For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே...! நீங்கள் எப்போதும் சைஸ்-0 ஆக இருக்கனுமா...?

பொதுவாக ஆண்கள் வெளியில் சென்றாலே நண்பர்களுடன் ஏதாவது சாப்பிடுவது வழக்கமே.ஆனால் இது பல பின்விளைவுகளை தரும். மிகவும் ருசியாக, வண்ணமயமாக உள்ள உணவுகளை அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட இனிமையாகத்தான் இ

|

இப்போதெல்லம் பெண்களை காட்டிலும் ஆண்களே அதிக பருமனாக உள்ளார்கள் என்று பல ஆராய்ச்சிகள் சொல்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் தெரு ஓரத்தில் விற்கப்படும் ஜங்க் உணவுகள், பாஸ்ட் ஃபூட்ஸ் மற்றும் பீட்சா, பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதாலையே..! கவர்ச்சியான உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடத்தானே செய்யும். இத்துடன் சேர்த்து உடலில் கொழுப்புகள் அதிகரித்து, இதயம் சார்ந்த பல நோய்களையும் ஏற்படுத்தும்.

health

பொதுவாக ஆண்கள் வெளியில் சென்றாலே நண்பர்களுடன் ஏதாவது சாப்பிடுவது வழக்கமே.ஆனால் இது பல பின்விளைவுகளை தரும். மிகவும் ருசியாக, வண்ணமயமாக உள்ள உணவுகளை அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட இனிமையாகத்தான் இருக்கும். அதன்பின் வரும் ஆபத்தை நாம் அறியமாட்டோம். சரி, இது போன்ற உணவுகளை சாப்பிட்டு உடல் எடை ஏறி போகிடுச்சா..? இதற்கு பல மருந்துகளை சாப்பிட்டும் எடை குறையவே இல்லையா..? இதற்கு தீர்வு இந்த 8 மூலிகைகளே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 இஞ்சி

#1 இஞ்சி

மருத்துவத்தில் அருமையான பங்கு இஞ்சிக்கு உள்ளது. உங்கள் செரிமானத்தை சீராக வைத்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சிறிது இஞ்சி துண்டை, தோல் உறித்து உண்ணுங்கள். ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்து கொழுப்புக்களை கறைக்க வல்லது. தினமும் காலை - மாலை என இரு வேலைகளிலும் இஞ்சி டீ குடித்தால் நல்ல பசியை தூண்டும். மந்தமான உடலை சுறுசுறுப்பாக வைக்கவும் செய்கிறது.

#2 செம்பருத்தி

#2 செம்பருத்தி

பூக்களில் அதிகம் பயன்களை கொண்ட செம்பருத்தி உங்கள் உடல் பருமனை குறைக்க வழி செய்கிறது. ஊட்டச்சத்துக்களும், அதிக பிளவனாய்ட்ஸும் இதில் உள்ளதால் உங்கள் உடல் எடையை மிக கச்சிதமாக வைக்கும். அது உடலுக்கு அதிக நீர் சத்தை கொடுக்கவல்லது. செம்பருத்தி டீ தினமும் குடித்தால் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொலெஸ்ட்ரோல்கள் கரைக்கப்படும். இந்த டீயை தயாரிக்க செப்பருத்தி இலைகளை வெயிலில் உலர்த்தி பிறகு அதனை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க வைத்து, வடிக்கட்டி குடிக்க வேண்டும். சுவைக்காக சிறிது தேனும் சேர்த்து கொள்ளலாம்.

#3 குக்குள் (guggul)

#3 குக்குள் (guggul)

அதிக ஆயுர்வேத தன்மை கொண்ட இந்த மூலிகை எடை குறைப்பிற்கு மிகவும் உதவுகிறது. தைராய்ட் ஹார்மோனை தூண்டி உடலின் செயல்பாட்டை சமமாக வைக்கிறது. மேலும் அதிகம் சேர்ந்துள்ள கெட்ட கொலெஸ்ட்ரோலையும் குறைகிறது. 1/4 கப் குக்குள் எடுத்து கொண்டு அதனை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் பருமன் மெல்ல மெல்ல குறையும்.

#4 திரிபலா

#4 திரிபலா

மூலிகைகளில் மிக சிறந்த மூலிகை இந்த திரிபலா. நெல்லிக்காய்,கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கூட்டு சேர்க்கையே திரிபலா. இது பொதுவாக எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். மலச்சிக்கலை குணப்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் ஜீரண மண்டலத்தில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதனையும் நீக்குகிறது. திரிபலாவில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் வயிற்றில் சேர்ந்துள்ள நச்சுக்களை போக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்க கூடியது.

#5 கற்றாழை

#5 கற்றாழை

உடலில் தேவைக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைப்பதில் கற்றாழைக்கு பெரிய பங்குண்டு. கற்றாழையில் உள்ள ஜெல்லை கொழகொழப்பு நீங்குமாறு கழுவி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை கரைக்கும். மேலும் தொப்பையையும் குறைக்கும். வயிற்றில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்கி பசியை தூண்டும். கற்றாழையை தலைக்கு தடவினால் உடலின் சூட்டை சீராக்கும்.

#6 கருஞ்சீரகம்

#6 கருஞ்சீரகம்

இதில் உள்ள எண்ணற்ற பலன்கள் நமது உடலை ஆரோக்கியமாகவும், ஒல்லியாகவும் மாற்ற உதவுகிறது. இதில் கிட்டத்தட்ட 250 வைட்டமின்களும்,பலவித ஊட்டச்சத்துக்களும்,ஒமேகா-3 யும் நிறைந்துள்ளது. ஆதலால், உடலுக்கு அதிக உற்சாகத்தை தரவல்லது. 1/2 டீஸ்பூன் கருஞ்சீரக விதைகளை தினமும் சாப்பிட்டால் உடல் பருமன் குறைந்து ஒல்லியாக மாறுவீர்கள். மேலும் இது டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

#7 மஞ்சள்

#7 மஞ்சள்

சமையலில் அதிகம் பயன்படுத்துகின்ற பொருட்களில் முக்கியமான ஒன்று மஞ்சளே. ஏனெனில் இது நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கொழுப்புகள் சேர்ந்துள்ள தசைகளை சீராக்கி ரத்த நாளங்களின் செயல் திறனை அதிகரிக்கிறது. குண்டாக இருப்பவர்களுக்கு கிரோனிக் வகை நோய்கள் வராமல் பாதுகாக்கும். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால், குடலில் உள்ள கிருமிகளை கொள்ளும்.

#8 கருப்பு மிளகு

#8 கருப்பு மிளகு

இதில் piperine என்ற மூல பொருள் அதிகம் உள்ளதால் கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கும். 20 நிமிடம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் குறையுமோ அதே அளவிற்கு கலோரிகளை இது குறைக்கும். உணவில் கருப்பு மிளகை அதிகம் சேர்த்து கொண்டால் உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த மூலிகைகளை மருத்துவரின் ஆலோசனையோடு சாப்பிடுவது உகந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 herbs for weight loss

very fatty..! Here are 8 herbs for weight loss
Story first published: Tuesday, July 24, 2018, 17:48 [IST]
Desktop Bottom Promotion