நடைபயிற்சியை விட சிறந்ததாக யோகா கருதப்படுகிறது. ஒரு மணி நரம் நடைபயிற்சி செய்வதால் உடலில் 242 கலோரிகள் எரிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஒரு மணி நேரம் யோகா செய்வதால் 340 கலோரிகள் எரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஆகவே, எடை மேலாண்மை மற்றும் நீரிழிவு கட்டுப்பாட்டில், நடைபயிற்சியை விட யோகா சிறந்தது என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இதனை பற்றிய உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்த இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

image courtesy

யோகா, நடைபயிற்சியுடன் ஒப்பிடும்போது உங்கள் மனநிலை உயர்த்தும் என்று அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. மனிதர்களில் உள்ள செரோடோனின் உற்பத்தி மற்றும் சுரப்புகளை கட்டுப்படுத்துவது மூளையில் உள்ள GABA அளவு. செரோடொனின் அளவு குறைவது, மன அழுத்தம் , மனச்சோர்வு, பதட்டம், மனநிலைக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கான முக்கிய காரணியாகும். யோகா மூளையை அமைதி படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் மூளையில் GABA அளவு அதிகரிக்கிறது. GABA அளவு அதிகரிப்பதால் செரோடொனின் சுரப்பதும் அதிகரிக்கப்படுகிறது. நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போதும் இதே நிலை உண்டாகிறது. ஆனால் யோகா செய்யும்போது உங்கள் மனநிலை உயர்வு n=19 என்ற நிலையில் அதிகரிக்கிறது. நடைபயிற்சியின்போது மனநிலை உயர்வு n=15 என்ற நிலையில் உள்ளது.

யோகா

யோகா

யோகா, உடல் மற்றும் மனநலத்திற்கு சிறந்தது. நடைபயிற்சி என்பது ஒரு வகையான உடற்பயிற்சி மட்டுமே. ஆனால் இது உடல் மற்றும் மனநலத்திற்கு நன்மை புரிகிறது. ஆனால் யோகா செய்வதன் மூலம், ஆன்மீக ரீதியாகவும் நன்மை கிடைக்கிறது. நல்ல வழியில் நடக்க வேண்டும் என்ற உணர்வைத் தருவது யோகா. பதட்டம் மற்றும் கோபத்தை குறைக்க உதவுவது யோகா. ஆன்மீக யோகாசனம் , உங்கள் சுவாசத்தை மேம்படுத்துகிறது. யோகாவை பயிற்சி செய்வதால் உங்கள் ஐம்புலன்கள் (நுகர்தல், தொடுதல், கேட்டல், பார்த்தல் மற்றும் உணர்தல்) போன்றவற்றின் மீது ஒரு சிறந்த கட்டுப்பாடு தோன்றுகிறது.

மூளை பலம்

மூளை பலம்

யோகா மனநல விழிப்புணர்வை அதிகரிக்கிறது. உங்கள் மனதில் வரும் சீரற்ற மற்றும் தேவையற்ற எண்ண ஓட்டத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் மனதில் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கி எதிர்மறை எண்ணங்கள் குறையும். இதனால் உங்கள் தினசரி வாழ்வில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். யோகா என்பது தியானம் மற்றும் உடற்பயிற்சியின் ஒருங்கிணைப்பாகும். வெவ்வேறு தோற்றங்களில் உடலை சமநிலைப்படுத்தும் போது உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கான ஒரு ஆன்மீக வழிமுறையாகும். இதன் விளைவாக, உங்கள் மூளை வலுவாகவும் கூர்மையாகவும் மாறும்.

ரத்த சர்க்கரை

ரத்த சர்க்கரை

பலர் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இது மிகவும் உண்மை. மற்றும் நடைபயிற்சியால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. நடைபயிற்சி இரத்த சர்க்கரை அளவில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த செயல்பாடு நடைபயிற்சியை விட யோகாவில் அதிகம உண்டு. இரத்த சர்க்கரை அளவை வளர்சிதை மாற்றத்தின் மூலம் குறைப்பது யோகாவில் இன்னும் சிறப்பாக செயலாற்றல் பெரும். நீரிழிவு நோயாளிகளுக்காகவே சில சிறப்பு யோகா பயிற்சிகள் உண்டு. இதனை இவர்கள் மேற்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு எளிதில் குறைகிறது.

