டயட்டில் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய ஸ்நாக்ஸ்!!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் கடைகளில் விற்கப்படும் சுவையான பல உணவுப் பொருட்கள் என்று சொல்லலாம். அதனைப் பார்க்கும் போதே அப்படியே அள்ளி சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி இருந்தால் எப்படி அதனை வாங்கி சாப்பிடாமல் இருப்பது.

மேலும் சிலர் நான் அதனை எப்போதாவது தான் சாப்பிடுகிறேன் என்று வாரம் ஒருமுறையாவது அந்த ஸ்நாக்ஸ்களை வாங்கி சுவைத்துவிடுகிறார்கள். இதனால் தினமும் எடையைக் குறைக்க மேற்கொண்டு வரும் செயல்களும் வீணாகின்றன. ஏனென்றால் அந்த ஸ்நாக்ஸ்கள் உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆகவே உங்களுக்கு எடையை விரைவில் குறைக்க வேண்டுமானால் ஒருசில ஸ்நாக்ஸ்களை தவிர்க்க வேண்டும். இங்கு எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது சாப்பிடக்கூடாத சில ஸ்நாக்ஸ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொரித்த மசாலா சிப்ஸ்

பொரித்த மசாலா சிப்ஸ்

தற்போது பல சுவையான மசாலாக்கள் சேர்க்கப்பட்ட சிப்ஸ் விற்கப்படுகிறது. இத்தகைய சிப்ஸ்களை டயட்டில் இருக்கும் போது உட்கொண்டு வந்தால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையைக் குறைப்பதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே இவற்றை கொரிப்பதை தவிர்க்க வேண்டும்.

தயிர்

தயிர்

சிலருக்கு தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த செயலை டயட்டில் இருக்கும் போது பின்பற்றக்கூடாது. ஏனெனில் சர்க்கரை உடலுக்கு தீங்கு விளைப்பதோடு, அதனை தயிருடன் சேர்த்து உட்கொண்டால், எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்.

சோடா

சோடா

தற்போது கார்போனேட்டட் பானங்களான சோடாக்களை பருகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிலர் இதனை அன்றாடம் பருகுவார்கள். ஆனால் இவற்றை பருகுவதே மிகவும் ஆபத்து, அதிலும் எடையைக் குறைக்கும் போது பருகினால், உடலின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுமே தவிர, எடை குறையாது.

வாழைப்பழ சிப்ஸ்

வாழைப்பழ சிப்ஸ்

சிலர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை விட, வாழைப்பழ சிப்ஸ் சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. என்ன தான் இருந்தாலும், வாழைப்பழ சிப்ஸ் கூட எண்ணெயில் பொரிப்பதால், இதுவும் ஆரோக்கியமற்றது தான்.

உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்

உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்

நட்ஸ் சாப்பிடுவது ஆரோக்கியம் தான். ஆனால் உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் டயட்டில் இருக்கும் போது சாப்பிடுவது முற்றிலும் வேஸ்ட். ஆகவே இவற்றையும் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் உப்பு சேர்க்காத நட்ஸ் சாப்பிடலாம்.

ஸ்மூத்தி

ஸ்மூத்தி

ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது தான். அதுவும் ஸ்மூத்தியை குடிப்பது ஆரோக்கியம் தான். ஆனால் அதனை டயட்டில் இருக்கும் போது அளவுக்கு அதிகமாக குடிப்பது நல்லதல்ல. மேலும் இந்த வகையான பானங்கள் நம்மை அதற்கு அடிமைப்படுத்திவிடும். ஆகவே இவற்றைக் குடிப்பதை தவிர்ப்பதோடு, இரவில் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பிஸ்கட்

பிஸ்கட்

உங்களுக்கு பிஸ்கட் அதிகம் சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஆனால் பிஸ்கட்டுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதுவும் உடல் எடையைக் குறைக்க தடையை ஏற்படுத்தும்.

க்ரனோலா

க்ரனோலா

க்ரனோலா பாரில் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே எடையைக் குறைக்க கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது க்ரனோலா பார் உட்கொண்மால், அது எடையைக் குறைக்கவிடாமல் தடுக்கும். ஆகவே இதனை தவிர்க்க வேண்டும்.

புட்டிங்

புட்டிங்

புட்டிங், அதிலும் சாக்லெட்டினால் செய்யப்படும் புட்டிங் நம்மை அடிமைப்படுத்தக்கூடியது. ஒருமுறை சாக்லெட் புட்டிங்கை சாப்பிட ஆரம்பித்தால், பின் அது இல்லாமல் சாப்பிடவே முடியாது. மேலும் அந்த சுவைக்காகவே பலமுறை அதனை சாப்பிடத் தோன்றும். எனவே இவற்றைத் தவிர்ப்பதும் முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 Snacks To Avoid While Dieting

When you are trying to lose weight, it is important to ensure that you eat right. So, it means that you must know about certain snacks to avoid.
Story first published: Thursday, January 29, 2015, 16:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter