Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
ஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா...?
உலகில் ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு உடல் அமைப்புடனும், உளவியல் தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு நாட்டினரின் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும். வேறு சில நாட்டினரின் உடல் அமைப்பு மிகவும் கடினமாக இருக்கும். சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையாகவும் இருப்பார்கள். ஆதலால், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தன்மை உள்ளது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு புவியியல் ரீதியான காரணம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவர்கள் கடைபிடித்து வருகின்ற சில உணவு முறையும், ஆரோக்கிய முறையும் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அந்த வகையில் ஜப்பானியர்களின் ஆரோக்கியத்தையும், புத்தி கூர்மையையும் பார்த்து பல நாடுகள் செய்த ஆய்வில் சில அற்புதமான விடைகள் கிடைத்தது. அவை என்னென்ன என்பதை இனி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

ஜப்பானின் கலாசாரம் எப்படி..?
மற்ற நாட்டு மக்களை போன்றே ஜப்பானியர்களும் தங்களது பண்பாட்டையும் கலாசாரத்தையும் பெரிதும் மதிப்பார்களாம். அவர்களின் முன்னோர்களின் வழியே முதன்மையானதாக மக்கள் போற்றி வணங்குவர். குறிப்பாக அவர்களின் மருத்துவ முறை மற்றும் உணவு முறையே மிகவும் பிரசித்தி பெற்றதாம்.

ஜப்பானிய வைத்தியம் தெரியுமா..?
ஜப்பானியர்கள் இவ்வளவு இளமையாகவும், கச்சிதமான உடல் அமைப்புடனும் இருக்க "ஜப்பானிய வைத்தியம்" தான் காரணமாம். இது ஒன்னும் மிக கடினமான வைத்திய முறை இல்லை. இந்த உலகில் இதை விட எளிய வைத்திய முறை இருக்கவே முடியாது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

விஞ்ஞானிகளின் கருத்து என்ன..?
இந்த ஜப்பானிய முறை மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாம். அதாவது இது நீரை கொண்டு செய்யும் ஒரு வைத்திய முறையாகும். குறிப்பாக தினமும் 4 கிளாஸ் நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தாலே நீங்களும் ஜப்பானியர்களை போல அதிக ஆற்றலுடனும் கச்சிதமான உடல் எடையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வெறும் 4 கிளாஸ் நீரா..?
உண்மையில் இது நிரூபணம் ஆக்கப்பட்ட ஜப்பானிய வைத்தியமாகும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பே வெறும் 4 கிளாஸ் நீரை குடித்தால் உடலில் அற்புதமான மாயாஜாலங்கள் நாடக்கும். இவ்வாறு செய்வதால், எந்நாளும் உங்களுக்கு பொற்காலமாக மாறி விடும்.

உடல் எடை குறைப்பு...
தினமும் 4 கிளாஸ் நீரை வெறும் வயிற்றில் குடிப்பதே ஜப்பானியர்களின் இளமைக்கும், அழகிய உடல் அமைப்பிற்கும் முதன்மையான காரணம். குறிப்பாக நீர் குடித்த 45 நிமிடம் வரை எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாதாம். நீர் குடித்த பிறகு பற்களை மட்டும் துலக்கி கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் முதலாக உடல் எடை குறைய தொடங்கும்.

சிறுநீரக பிரச்சினைக்கு முற்றுபுள்ளி..!
இதே போன்று தொடர்ந்து காலையில் 4 கிளாஸ் நீரை குடித்து வருவதால் வேறொரு அற்புதம் நடக்கும். அதாவது சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படாமல் இந்த் ஜப்பானிய முறை தடுக்கும். அத்துடன் சிறுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் விரைவில் குணமாகும்.

மலச்சிக்கலா..?
மலசிக்கல் பிரச்சினையால் அவதிப்படுவோருக்கு இந்த ஜப்பானிய தெரபி சிறந்த தீர்வாகும். அத்துடன் அஜீரண கோளாறுகள், செரிமான பிரச்சினையால் பாதிக்கபட்டுள்ளவர்கள் காலை வேளையில் 4 கிளாஸ் நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே குணமாகி விடும்.

நாட்கள் கணக்கு...!
இந்த ஜப்பானிய முறைக்கென்றே ஒரு தனி கணக்கு உள்ளது. இந்த முறையை பின்பற்றி வருவோருக்கு நாட்கணக்கில் நோய்கள் குணமாகுமாம். தொடர்ந்து 10 நாட்கள் இந்த முறையை கடைபிடித்தால் வயிற்று கோளாறுகள், மலசிக்கல் குணமாகும். 30 நாட்கள் வெறும் வயிற்றில் நீரை குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம் குறையும். இறுதியாக 90 நாட்கள் இந்த முறையை கடைபிடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.

இதய நோயா..?
இதய நோய்கள் உள்ளவர்களுக்கு இந்த ஜப்பானிய முறை அருமையான தீர்வாகும். குறிப்பாக இதனை தொடர்ந்து செய்து வருவதால் ஆயுள் காலம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், உடல் வலிகள், தலை வலிகள் போன்றவையும் குணமாகும்.

முக்கிய குறிப்பு...
காலையில் நீரை குடிக்கும் போது வெறும் வயிற்றில் மட்டுமே குடிக்க வேண்டும். பல் துலக்கிய பின் குடித்தால் அதில் உள்ள பிளோரைட் தன்மை உடலில் சேர்வதால் இந்த வைத்தியம் செயல்படாமல் போய் விடுமாம். மேலும், 3 வேளை உணவு உட்கொண்ட பின் 2 மணி நேரம் நீரை குடிக்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் இதன் பலன் முழுமையாக இருக்கும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











