ஒல்லிக்குச்சிகளின் ஆரோக்கிய ரகசியம் இதுதாங்க..!

Posted By:
Subscribe to Boldsky

ரகசியம் என்றாலே அனைவருமே அதை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது தான். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எப்படி ஒல்லியாக இருப்பவர்கள் தங்களை பிட்டாகவும், சிக்கென்றும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு சொல்கிறது.

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

உண்மையில் ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் நீரை அதிகம் குடிப்பதோடு, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் நன்கு சாப்பிட்டாலும், நீரை அதிக அளவில் குடிப்பதால், அவர்களின் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி உடலானது ஆரோக்கியமாக உள்ளது.

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

இங்கு ஒல்லியாக இருப்பவர்களின் ஆரோக்கிய ரகசியமானது கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் குண்டாக இருந்து ஒல்லியாக நினைத்தால், இவர்களின் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

நீங்கள் ஒல்லியாக இருக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

சிட்ரஸ் பழங்களை டயட்டில் சேர்க்கவும்

சிட்ரஸ் பழங்களை டயட்டில் சேர்க்கவும்

உடலை ஆரோக்கியமாகவும், ஒல்லியாகவும் வைத்துக் கொள்ள டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்துவிடும்.

அளவான ஜங்க் உணவுகள்

அளவான ஜங்க் உணவுகள்

ஒல்லியாக இருப்பவர்கள் ஜங்க் உணவுகளை உட்கொள்வர்கள். அதே சமயம் அவர்களுக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவும் நன்கு தெரியும்.

கசப்பான உணவுகள் அவசியம்

கசப்பான உணவுகள் அவசியம்

ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து வருவார்கள். இதனால் தான் அவர்களின் உடலில் கொழுப்புக்கள் தங்குவதில்லை. மேலும், அவர்களுக்கு எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

அளவான உணவுகள்

அளவான உணவுகள்

ஒல்லியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க மற்றொரு ரகசியம் தான் அவர்கள் உண்ணும் உணவுகளும், எடுத்துக் கொள்ளும் அளவுகளும். ஒல்லியாக இருப்பவர்கள் எப்போதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடமாட்டார்கள். மேலும் சீரான இடைவெளியில் சாப்பிடுவார்கள்.

பிடித்ததில் ஆர்வம் காட்டுவார்கள்

பிடித்ததில் ஆர்வம் காட்டுவார்கள்

வாழ்க்கையில் நமக்கு பிடித்ததை செய்தாலே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அதிலும் ஒல்லியாக இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களின் உடலில் கொழுப்புக்கள் தங்குவதில்லை.

நன்கு தூங்க வேண்டும்

நன்கு தூங்க வேண்டும்

இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். அதிலும் ஒருவருக்கு குறைந்தது 7-8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். இதை ஒல்லியாக இருப்பவர்கள் சரியாக கடைப்பிடிப்பார்கள். எனவே தான் அவர்கள் ஆரோக்கியாகமாகவும், ஒல்லியாகவும் இருக்கிறார்கள்.

வித்தியாசமான பாலிசி

வித்தியாசமான பாலிசி

ஒல்லியாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் தான் அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை ஏதேனும் சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளிவிட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புக்கள் தங்குவதைத் தடுக்கிறது.

அன்றாட உடற்பயிற்சி

அன்றாட உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க தான் ஜிம் செல்ல வேண்டும் என்பதில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஜிம் செல்லலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு ஒல்லியாக இருப்பவர்கள் அன்றாடம் 1/2 முதல் 1 மணிநேரம் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பார்கள்.

உணவுகளை தவிர்க்கமாட்டார்கள்

உணவுகளை தவிர்க்கமாட்டார்கள்

ஒல்லியாக இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் உணவுகளை தவிர்க்க மாட்டார்கள். சீரான இடைவெளியில் சரியான நேரத்தில் உணவுகளை மறக்காமல் சாப்பிடுவார்கள்.

இனிப்புக்களை அளவாக எடுப்பார்கள்

இனிப்புக்களை அளவாக எடுப்பார்கள்

ஒல்லிக்குச்சி போன்று இருப்பவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் இருக்கும். எனவே இவர்கள் முன்பு எவ்வளவு சுவையான இனிப்புக்களை வைத்தாலும், அளவாக தான் சுவைப்பார்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy Secrets Of Thin People

We have let out some of the secrets of thin people. Take a look at their healthy way of life and how they lose tons of weight in no time.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter