Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
வாழைப்பழம்+இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், வெறும் 14 நாட்களில் தொப்பையை குறைத்திடலாம்..!
இன்று பலரை வாட்டி எடுக்கும் ஒரு பிரச்சினை இந்த தொப்பை தான். நின்னாலும் தொப்பை, நடந்தாலும் தொப்பை, குனியும் போதும் தொப்பையா..!? இப்படி எதற்கெடுத்தாலும் உங்கள் தொப்பை உங்களை பாடாய்படுத்துகிறதா..? இந்த தொப்பைக்கு முக்கிய காரணமே வயிற்றில் சேர கூடிய கொழுப்புகள் தான். இந்த கொழுப்பை குறைத்து விட்டாலே உங்கள் தொப்பை பிரச்சினை அனைத்திற்கும் மிக பெரிய முற்றுப்புள்ளியை நாம் வைத்து விடலாம்.

இதற்காக ஜிம்மிற்க்கோ, பெரிய பெரிய உடற்பயிற்சிகளையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வாழைப்பழத்தையும் இஞ்சியையும் சேர்த்து சாப்பிட்டாலே போதும். ரொம்பவே ஆச்சரியமாக தான் இருக்கும்..! ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை. சாதாரண வாழைப்பழமும் இஞ்சியும் எப்படி இந்த அற்புதத்தை செய்கிறதுனு இனி தெரிஞ்சிக்கலாம் வாங்க...

காரணம் என்ன..?
பலருக்கு காரணமே இல்லாமல் தொப்பை வருகிறது என சொல்வார்கள். ஆனால் அது அப்படி இல்லை. நீங்கள் சாப்பிட கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் கொண்ட உணவுகள் தான் இதற்கு முதல் காரணம். இவை நீண்ட நாட்கள் அழுக்குகளாகவே நமது உடலில் தேங்கி பலவித கோளாறுகளையும் உண்டாக்கும்.

அற்புத செய்ய கூடியது..!
பொதுவாகவே வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளது என நமக்கு நன்கு தெரியும். அதுவும் இதில் அதிகமாக நிறைந்துள்ள பொட்டாசியம், நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் இதன் மகத்துவத்திற்கு முக்கிய காரணம். இதனை இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடும் போது இதன் பலன் பலமடங்காக உயர்கிறது.

உணவும் மூலிகையும்..!
நாம் சாப்பிட கூடிய ஒரு சில உணவுகள் மூலிகையாகவும் வேலை செய்கிறது. அந்த வகையில் இஞ்சியும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
இவற்றின் மூலிகை தன்மை தான் உங்கள் தொப்பைக்கு முற்றுபுள்ளி தர போகிறது. தொப்பை குறைக்கும் முறைகளில் இந்த இஞ்சி வைத்தியம் சிறந்தது என மருத்துவர்களும் கூறுகின்றனர்.

இரண்டும் சேரும் போது..?
வாழைப்பழமும் இஞ்சியும் ஒன்றாக சேரும் போதுதான் உங்கள் தொப்பைக்கு தீர்வே கிடைக்கிறது.
நீங்கள் இந்த கலவையை மேலும் சில முக்கிய உணவு பொருட்களோடும் சாப்பிட வேண்டும். அவ்வாறு செய்யும் போது உடல் எடையையும் சேர்த்தே இது குறைத்து விடும்.

தேவையான பொருட்கள்...
இந்த தொப்பை குறைப்பு வைத்தியத்திற்கு வாழைப்பழம் இஞ்சியோடு சேர்த்து மேலும் சில உணவு பொருட்கள் தேவைப்படுகிறது.
வாழைப்பழம் 1
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
துளிர் முளைக்கீரை 1/4 கப்
ஆளி விதைகள் 2 டேபிள்ஸ்பூன்

விதையும் தொப்பையும்..!
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த ஆளி விதை பலவித நன்மைகளை உங்களுக்கு தரவல்லது.
குறிப்பாக தொப்பையில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து கொள்ளும். இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.

முளைக்கீரை எப்படி..?
சாதாரண கீரை போல தெரிந்தாலும் இதன் வீரியம் அதிகமே. இதில் வைட்டமின் சி, கே, இரும்புசத்து, வைட்டமின் பி, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் உள்ளதாம்.
இவற்றை இந்த இஞ்சி மற்றும் வாழைப்பழத்தோடு சேர்க்கும் போது தொப்பை பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

தயாரிப்பு முறை..
முதலில் வாழைப்பழத்தை இஞ்சியுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் முளைக்கீரை மற்றும் ஆளி விதைகள் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.
இந்த கலவையை காலை உணவாக சாப்பிட்டால் தொப்பையில் உள்ள கொழுப்புகள் எளிதாக குறைந்து விடும்.

மறவாதீர்கள்..!
இந்த ஜுஸை தயாரித்த சில நிமிடங்களில் குடிப்பதே சிறந்தது. இதனை ஃபிரிட்ஜில் வைத்து குடிப்பதால் முழு பலனும் கிடைக்காது.
எனவே செய்த உடனே குடித்தால் எளிதாக தொப்பை குறைந்து விடும், அத்துடன் உடல் எடையும் குறைய வாய்ப்புகள் அதிகம்.



Click it and Unblock the Notifications
