'தி ராக்' போல உடற்கட்டு வேண்டுமா? அப்போ அவரோட ஃபிட்னஸ் ரகசியத்த தெரிஞ்சுக்குங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவெயின் ஜான்சன் என்பதை விட, உலக மல்யுத்த வீரர் "தி ராக்" என்றால் தான் பெரும்பாலானோருக்கு இவரைப் பற்றி தெரியும். அந்த அளவு மல்யுத்தத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உலகெங்கிலும் உருவாக்கியவர் இவர்.

'கரீபிய கிரிக்கெட் மன்னன்' கிறிஸ் கெய்ல்ஸின் உடல் வலிமையின் ரகசியங்கள்!

மல்யுத்தம் இவரது பரம்பரை விளையாட்டு, இவரது தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தந்தை ராக்கி ஜான்சன் போன்றவர்களும் மல்யுத்த வீரர்கள் ஆவார்கள். இவரைப் போல உடலை ஏற்றி இறக்குவது மிகவும் சிரமம்.

டோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!!

ஒரு படத்திற்காக மதம் பிடித்த யானைப் போல இருப்பவர், மறுப்படத்திற்காக "ஐ" பட விக்ரம் போல மெலிந்துக் காணப்படுவார். உடற்பயிற்சி செய்வதென்பது இவருக்கு பிடித்தமான செயலாகும். பல பாடி பில்டர்ஸ் இவரை ரோல் மாடலாக வைத்திருக்கின்றனர்.

காதைக் கிட்ட கொண்டு வாங்க... இதுதாங்க சூர்யாவின் ஃபிட்னஸ் ரகசியம்!

இனி, இவரது அசாத்தியமான உடற்கட்டு மற்றும் உணவுக்கட்டுப்பாடு ரகசியங்கள் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மீன்

மீன்

தினமும் ஒரு கிலோ மீன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் டுவெயின் ஜான்சன். அதுவும் காட் (Cod) எனப்படும் மீன் வகை இவருக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். காலை வேளையிலேயே மீனை விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறார் இவர்.

வெள்ளை சாதம்

வெள்ளை சாதம்

மதிய வேளையில் வெள்ளை சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறைந்தது ஆறு கப் சாப்பாடாவது சாப்பிடுவாராம் டுவெயின் ஜான்சன்.

காய்கறிகள்

காய்கறிகள்

நண்பகல் மற்றும் மாலை இடைவேளைகளில் நான்கு கப் வேக வைத்தக் காய்கறிகள் சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார். இது இவரது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிப்பதாகக் கூறுகிறார்.

முட்டை

முட்டை

டுவெயின் ஜான்சன் அவரது உணவுப் பழக்கத்தில் தினமும் ஒரு டஜன் முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

காலை உணவு

காலை உணவு

காலை உடற்பயிற்சி செய்தவுடன், இரண்டு முட்டைகளும், கால் கிலோ மீனும் தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார் டுவெயின் ஜான்சன்.

இரவு உணவு

இரவு உணவு

இரவு தூங்கப் போவதற்கு முன் குறைந்தது பத்து முட்டைகளைக் கொண்டு சமைக்கப் பட்ட ஆம்லெட்டுகளை சாப்பிடுகிறார் டுவெயின் ஜான்சன்.

மாமிசம்

மாமிசம்

தனது அன்றாட உணவில் கால் கிலோ மாமிசம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று, அவரது டயட் பாதுகாப்பாளரிடம் கட்டளை விதித்துள்ளார் டுவெயின் ஜான்சன்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

தனது தசை வளர்ச்சிக்காகவும், திறனுக்காகவும், உருளைக்கிழங்கு சாப்பிடுவதைப் பின்பற்றி வருகிறார் டுவெயின் ஜான்சன்.

எனர்ஜி ட்ரிங்க்ஸ்

எனர்ஜி ட்ரிங்க்ஸ்

இதெல்லாம் போக தினசரி எனர்ஜி ட்ரிங்க்ஸும் குடிப்பாராம் டுவெயின் ஜான்சன். (அப்பா சாமி இப்பதா தெரியுது, பின்ன இம்புட்டு சாப்பிட்டா ஒரு மனுஷன் கண்டிப்பா கல்லு மாதரி தான இருப்பான்!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diet And Fitness Secret Of Dwayne Johnson The Rock

Dwayne "The Rock" Johnson — actor, professional wrestler and walking mass of muscle and sinew — recently shed light on his daily "diet."
Story first published: Friday, April 10, 2015, 10:35 [IST]
Subscribe Newsletter