நீண்ட நாள் தொப்பையை குறைக்க சியா விதைகளை பயன்படுத்தும் முறை!!

Posted By: S. Hari Dharani
Subscribe to Boldsky

தற்போது, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் என்ற சொற்கள் மக்களிடையே புதிய அர்த்தத்தை பெற்றுள்ளது மேலும் இவை ஒர நேர்கோட்டில் செல்பவை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.

நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிடில் உடல் எடை குறைவதால் அல்லது உடல் எடை கூடுவதால் உங்கள் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும்.

This Natural Remedy Guarantees Belly Fat Loss In Just 2 Months!

உண்மையாகவே நாம் விரும்பும் பிரபலங்களை போல வடிவான கவர்ச்சியான வயிறும் அதற்கேற்ற நவநாகரிக உடைகளை அணிவதில் ஆர்வம் கொண்டுள்ளீர்கள் அல்லவா?

யாரும் பெரிய தொப்பை வயிற்றாய் வைத்துக்கொண்டு கவர்ச்சியற்று மேலும் ஆரோக்கியம் இழந்து இருப்பதை விரும்ப மாட்டார்கள். நம்மில் பாலின வேறுபாடின்றி பெரும்பாலான மக்கள் தொப்பை பிரச்சினையை தான் எடை குறைப்பு சிக்கலில் அதி முக்கியமானதாக கருதுகிறார்கள்.

மற்றும் நீங்கள் உடல் உழைப்பற்ற வேலைகளையோ நாற்காலியில் அமர்ந்தபடியான வேலைகளையோ செய்பவர்கள் என்றால் நீங்கள் தொப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அதிகம் சந்திப்பீர்கள்.

மனித உடலில் வயிற்றுப் பகுதியில் மட்டுமே அதிக கொழுப்பு எளிதில் படிவதால், தொப்பையை குறைப்பது என்பது மிகக்கடினமான ஒன்றே.

தொழில் முறை உடற்பயிற்சி நிபுணர்கள் கூட வடிவான கவர்ச்சியான வயிற்றிற்காக அதிக கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய 20 உணவுகள்!!!

மேலும் வயிற்றுப் பகுதியில் படிந்துள்ள கொழுப்பு உங்கள் உடல் ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

தொப்பை வயிறு காரணமாக நீங்கள், உடல் பருமன் பிரச்சினைகள், இதய நோய்கள், நீரிழிவு நோய் எனும் சர்க்கரை வியாதி, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோயினால் கூட அவதிப்பட வாய்ப்புள்ளது.! அதனால் தொடர் உடற்பயிற்சி, கடுமையான உணவு பழக்கங்கள் போன்றவற்றை கடைபிடிப்பது மிக முக்கியம். இவற்றால் நல்ல உடற்கட்டோடும் ஆரோக்கியத்தோடும் நடமாட முடியும்

நீங்கள் இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைக்க விரும்பினால் கீழ்கண்ட இந்த எளிய முறையை பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்

கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

· கூறப்பட்ட அளவுடைய சியா விதைகளையும் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்

· அவையிரண்டும் சேர்ந்த கலவையை நன்கு கலக்கவும்

· இரண்டு மாதங்களுக்கு காலை உணவிற்கு பின்னர் இந்த கலவையை உட்கொள்ளுங்கள், இரண்டே மாதங்களில் கவர்ச்சியான தொப்பையில்லாத வயிற்று தோற்றத்தை பெறலாம்.

இந்த எளிய சமையலறை தயாரிப்பு உங்கள் தொப்பையை இரண்டே மாதங்களில் குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, அனால் நீங்கள் இதை தொடர்ந்து உட்கொள்ளவேண்டும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

இருப்பினும் இந்த இயற்கை முறையில் தயாரித்த பொருளை உட்கொள்ளவதால் மட்டும் தொப்பை குறையாது, மேலும் சில உணவு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் தான் மாற்றங்கள் உண்டாகும்.

இந்த இயற்கை முறையிலான தயாரிப்பை உட்க்கொள்வதோடு, ஆரோக்கியமான உணவுகள் உண்ணுதல், எண்ணெய் & அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்த்தல், கொழுப்பு அதிகமுள்ள மாமிசத்தை தவிர்த்தல் போன்றவற்றாலும் ; அதிகமாக உட்க்கார்ந்தே இருப்பதை தவிர்த்தல், தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல், வயிற்றுத்தசைகளை இறுகச் செய்வதற்கான பயிற்சிகள் செய்தல் போன்றவற்றாலும் தான் தொப்பையைக் குறைக்க முடியும்.

அதோடு மருத்துவரிடம் சென்று உங்கள் உடலில் வயிறுபகுதியில் அதிக கொழுப்பு படிவதற்கான காரணியையும் கண்டறிந்து கொள்வது முக்கியம்

 சியா விதை :

சியா விதை :

சியா விதைகளில் உள்ள ஒமேகா - 3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உங்கள் உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகப்படுத்தி உங்கள் வயிற்றில் படிந்துள்ள அதிக கொழுப்பை எரித்து தொப்பையை குறைக்கிறது.

யோகார்ட் :

யோகார்ட் :

கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் கொடுள்ள ப்ரோட்டீன் வயிற்றுக்கான தசைகளை இறுகச் செய்யும் தன்மை கொடுத்தாக உள்ளது. இதனால் கொழுப்பு படிந்து வயிற்று பகுதி பெருகாமல் வடிவான கவர்ச்சியான வயிற்று தோற்றம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Natural Remedy Guarantees Belly Fat Loss In Just 2 Months!

This Natural Remedy Guarantees Belly Fat Loss In Just 2 Months!
Story first published: Thursday, August 10, 2017, 13:24 [IST]