For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலுணர்ச்சியை அதிகரிக்க மேற்கொள்ளும் டயட்டினால் ஏற்படும் தாக்கங்கள்!!!

By Ashok CR
|

பாலுணர்வு உந்துதலுக்கான உணவுகளினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? சில குறிப்பிட்ட உணவுகளை உண்ணுவதால் உங்களால் அந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் இன்னும் சில உணவுகளை உண்ணுவதால் உங்களின் பாலுணர்வு ஆசை மெல்ல அழிந்தே விடும். ஏன் என்று தெரியுமா? அதற்கு பின்னால் சில காரணங்கள் அடங்கியுள்ளது. அவைகளை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

நல்லதொரு செக்ஸ் வாழ்க்கைக்கு உங்கள் உடலில் சில காரணிகள் முக்கியமானதாக உள்ளது. நல்ல இரத்த சுற்றோட்டம், ஹார்மோன் அளவுகள் மற்றும் சில தூண்டுதல்கள் அல்லது அறிகுறிகள் பாலுணர்வை தூண்டும். இவையனைத்துமே மிக முக்கியமானவை. இந்த காரணிகளை கட்டுப்படுத்துவதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால் தான் பாலுணர்வு உந்துதலுக்கான உணவுகளினால் ஏற்படும் தாக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

குறிப்பாக, நீங்கள் உங்கள் படுக்கை அனுபவங்களில் திருப்தி கொள்ளவில்லை என்றால், நீங்கள் என்ன உணவுகளை உண்ணுகிறீர்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அப்படியும் நிலைமை மாறவில்லை என்றால், உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லுப்ரிகேஷன்

லுப்ரிகேஷன்

உடலுறவு என வரும் போது லுப்ரிகேஷன் முக்கிய பங்கை வகிக்கிறது. அலிசிவிதை, செர்ரி, ஆப்பிள், நட்ஸ் மற்றும் பயறுகள் போன்ற உணவுகளில் சில பொருட்கள் உள்ளது. இது பெண்ணுறுப்பில் லூப்ரிகேஷனை உண்டாக்கும். படுக்கையில் சிறப்பாக செயல்பட பெண்கள் இந்த உணவுகளை உண்ணலாம்.

 ஹார்மோனின் பங்கு

ஹார்மோனின் பங்கு

ஹார்மோன்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி சில உணவுகள் சிறப்பாக செயல்பட வைக்கும். நல்ல கொழுப்புகள் உங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென்னை உற்பத்ஹ்டி செய்ய உதவும். இதனால் பாலுணர்வு உந்துதலுக்கும் இது உதவும். வால்நட், ஆலிவ், வெண்ணெய்ப்பழம் மற்றும் சால்மன் போன்ற உணவுகள் இதற்கு உதவிடும். இந்த ஒரு காரணத்திற்காக முழு தானியங்கள் உண்ணுவதும் நல்ல பயனை அளிக்கும். இதனால் உடல் எடை குறைவதோடு பாலுணர்வு உந்துதலுக்கும் உதவிடும்.

 இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

படுக்கையில் சிறப்பாக செயலாற்ற உதவியாக இருக்கும் மற்றொரு காரணி தான் இரத்த ஓட்டம். வெண்ணெய்ப்பழம், பூண்டு, இஞ்சி, மிளகு போன்ற சில உணவுகள் உங்கள் அந்தரங்க உறுப்புகளில் இரத்த ஓட்டம் நன்றாக நடக்க உதவிடும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள உணவுகளை உட்கொண்டால் படுக்கையில் உங்கள் வீரதீரம் மேம்படும்.

 பாலுணர்வு உந்துதலில் குறைபாடு

பாலுணர்வு உந்துதலில் குறைபாடு

உங்கள் பாலுணர்வுகளை அழிக்கும் சில உணவுகளும் உள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் தமனிகளை அடைக்கும் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சேச்சுரேடட் கொழுப்பும் கூட உங்கள் பாலுணர்வு உந்துதலை கொன்று விடும். மதுபானம் என்பது சத்தமில்லாமல் உங்கள் பாலுணர்வு உந்துதலை கொல்லும். அதனால் புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் குடிப்பதை குறைக்க வேண்டும். சொல்லப்போனால், அவைகளை முழுமையாக நிறுத்து விட்டால், உங்கள் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷம் என இரண்டுமே அதிகரிக்கும்.

 உடல் பருமன்

உடல் பருமன்

உடல் பருமனாக உள்ளவர்களுக்கு பாலுணர்வு உந்துதல் குறைவாக இருக்கும் இடர்பாடு ஏற்படும். அதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கினால், பாலுணர்வு உந்துதல் அதிகரிக்க கூடும். உடல் பருமனாக இருந்தால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வது நல்லது.

 சோடா

சோடா

சோடாவில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆண்களின் கருவுறும் தன்மைக்கு நல்லதல்ல. இதனால் மலட்டுத்தன்மை மற்றும் பாலுணர்வை குறைக்கும் இடர்பாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சோடா குடிப்பதால் பிற வழிகளிலும் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் அதனை குடிப்பதை குறைத்ஹ்டுக் கொள்ளுங்கள்.

 வேடிக்கையான தகவல்

வேடிக்கையான தகவல்

காரசாரமான உணவு உங்களின் பாலுணர்ச்சியை ஏன் அதிகரிக்கிறது என்பதற்கான காரணம் சமீபத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் கூட இது உண்மையாகவும் இருக்கலாம். நீங்கள் காரசாரமான உணவுகளை உண்ணும் போது உங்கள் உடல் சில மாற்றங்களை அனுபவிக்கும். உங்களுக்கு வியர்க்கும். மேலும் இதயத் துடிப்பு வேகமாக இருக்கும். உங்கள் கன்னங்கள் செஇவக்கலாம். இந்த அனைத்து அறிகுறிகளும் பாலுணர்ச்சி உந்துதலை தான் குறிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion