இந்த ஒரே ஒரு மூலிகை தண்ணி குடிச்சா உடல் எடை சீக்கிரமா குறையும் தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறித்த பயம் எல்லாருக்கும் இருக்கிறது. யாரைக் கேட்டாலும் தன்னுடைய உடல் எடையைப் பற்றி பேசாத அல்லது கவலைப்படாத ஆட்களே இருக்க முடியாது. இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் பலரும் ஒரேயிடத்தில் உட்கார்ந்த படி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியதாய் இருக்கிறது.

How to use fennel seeds for weight loss

இதைத் தவிர சத்தான உணவுகளை எடுக்க முடியாமல் அவசர கதியில் ஏதோ ஒன்று சாப்பிட்டோம் என்ற ரீதியில் தான் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணம் ஓடிக் கொண்டிருக்கிறது. துரித உணவுகளை சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் உடல் எடை எக்குதப்பாக அதிகரித்து விடுகிறது. பின்னாட்களில் இதனால் மாரடைப்பு,சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன.

தீவிரமாக என்னால் டயட் பின்பற்ற முடியாது என்று நினைக்கிறவர்கள். இந்த சின்ன விஷயத்தை தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்தால் நன்றாக உடல் எடையை குறைக்க முடியும். எப்படி தெரியுமா? முதலில் அது என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்னர் அது எப்படியெல்லாம் உங்கள் எடை குறை துணை புரியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோம்பு :

சோம்பு :

அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்துவோம். சோம்பில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிராண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது. சீரகத்திலுள்ள தைமோலின் வயிற்றுப்பூச்சிகளை கொல்லவல்லது. சீரகத் தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் தாராளமாக உடல் எடையை குறைக்க முடியும்.

சோம்புத் தண்ணீர் :

சோம்புத் தண்ணீர் :

முதல் நாள் இரவு சோம்பை போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் தண்ணீரை இறக்கிவிடலாம். பின்னர் நன்றாக ஆறியதும் அந்த தண்ணீரை பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் சோம்பு வரை போட வேண்டும். கூடுதல் அரோமா தேவைப்பாட்டால் வெறும் பாத்திரத்தில் சோம்பை வறுத்துக் கொள்ளுங்கள். இது கூடுதல் சுவையை அளிக்கும்.

எவ்வளவு குடிக்கலாம் ? :

எவ்வளவு குடிக்கலாம் ? :

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். அதாவது சோம்பு போட்டு கொதிக்க வைத்த நீர் மட்டும் ஒரு லிட்டர். இது செரிமானத்தையும் சீராக்குவதால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது, மேற்கொண்டு ஏதாவது இடைஞ்சல்கள் ஏற்ப்பட்டால் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறலாம்.

சோம்பில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

சோம்பில் என்னென்ன இருக்கிறது தெரியுமா?

சோம்பில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ்,பொட்டாசியம்,விட்டமின் ஏ, விட்டமின் சி,ஃபைபர், இருக்கிறது. இதிலிருக்கும் கால்சியம் சரியான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. அதோடு ரத்தத்தில் சர்க்கரையளவு அதிகம் சேராமலும் பாதுகாக்கிறது.

மக்னீசியம் தசை வலிமையை பாதுகாக்கிறது,அதோடு நரம்பு மண்டலத்தை புத்துணர்சியாக்கும். நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும். இதிலிருக்கும் பாஸ்பரஸ் பற்களுக்கும், எலும்புகளுக்கும் ஆற்றல் கொடுக்க கூடியது. அதோடு சீரண சக்தியை அதிகரிக்கிறது. பொட்டாசியம் செல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

விட்டமின் ஏ, மற்றும் விட்டமின் சி கண்களுக்கு மிகவும் நல்லது, அதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஃபைபர் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் இதனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திடும்.

மெலடோனின் :

மெலடோனின் :

உடல் எடை குறைய நமக்கு நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் அவசியம்.தூக்கம் குறைவாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். சீரகத்தண்ணிர் குடிப்பதால் மூளையில் மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும்.

இதன் சுரப்பு குறைந்தால் தூக்கம் வராது. சராசரியாக ஒரு மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியமானது.

