ஹ்ரிதிக் ரோஷன் இப்படி ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஹ்ரிதிக் ரோஷன், சிறந்த நடிகர் மட்டுமின்றி, இதுவரை 'ஆசியாவின் செக்ஸியான ஆண்' மற்றும் 'மூன்றாவது மிக அழகான நாயகன்' போன்ற பட்டங்களை வென்றவர். இவரது செதுக்கப்பட்ட உடலமைப்பு, அழகிய கண்கள், அதிக ஆற்றல் மற்றும் சிரமமான நகர்வுகளைக் கொண்ட நடனம் போன்றவை ஏராளமான ரசிகர்களைப் பெற செய்தது எனலாம்.

ஹ்ரிதிக் ரோஷன் தனது உடலமைப்பை சிக்கென்று ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு உலக புகழ்பெற்ற உடற்பயிற்சி சின்னமான கிரிஸ் ஜென்ஹின்னுடன் பயிற்சி எடுத்தார். அதுவும் கிரிஷ் 2 படத்திற்காக உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு, ஒரு நாளைக்கு 2 முறை என வாரத்திற்கு நான்கு நாட்கள் பயிற்சியை எடுத்தார்.

ஹ்ரிதிக் தன் உடலமைப்பு ஃபிட்டாகவும் கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கு சரியான உடற்பயிற்சியுடன், எப்போதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை பின்பற்றி வருவராம். இன்று ஹ்ரிதிக் ரோஷனின் பிறந்தநாள். எனவே இப்போது அவரது ஃபிட்டாக இருக்க என்னவெல்லாம் செய்கிறார் என காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்டியோ உடற்பயிற்சி

கார்டியோ உடற்பயிற்சி

ஹ்ரிதிக் தினமும் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம். அதுவும் இவர் கார்டியோ, ஸ்ட்ரெட்சிங், பவர் ஒர்க்அவுட் போன்ற அனைத்தையும் கலந்து செய்வதால், இவரது தசை அமைப்பு கச்சிதமாகவும் அழகாகவும் இருக்கிறதாம். மேலும் ஹ்ரிதிக் தினமம் குறைந்தது 20-30 நிமிடம் கார்டியோ பயிற்சியை மேற்கொள்வாராம்.

சர்க்யூட் ட்ரெயினிங்

சர்க்யூட் ட்ரெயினிங்

சர்க்யூட் ட்ரெயினிங் என்பது ஒட்டுமொத்த உடலும் ஈடுபடக்கூடிய ஒரு உடற்பயிற்சியாகும். இந்த பயிற்சியால் தசைகள் வளர்வதோடு, மெருகேறவும் செய்யுமாம். அதோடு இந்த பயிற்சியின் போது அனைத்து தசைகளும் செயல்படுமாம். இந்த ட்ரெயினிங்கில் உள்ள ஒவ்வொன்றையும் 10-15 முறை என 20-30 நிமிடம் செய்ய வேண்டியிருக்குமாம்.

கை பயிற்சி

கை பயிற்சி

ஹ்ரிதிக் தனது கைகளில் உள்ள தசைகள் நல்ல வடிவத்துடன் இருக்க, கடினமான கை பயிற்சிகளான ஸ்ட்ரைட் ஆர்ம் டம்பெல் புல்ஓவர், ஸ்ட்ரைட் ஆர்ம் புல் டவுன் போன்றவற்றை செய்வாராம். கை பயிற்சிகளை செய்வதால், கைகள் நல்ல வடிவத்தைப் பெறுவதோடு, கைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைத்து தசைகள் நல்ல வடிவத்திற்கு வரும் என்றும் கூறுகிறார்.

ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகள்

ஹ்ரிதிக் எப்போதும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தான் தேர்ந்தெடுத்து உண்பாராம். அதில் பேன்கேக் உடன் சுகர்-ப்ரீ சிரப், பனானா ஸ்பிலிட் உடன் புரோட்டீன் பவுடர் மற்றும் தயிர், மீட்பால்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்

ஹ்ரிதிக் எப்போதுமே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் டயட் தான் மேற்கொள்வாராம். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்குமாம். இவரது காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் டயட்டில் கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், சாலட் போன்றவைகள் இருக்குமாம்.

ஹை புரோட்டீன் டயட்

ஹை புரோட்டீன் டயட்

தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீன்கள் அவசியமானது. இந்த புரோட்டீனை உடற்பயிற்சி செய்த பின் எடுப்பதன் மூலம் தசைகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். ஹ்ரிதிக் புரோட்டீன் அதிகம் நிறைந்த புரோட்டீன் பவுடர், வான்கோழி, மீன், முட்டை வெள்ளைக்கரு போன்றவற்றை அதிகம் உட்கொள்வாராம். இந்த உணவுகள் தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, உடலின் ஆற்றலையும் மேம்படுத்தும்.

சிறு இடைவெளியில் சிறு உணவு

சிறு இடைவெளியில் சிறு உணவு

ஒருவர் சீரான இடைவெளியில் சிறு சிறு அளவில் உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடலின் மெட்டபாலிசம் சீராக இருக்கும் என ஹ்ரிதிக் கூறுகிறார். இவரது ஊட்டச்சத்து நிபுணரின் படி, இவர் ஒரு நாளைக்கு 6-7 முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளாராம். இதனால் கண்ட உணவுகளின் மீதுள்ள ஆர்வம் தடுக்கப்படுமாம்.

சரியான டயட்

சரியான டயட்

ஜிம் செல்வதற்கு முன்னும், பின்னும் நல்ல டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஹ்ரிதிக் கூறுகிறார். சரியான டயட் இல்லாமல் உடற்பயிற்சியை மேற்கொள்வதால் எவ்வித பலனும் கிடைக்காது என்றும் கூறுகிறார். அதுவும் 90 : 10 என்ற விகிதத்தில் டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஹ்ரிதிக் கூறுகிறார்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதற்கு தூக்கம் மிகவும் அவசியமானது. உடலுக்கு போதிய அளவிலான ஓய்வு கிடைத்தால் தான், உறுப்புக்கள் சீராக செயல்படும். நல்ல தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம் மற்றும் அன்றாட செயல்களில் சரியாக கவனத்தை செலுத்தவும் முடியும்.

ஒரு நாள் விடுமுறை

ஒரு நாள் விடுமுறை

ஹ்ரிதிக் இயற்கையாகவே உணவு விரும்பி. இவருக்கு சாக்லேட, பிட்சா, ஐஸ்க்ரீம் மற்றும் இனிப்பு பலகாரங்கள் போன்றவை ரொம்ப பிடிக்கும். ஆகவே வாரத்திற்கு ஒரு நாள், தன் ஆசைக்காக சாப்பிடுவாராம். ஆனால் மீண்டும் தனது பழைய டயட்டை தவறாமல் மேற்கொள்ள ஆரம்பிப்பாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Hrithik Roshan Shares Top 10 Diet And Fitness Workout Tips

Hrithik Roshans strict fitness mantra, diet plans and disciplined workout have made him one of the hottest and the sexiest actors of Bollywood. Check out Hrithik Roshans diet and workout tips here.
Story first published: Wednesday, January 10, 2018, 17:20 [IST]