ஆசனங்கள்

ஆசனங்கள்

மண்டுகாசனா, யோக முத்ராசனா போன்ற வகை ஆசனங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் அதிக நன்மையை செய்கின்றன. இந்த வகை ஆசனங்களை பயிற்சி செய்வதால் உடலில் இன்சுலின் சுரப்பது அதிகரிக்கிறது. மூளை, கணையத்திற்கு இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்க ஆணையிடுகிறது. இன்சுலின் ஒரு இயற்கை ஹார்மோன் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

image courtesy

மன அழுத்தத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பது நடைபயிற்சி அல்லது யோகா, இந்த இரண்டில் எது என்பதை இப்போது பார்க்கலாம். மன நிலையை உயர்த்தி, அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி உதவுகிறது. ஆனால் யோகா பயிற்சி செய்வதால், உங்கள் மன நிலையில் உயர்வு ஏற்பட்டு, கவனமும் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் நன்னடத்தை அதிகரிக்கிறது. அழுத்தம் உண்டான தசைகள், திசுக்கள் மற்றும் மூளைக்கு நெகிழ்வைத் தரும் தன்மை யோகாவிற்கு உண்டு. யோகாவை தினமும் பயிற்சி செய்வதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இதனால் தூக்க கோளாறுகள் நீக்கப்பட்டு தூக்கம் மேம்படும். ஆகவே, யோகாவின் மூலம் ஒட்டுமொத்த மனித நல் வாழ்க்கை மேம்படும்.

சரும அழகு

சரும அழகு

யோகா, உங்கள் அழகை நிர்வகிக்கவும் உதவுகிறது. அழகாகவும் இளமையாகவும் இருக்க விரும்பினால் தினமும் தொடர்ந்து யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். உங்கள் சருமத்தை மினுமினுப்பாகவும் துடிப்பாகவும் வைக்க யோகா உதவுகிறது. மூளையில் இயல்பான இரசாயன சமநிலையை நிலைநிறுத்த யோகாசனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதன் காரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் வழங்குதல் அதிகரிக்கப்படும். ஆக்சிஜன் அதிகம் உள்ள இரத்தம், அணுக்களையும் திசுக்களையும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். யோகா பயிற்சி தொடர்ந்து செய்து வருவதால், சருமத்தின் மேல்புறம் உள்ள கொலோஜென் நார்கள் வலிமையாகும். இதனால் உங்கள் சருமம் களங்கமில்லாமல் பொலிவாக இருக்கும். ஆகவே யோகா பயிற்சியால் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

இப்போது யோகா மற்றும் நடைபயிற்சியில் எது சிறந்தது என்பது பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும். நடைபயிற்சி, உங்கள் உடல் மற்றும் மன நல ஆரோக்கியத்தை அதிகரித்தாலும், யோகவே சிறந்த விளைவுகளைத் தருகிறது. இதனால் நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. நடைபயிற்சியுடன் யோகாவையும் இணைத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனால் இந்த இரண்டின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். எல்லா வயதினருக்கும் இந்த இரண்டு பயிற்சிகளும் ஏற்புடையது. ஜிம் சென்று பயிற்சிகள் செய்வது மிகவும் விலை உயர்ந்த பயிற்சியாகும் . இதனை விட இவை இரண்டும் அதிக பலன் தருபவையாகும். ஆனால், இந்த இரண்டில் எது சிறப்பானது என்று தேர்ந்தெடுத்தால் அது யோகா தான் . யோகாவின் மூலம் சிறப்பான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yoga Vs Walking – What is the Difference, Which is Better?

Yoga and walking are both good for your health. They help you lose weight and manage your weight. but which is better?
Story first published: Saturday, July 21, 2018, 16:46 [IST]
Desktop Bottom Promotion