For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நச்சுக்களை வெளியேற்றும் டிடாக்ஸ் டயட்டை பின்பற்றுகிறீர்களா? இதைப் படியுங்க

|

உடல் இளைத்து, உடலிலுள்ள நச்சுக்களை அகற்ற டிடாக்ஸ் டயட் இருப்பது புது டிரெண்டாகவே இந்தியாவில் சுழலுகிறது.

Side effects of improper detox diet

டிடாக்ஸ் டயட் என்றால் என்ன?

டிடாக்ஸ் டயட் என்றால் வெறும் நீராகரம், பழச் சாறு அலல்து குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டும் தொடர்ந்து வாரக்கணக்கில் சாப்பிடுவது.

இவை வயிற்றை சுத்தப்படுத்தவும், கொழுப்புகளை கரைக்கவும் பின்பற்றப்படுகிறது. மேலும் தொடர்ச்சியான நச்சுக்களின் ஆக்கிரமப்பைஅற்றுகிறது. இந்த டயட்டினால் வேகமாய் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை குறைக்க முடியும்.

இந்த டயட்டை பற்றி கேள்விப்பட்டதும் எல்லாரும் இதனைப் பற்றி சரியான புரிதலின்றி, பின்பற்றுவது தவறு. உங்கள் எடை, உடலில் சில பரிசோதனைகள் ஆகியவற்றை கண்டறிந்த பின் நல்ல ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரையின்பேரில்தான் இதனை தொடர வேண்டும்.

இல்லையெனில் பக்க விளைவுகளையும், உடல் பாதிப்பினையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

தங்களிடம் வரும் 70 சதவீதம்பேர் இந்த டிடாக்ஸ் டயட் வேண்டும் என்று கேட்பதாக மும்பையில் உள்ள பாம்பே ஹாஸ்பிடலில் பணிபுரியும் ஊட்டச்சத்து நிபுணர் நமிதா ஜெயின் இந்த டயட்டை பற்றி கூறுகின்றார்.

தேவையென்றால் மட்டுமே இதனை செய்ய வேண்டும். எல்லாரும் நம் இஷ்டப்படி இதனை செய்யக் கூடாது என்று அறிவுரையும் கூறியிருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார்.

இந்த நச்சுக்களை வெளியேற்றும் டிடாக்ஸ் டயட்டில், உடல் பருமனாக இருப்பவரின் கொழுப்புகளை கரைக்க, வயிற்றை சுத்தப்படுத்த, என வெவ்வேறு வகையான திட்டங்கள் உள்ளன.

இதனை குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு உகந்தது இல்லை. இந்த டிடாக்ஸ் டயட்டை இளம் வயதினர் பின்பற்றக் கூடாது.

சிலர் ஒரு வாரம் டிடாக்ஸ் டயட்டில் இருந்துவிட்டு மறு வாரம் நன்றாக உணவினை பிடிபிடிப்பார்கள். இதனை உங்கள் உடல் உறுப்புக்கள் உடனேயே ஏற்காது.

உடல் உறுப்புகள் ஒரு சுழற்சியில் பழக்கப்பட்டிருக்கும்போது, உடனே வேறு வகையான உணவு முறையை நடைமுறைப்படுத்தும்போது, உறுப்புகளில் குழப்பங்கள் ஏற்படும். இதனால் பாதிப்புகளை உருவாக்கும்.

ஆகவே உங்கள் உடல் நிலைக்கு தகுந்தது போல் ஒரு ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை கேட்டபின்தான் இந்த டயட்டை பின்பற்ற வேண்டும் .

இதனை விட எளிய முறை, தினமும் நார்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டு, தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தாலே உடல் என்றென்றும் இளமையாகவும் ஸ்லிமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

English summary

Side effects of improper detox diet

Side effects of improper detox diet
Desktop Bottom Promotion