Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
என்ன செஞ்சாலும் உடல் எடை குறையவே மாட்டுதா..? நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் அதற்கு காரணம்...!
உடல் எடை கூடி கொண்டே போகிறது என்ற கவலை நம்மில் பலருக்கு இருக்கும். உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சித்து பார்த்தாலும் எந்த பலனும் கிடைக்கவில்லையா..? இதற்கு காரணம் நீங்கள் செய்கின்ற இந்த தவறுகள் தான்.

உணவிலும் சரி, அன்றாட பழக்க வழக்கங்களிலும் சரி, நீங்கள் உங்களையே அறியாமல் செய்கின்ற அன்றாட செயல்கள் தான் உடல் எடை குறையாமல் இருக்க முக்கிய காரணம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கடுப்பான ஒன்று..!
பலர் தங்களது கடின வேலைகளின் இடையிலும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல வகையான உடல் எடை குறைப்பு முறைகளை தொடர்ந்து செய்து வருவார்கள். இருந்தும் கொஞ்சம் கூட எடை குறையாமல் அதே நிலையில் இருக்கும். இது பலருக்கு உடல் எடையை குறைக்க கூடாது என்ற எண்ணத்தை தந்து, மீண்டும் பருமனாக மாற்றி விடும்.

ஹோர்மோன் கோளாறா..?
மனித உடலில் மிக முக்கிய பங்கு இந்த ஹார்மோன்களுக்கு உள்ளது. குறிப்பாக தைராய்டு ஹார்மோன், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன், பசிக்கான கிரேலின் ஹார்மோன், சர்க்கரை அளவை குறிக்கும் இன்சுலின் ஹார்மோன் போன்றவை தான் உடல் எடை சார்ந்த பிரச்சினைகளில் முதல் இடத்தில் உள்ளது. இவற்றின் சமநிலை மாறினால் என்ன செய்தாலும் எடையை குறைக்க முடியாது.

ஒரே இடத்தில் நீண்ட நேரமா..?
இப்போதெல்லாம் பலர் செய்கின்ற வேலைகள் அனைத்துமே ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே செய்கின்ற வேலையாகவே உள்ளது. 8 மணி நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிறவர்களுக்கு சாப்பிடும் உணவு நேரடியாக கொழுப்பாகவே மாறி விடும். இதனால் தான் எடையை குறைக்க முடிவதில்லை.

எவ்வளவு நேர இடைவேளை..?
பலர் உடல் எடையை குறைக்க செய்யும் பயிற்சிக்கு ஏற்ப அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். ஒரு பக்கம் எடையை குறைக்கவும், மறுபக்கம் அதே எடையை கூடவும் செய்கின்றனர். 3 முதல் 4 மணி நேர இடைவெளியில் தான் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எடை குறையவே குறையாது.

போதுமான புரதசத்து இல்லையா..?
உடல் எடையை குறைப்பதற்கு இந்த புரதச்சத்தும் மிக அவசியமாக தேவைப்படுகிறது. போதுமான அளவு புரதசத்து கொண்ட உணவுகளை நீங்கள் உண்ணவில்லையென்றால் எடையை குறைப்பது கடினமாகி விடும். எனவே, பருப்பு வகைகள், கோழியின் மார்பு பகுதி, காளான், பால் போன்ற உணவுகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

டயட் என்ற மாயை..!
பலர் உடல் எடையை குறைப்பதற்கு உணவை சாப்பிடும் அளவை முற்றிலுமாக குறைத்து விடுவார். இது மிக தவறான விஷயமாகும் என உடல் எடை குறைப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2000 கலோரிகளும், ஆண்களுக்கு 2500 கலோரிகளும் தேவைப்படுகிறது.

போதுமான தூக்கம் இல்லையா..?
7 மணி நேர தூக்கம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் உடல் எடை குறைப்பு முயற்சிகள் தோற்று போகும். போதுமான தூக்கம் இல்லையென்றால் உடல் எடை கூடுதல், ஹார்மோனை குறைபாடு, தசைகளுக்கு ஓய்வின்மை, பசியின்மை, சோர்வு ஆகியவை ஏற்படும்.

சர்க்கரை அளவு அதிகரித்தலா..?
எடை குறைப்பை தடுக்கும் நோக்கம் இந்த சர்க்கரைக்கு அதிகமாகவே உள்ளது. நீங்கள் உண்ணும் உணவில் சர்க்கரையினால் உருவாக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எடையை குறைக்க முடியாது. குறிப்பாக சாஸ், கேக்குகள், சாகோலட்கள் போன்றவை இதில் அடங்கும்.

மாத்திரைகள் காரணமா..?
பலர் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவற்றிற்கு பல வித மாத்திரைகளை அடிக்கடி எடுத்து கொள்வார்கள். இதுவும் அவர்களின் எடை குறைப்பை பாதிக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். அளவான மாத்திரைகளை எடுத்து கொண்டால் எந்த பிரச்சினைகளும் வராது.

கொழுப்புகள் கூடாதா..?
நீங்கள் சாப்பிடும் உணவில் கொழுப்புகளும் எருதிகள் வேண்டும். ஏனெனில் சில முக்கியமான கொழுப்பு வகைகள் நமது உடல் எடைகுறைப்பிற்கு தேவைப்படும். முக்கியமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா, ஆளி விதைகள், வேர்க்கடலை போன்றவை மிதமான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

போதுமான நீர் இல்லையா..?
நமது உடலில் 75% நீரால் அமைந்துள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு தண்ணீர் பெரிதும் உதவும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளையும் தண்ணீர் வெளியேற்ற செய்யும். எனவே, 3 லிட்டர் தண்ணீராவது ஒரு நாளைக்கு குடிக்க வேண்டும்.

மறவாதீர்கள்..!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான உடற்பயிற்சிகளையும் செய்ய கூடாது. மீறினால் பலன் ஏதும் கிடைக்காது. ஆதலால் மேற்சொன்ன எல்லா குறிப்புகளையும் நினைவில் வைத்து கொண்டு எடை குறைப்பில் இறங்குங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் அன்பிற்குரியர்களுக்கும் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications