நுரையீரல் செயற்திறன் குறைபாடு ஏற்படாமல் தடுக்கும் நார்சத்து டயட்!

Posted By:
Subscribe to Boldsky

நார்ச்சத்து உணவுகள் சேர்த்துக் கொள்வதால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும், அதிகமான கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியும், இது செரிமானத்தையும், மலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க உதவும் என்று தான் இன்றளவும் நாம் எண்ணி வந்தோம்.

ஆனால், நார்ச்சத்து உணவுகள் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கும் கூட நல்ல பயனளிக்கிறது என சமீபத்திய ஆய்வல் வாஷிங்டன் ஆய்வாளர்கள் கண்டரிந்துக் கூறியுள்ளனர். நமது மண்ணில் விளையும் கம்பி, கேழ்வரகு, கோதுமை, தானிய உணவுகள் போன்றவை சிறந்த நார்ச்சத்து உள்ள உணவுகளாகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வு

ஆய்வு

அமெரிக்க தேசிய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மையம் நடத்திய ஓர் சர்வே ரிப்போர்ட்டில் கால்பங்கிற்கு அதிகமாக நார்ச்சத்து உட்கொள்ளும் நபர்களுக்கு 68.3% நுரையீரல் நன்கு செயல்படுவதாகவும். கால் பங்கிற்கு குறைவாக நார்ச்சத்தை சேர்த்துக் கொள்பவர்களுக்கு நுரையீரல் 50.1% அளவு தான் நன்கு செயல்படுகிறது எனவும், கால் பகுதிக்கு மிகவும் குறைவாக நார்ச்சத்து சேர்த்துக் கொள்பவர்களுக்கு தான் நிறைய நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நுரையீரல் திறன்

நுரையீரல் திறன்

ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களிடம் மூச்சுவிடும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நார்ச்சத்து அதிகமாக உட்கொள்ளும் நபர்கள் நன்கு சுவாசிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும். நார்ச்சத்து குறைவாக உட்கொள்ளும் நபர்கள் மத்தியில் சுவாசிக்கும் திறன் குறைவாக இருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் நோய்கள்

நுரையீரல் நோய்கள்

இன்றைய அளவில் அதிகமாக புகைப் பழக்கம் மற்றும் காற்று மாசுப்பட்டு இருப்பது போன்ற காரணங்களினால் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் பொதுமக்கள் மத்தியில் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

சாதகமான நன்மை

சாதகமான நன்மை

நுரையீரல் நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க நிறைய விழிப்புணர்வு பிரசாரங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். புகைப் பழக்கம் மட்டுமின்றி உலகில் அதிகரித்து வரும் சுற்றுசூழல் மாசுப்பாடும் கூட இதற்கான பெரும் காரணியாக இருக்கின்றது.

செலவு குறைந்த வழிமுறை

செலவு குறைந்த வழிமுறை

நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, செலவு குறைந்த ஒரே வழிமுறை டயட் தான். அதிலும் நார்ச்சத்து டயட் பெருமளவில் உதவுகிறது. நமது மண்ணில் விளையும் கம்பு, கேழ்வரகு, கோதுமை, தானியங்கள் போன்றவை சிறந்த நார்ச்சத்து கொண்டவை ஆகும். இவற்றை உணவில் சீரான முறையில் சேர்த்துக் கொண்டாலே நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும்.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

நார்ச்சத்து மூலம் நுரையீரலின் வலிமை, ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்ற இந்த ஆய்வறிக்கை அமெரிக்கர் தொராசிக் சொசைட்டி (American Thoracic Society) எனும் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fiber Rich Diet Can Keep Lung Disease At Bay

Fiber-rich diet can keep lung disease at bay,
Subscribe Newsletter