சுறுசுறுப்பு :

சுறுசுறுப்பு :

சோம்பு எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவிடும். சர்க்கரையை அதிகமாக உடல் சேர்க்க அனுமதிக்காது. இதன் காரணமாக சர்க்கரை உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும். நீண்ட நேரம் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதால் குறைவான உணவையே உட்கொள்வீர்கள்.

மெட்டபாலிசம் :

மெட்டபாலிசம் :

உங்கள் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்தால் தான் கலோரிகளை வேகமாக எரிக்க முடியும். வேகமாக கலோரி எரிக்க வேண்டும் அதே சமயம் அதிக கொழுப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் ஸ்மார்ட் டயட் இருந்தால் நிச்சயமாக உடல் எடையை உங்களால் குறைக்க முடியும். சீரகத்தண்ணீர் தொடர்ந்து குடித்தால் அது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

நச்சு நீக்கும் :

நச்சு நீக்கும் :

உங்கள் உடலில் தேவையின்றி சேரும் நச்சுக்களை நீக்கினாலே உடல் சீக்கிரம் செரிமானம் ஆகும் இதனால் உடலில் தேவையின்றி சேரும் கொழுப்புகள் தவிர்க்கப்படும்.

சோம்புத்தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிடும். இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கப்பெறும். அதோடு உடல் எடையும் கணிசமாக குறைந்திடும்.

பசியின்மை :

பசியின்மை :

நாம் சாப்பிடும் உணவுகள் விரைவில் செரித்து பசி உணர்வை ஏற்படுத்துவதால் தான் நமக்கு ஏதாவது ஒரு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

இதனால் முறையின்றி பசிக்கு ஏதாவது ஒன்று சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். சோம்புத்தண்ணீர் குடிப்பதால் இந்த உணர்வு கட்டுப்படுத்தப்படும். பசியுணர்வு அதிகரிக்காது. இதனால் தேவையின்றி உணவுகள் உட்கொள்வது குறையும்.

ரத்தம் சுத்திகரிப்பு :

ரத்தம் சுத்திகரிப்பு :

ஆரோக்கியமான மற்றும் சுத்தமான உடலெங்கும் பரவுகிறது. அதோடு சில நேரங்களில் நச்சுக்கள் கலக்கவும் வாய்ப்புண்டு,ரத்தம் சுத்தமானதாக இருந்தால் செரிமானம் துரிதமாக நடைபெறும். அதோடு வேறு எந்த விதமான நோய்களும் உங்களை தாக்காது.

சோம்புத்தண்ணீ ர் உங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் செரிமாணம் வேகமாக நடைபெறும். அதோடு இது நச்சுக்களையும் நீக்குவதால் உடல் எடை வேகமாக குறைந்திடும்.

தொப்பையை குறைக்கும் :

தொப்பையை குறைக்கும் :

சோம்பில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது, இதனால் உணவுகள் செரிமானம் அடைய துணை நிற்கிறது. அதோடு வயிற்றில் தேங்கியிருக்கும் கழிவுகளை எல்லாம் உடனேயே நீக்கிடும் ஆற்றல் கொண்டது.

தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் கீழ் வயிற்றில் சேருவது தான். அவற்றை சோம்புத்தண்ணீர் குடிப்பதால் நீக்கிடலாம் என்பதால் தொப்பை குறைந்திடும்.

குளிர்ந்த நீர் :

குளிர்ந்த நீர் :

சோம்பை சூடான அதாவது கொதிக்க வைத்த நீரில் மட்டுமே போட வேண்டும் என்பதல்ல குளிர்ந்த நீரிலும் போடலாம். ஆனால் குளிர்ந்த நீரில் போட்டால் அதிக நேரம் ஊற வைக்க வேண்டும்.

குளிர்ந்த நீர் என்றால் முதல் நாள் இரவே சோம்பை தண்ணீரில் போட்டு விடுங்கள். மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கலாம். மேலும் சோம்பை வடிக்காட்டாமல் அப்படியே சாப்பிடுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலே தானாக உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். ஆனால் சில பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் முதலில் அது பாதிக்கும் இடம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை முடக்குவது தான். இதனால் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும்.

சோம்புத்தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to use fennel seeds for weight loss

How to use fennel seeds for weight loss
Story first published: Monday, October 16, 2017, 11:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter