உங்க உடலுக்கு எந்த வகையான டயட் சிறந்தது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் மிகவும் பழமையான வைத்திய முறை தான் ஆயுர்வேத மருத்துவ முறை. இந்த ஆயுர்வேத மருத்துவத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது, முதலில் அவர்களது உடல் வகையை தெரிந்து கொண்டு, பின்பே சிகிச்சை அளிக்கப்படும்.

Which Type Of Diet Will Best Suit Your Body Type? Find Out Here!

ஆயுர்வேதத்தில் மூன்று வகையான உடல் வகைகள் உள்ளன. அவை வாதம் (காற்று), பித்தம் (நெருப்பு), கபம் (நீர்) போன்றவைகளாகும். ஒவ்வொருவரும் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு உடல் வகையைத் தான் கொண்டிருப்போம்.

இப்போது இக்கட்டுரையில் எந்த உடல் வகையினர், எந்த மாதிரியான டயட்டை மேற்கொள்வது நல்லது, எந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவர், அதை எப்படி தடுப்பது போன்றவற்றைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாதம்

வாதம்

* வாத உடல் வகையைச் சேர்ந்தவர்கள், ஒல்லியாக இருப்பார்கள்.

* இவர்களது தலைமுடி வறட்சியுடனும், மெலிந்தும் இருக்கும்.

* சரியான தூக்கத்தை மேற்கொள்ளமாட்டார்கள்.

* இவர்களிடம் சகிப்புத்தன்மை அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

* எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.

பித்தம்

பித்தம்

* பித்த உடல் வகையைச் சேர்ந்தவர்கள், குண்டாகவும் இருக்கமாட்டார்கள், அதே சமயம் மிகவும் ஒல்லியாகவும் இருக்கமாட்டார்கள்.

* இவர்களது சருமம் மென்மையாகவும், தலைமுடி மெலிந்தும், இளமையிலேயே நரைமுடி பிரச்சனையை சந்திப்பார்கள்.

* இவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும்.

* இவர்களது நினைவுத்திறன் கூர்மையாக இருக்கும்.

கபம்

கபம்

* கபம் உடல் வகையைச் சேர்ந்தவர்கள் குண்டாக இருப்பார்கள். உடல் பருமனால் கூட அவஸ்தைப்படுவார்கள்.

* இவர்களது தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

* தூக்கத்தில் நன்கு குறட்டை விடுவார்கள்.

* அமைதியான குணம் கொண்டவர்கள்.

* இவர்கள் மனதை நன்கு ஒருநிலைப்படுத்துவார்கள்.

வாத உடல் வகையினர்

வாத உடல் வகையினர்

சாப்பிடக்கூடியவை:

நல்ல கொழுப்புக்கள், சூடான டீ, அளவான காரத்தை உணவில் சேர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

குளிர்ச்சியான உணவுகள், கசப்பான உணவுகள், காப்ஃபைன் நிறைந்த உணவுகள்.

பித்த உடல் வகையினர்

பித்த உடல் வகையினர்

சாப்பிடக்கூடியவை:

குளிர்ச்சியான உணவுகள், இனிப்புகள், பழங்கள், கசப்பான காய்கறிகள்.

தவிர்க்க வேண்டியவை:

ஆல்கஹால், காரமான உணவுகள், எண்ணெய் உணவுகள், நொதிக்க வைக்கப்பட்ட உணவுகள்.

கப உடல் வகையினர்

கப உடல் வகையினர்

சாப்பிட வேண்டியவை:

கசப்பான காய்கறிகள், காரமான உணவுகள், தேன், இஞ்சி.

தவிர்க்க வேண்டியவை:

புளிப்பான பழங்கள், அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள், சர்க்கரை உணவுகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Which Type Of Diet Will Best Suit Your Body Type? Find Out Here!

If you know your body type, you could easily figure out what diets suits you the best, what diseases you are prone to, what you can do to prevent them.
Story first published: Friday, February 24, 2017, 10:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter