ஸ்ட்ரிக்ட் டயட்டால் உடல் உருகி போன இளம்பெண் - எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Boldsky

திடீரென சிலர் மிக தீவிரமாக டயட் மேற்கொள்ளவார்கள். எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என தெரியாமல், எப்படி ஒரு டயட்டை பின்பற்ற வேண்டும் என அறியாமல், அவர்களாக எதையாவது பின்பற்றுவார்கள்.

சாப்பாடு குறைத்து கொள்வது தானே டயட்? சாப்பிடாம இருந்துட்டா அப்படி என்ன பெருசா பிரச்சனை வந்துரும் என கேள்வி கேட்பவர்களுக்கு. ரஷ்யா சேர்ந்த விரா (Rosjanka Wiera Schultz) எனும் பெண்ணின் கதை ஒரு எடுத்துக்காட்டாக அமையும்.

உடல் எடை குறைக்க விரா பின்பற்றிய டயட். காலப்போக்கில் அவரே டயட்டை நிறுத்திய பிறகும், உடல் எடை குறைவதும் மட்டும் நிற்காமல் ஏறத்தாழ 30 கிலோ வரை அதிகம் குறைந்து எலும்பும், தோலுமாக மாறி போனார்.

இதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் கஷ்டப்பட்டார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோசான டயட்!

மோசான டயட்!

விரா (18) ரஷ்யாவை சேர்ந்த இளம் பெண். உடல் எடை குறைக்க மோசமான டயட்டை பின்பற்றி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டவர்.

கிட்டத்தட்ட 30 கிலோ வரை உடல் எடை குறைந்து, வெறும் 33 கிலோ எடைக்கு எலும்பும், தோலுமான நிலைக்கு ஆளானார்.

உணவு பிரச்சனை!

உணவு பிரச்சனை!

தான் தேர்வு செய்த மோசமான உணவுகள் தான் இந்த நிலைக்கு காரணம் என அறிந்த விரா. உடனடியாக கவனத்தை ஜிம் மற்றும் சரியான டயட் பக்கம் திருப்பி. மெல்ல, மெல்ல தனது தசை வலிமையை அதிகரிக்க துவங்கினார்.

உடலை நேசிக்க ஆரம்பித்த விரா இப்போது மீண்டும் புது பொலிவிற்கு திரும்பி ஒரு ஜிம் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.

ரசிகர்கள்!

ரசிகர்கள்!

2014ல் இருந்த விராவிற்கும், 2017ல் இருக்கும் விராவிற்கும் நிறையவே மாற்றங்கள் இருக்கின்றன. இன்ஸ்டாகிராமில் @Shinkory என்ற பெயரில் இயங்கி வருகிறார் விரா.

இவரது தன்னம்பிக்கை மற்றும் உடல் தோற்ற மாற்றத்தை கண்டு இவரை 23 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

மாடல்!

மாடல்!

தவறான டயட் தேர்வால் எலும்பு கூடு போல இருந்த விரா. சரியான நேரத்தில் விழித்து, இப்போது ஒரு மாடல் அழகி போல கரக்ட் ஃபிட்டில் இருக்கிறார்.

பெரும்பாலான பெண்கள் டயட் என்ற பேரில் ஏதோ ஆடு புல்லை மேய்வது போல உணவு உட்கொண்டு தங்கள் உடல் நலனை கெடுத்துக் கொள்கிறார்கள்.

இதை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விராவின் நிலைக்கு ஆளாக கூடும்!

All Image Credits : Shinkory / Instagram

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Strict Diet Changed the Lifestyle of a Teen Girl? Awareness Article!

How Strict Diet Changed the Lifestyle of a Teen Girl? Awareness Article!
Subscribe Newsletter