For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை சீக்கிரம் குறைக்கணுமா? அப்ப மஞ்சளை தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க...

இங்கு மஞ்சளைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைப்பது எப்படி என கொடுக்கப்பட்டுள்ளது.

|

தற்போதைய தலைமுறையினர் சந்திக்கும் மிகப்பெரிய ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். இந்த உடல் பருமன் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் இருந்து உணவுப் பழக்கங்கள் என இன்று நாம் பின்பற்றும் ஒவ்வொரு செயல்களும் உடல் பருமனுக்கு காரணங்களாகும். இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. பெரும்பாலானோர் விரும்புவது இயற்கை வழிகளைத் தான்.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்க நம் வீட்டில் உள்ள பல பொருட்கள் உதவும். அதுவும் அன்றாட உணவில் சேர்த்து வரும் மஞ்சள் உடல் எடையைக் குறைக்கும் என்பது தெரியுமா? ஆம், மஞ்சள் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களது உடல் எடையைக் குறைக்க உதவும்.

How To Use Turmeric For Weight Loss

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-மைக்ரோபியல், சூடேற்றும் பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று நீங்கள் கேட்கலாம். மஞ்சள் பல வகைகளில் உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது. அதில்,

* உடலின் மெட்டபாலிச அளவை அதிகரிப்பதற்கு ஆதரவாக இருந்து, உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும்.

* மஞ்சள் வெள்ளை நிற அடிபோஸ் திசுக்களை பழுப்பு நிறமாக்க ஆதரவளிக்கிறது.

* மஞ்சள் உடலின் வெப்பத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைத்து, எடையைக் குறைக்க உதவும்.

* மஞ்சள் உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சிகளைக் கட்டுப்படுத்தும்.

* மஞ்சள் மன இறுக்கத்தைக் கட்டுப்படுத்தி ஆதரவளிக்கும்.

உடல் எடையைக் குறைப்பதற்கு மஞ்சள் அன்றாடம் பல வழிகளில் எடுக்கலாம். அவற்றில் எடையைக் குறைக்க உதவும் மஞ்சளில் சில தனித்துவமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் மற்றும் மஞ்சள்

தேன் மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள்

* தேன்

* மிளகுத் தூள்

செய்முறை:

* ஒரு பௌலில் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து, அத்துடன் தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

* அதுவும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக இந்த பானத்தைக் குடிக்க வேண்டும்.

மஞ்சள் இஞ்சி டீ

மஞ்சள் இஞ்சி டீ

தேவையான பொருட்கள்:

* மஞ்சள் - 1 இன்ச்

* இஞ்சி - 1 இன்ச்

* பட்டை - 3-4 துண்டு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 150 மிலி நீரை ஊற்றி, அதில் இஞ்சி மற்றும் மஞ்சளைத் தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வையுங்கள்.

* பின் அதில் பட்டைத் துண்டு போட்டு, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டினால், டீ தயார்.

* வேண்டுமானால், சுவைக்கு இதில் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதிலாக குடியுங்கள்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள்

* தேங்காய் எண்ணெய்

* மிளகுத் தூள்

செய்முறை:

* 1/4 கப் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த கலவையை தினமும் காலை உணவின் போது 1-2 டீஸ்பூன் சாப்பிடுங்கள்.

* முக்கியமாக இந்த கலவையை சுத்தமான கண்ணாடி ஜாரில் போட்டு பாதுகாத்து, தேவையான போது பயன்படுத்துங்கள்.

பால் நெருஞ்சில் மற்றும் மஞ்சள்

பால் நெருஞ்சில் மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* நற்பதமான இஞ்சி

* நற்பதமான மஞ்சள் வேர்

* 3 டான்டேலியன் வேர் டீ பை

* 2 பால் நெருஞ்சில் டீ பை

* 2 துண்டு பட்டை

* 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு

* 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 150 மிலி தண்ணீர் ஊற்றி, இஞ்சி மற்றும் மஞ்சளை தட்டிப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் டீ பைகளைப் போட்டு, அத்துடன் பட்டைத் துண்டுகளையும் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து வடிக்க வேண்டும்.

* இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, டீ போன்று குடிக்கவும்.

* இந்த பானத்தை தினமும் காலையில் குடிப்பது மிகவும் நல்லது.

மிளகு, பட்டை மற்றும் மஞ்சள்

மிளகு, பட்டை மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* நற்பதமான இஞ்சி - 2 துண்டு

* மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்

* மிளகுத் தூள் - 2 சிட்டிகை

* எலுமிச்சை - 2

* தண்ணீர் - 2 லிட்டர்

* தேன்

செய்முறை:

* 2 லிட்டர் நீரில், இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, சிறிது தேன் சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முக்கியமாக இந்த பானத்தை அதிகமாக குடிக்காதீர்கள்.

சீரகம் மற்றும் மஞ்சள்

சீரகம் மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

* சீரகம் - 3 டேபிள் ஸ்பூன்

* தேன் - சுவைக்கேற்ப

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் சீரகத்தைப் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் அந்நீரை 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்ட வேண்டும்.

* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கு தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். அதுவும் இந்த பானத்தை வெதுவெதுப்பான நிலையில் தான் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை மற்றும் மஞ்சள்

எலுமிச்சை மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள்

* எலுமிச்சை

* பட்டை

* தேன்

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 1 கப் சுடுநீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, குடியுங்கள்.

* இந்த பானத்தை ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.

* பின் 2 வாரம் இடைவெளி விட்டு, மீண்டும் ஒரு வாரம் குடிக்க வேண்டும்.

நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்

நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* நெல்லிக்காய்

* மஞ்சள்

* எலுமிச்சை

செய்முறை:

* நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த சாற்றில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து குடிக்க வேண்டும்.

* இப்படி தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் சுவைக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

க்ரீன் டீ மற்றும் மஞ்சள்

க்ரீன் டீ மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள்

* க்ரீன் டீ

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 இன்ச் நீளமுள்ள மஞ்சளை சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் க்ரீன் டீ இலைகள் அல்லது க்ரீன் டீ பைகளைப் போட்டு, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கவும்.

* இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் குடியுங்கள்.

* இந்த பானத்தை கர்ப்பிணிகள் அல்லது வேறு ஏதேனும் மருந்து மாத்திரைகளை அன்றாடம் எடுப்பவர்கள் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தேங்காய் பால் மற்றும் மஞ்சள்

தேங்காய் பால் மற்றும் மஞ்சள்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* தேங்காய் பால் - 2 கப்

* பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

* இஞ்சி பவுடர் - 1/4 டீஸ்பூன்

* தேன் - சுவைக்கேற்ப

செய்முறை:

* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 3-5 நிமிடம் மிதமான தீயில் சூடேற்றி இறக்க வேண்டும். ஆனால் கொதிக்க வைக்கக்கூடாது.

* இறுதியில் இந்த பானத்தில் சுவைக்கு தேன் சேர்த்து கலந்து உடனே குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை காலை உணவு உண்பதற்கு முன் தினமும் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Turmeric For Weight Loss

Is there any way to fight obesity naturally? Many believe turmeric is good for weight loss, but how true is that? Here we discussed how to use turmeric for weight loss.
Story first published: Friday, March 9, 2018, 23:47 [IST]
Desktop Bottom Promotion