'குட்டி குஷ்பு' ஹன்சிகாவின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க பலர் பலவிதங்களில் முயற்சிப்பார்கள். அந்த வகையில் நடிகர் நடிகைகளும் தங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதில் மிகவும் குண்டாக பப்பளிமாஸ் போன்று இருந்து, திடீரென்று சிக்கென்று மாறியவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் திரையுலகிற்கு புதிது அல்ல. சிறுவயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். பின் மடமடவென்று வளர்ந்து, தற்போது பிரபலமான நடிகையாகிவிட்டார்.

அப்படி அவர் முதலில் நடித்த தமிழ் திரைப்படம் தான் மாப்பிள்ளை, இந்த படத்தில் கொழுகொழுவென்று இருந்து, பின் சமீபத்திய திரைப்படங்களில் சிக்கென்று வந்தது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவர் மீடியா ஒன்றிற்கு தனது பிட்னஸ் ரகசியத்தை தெரிவித்தார்.

சரி, இப்போது ஹன்சிகா சிக்கென்று மாறுவதற்கு மேற்கொண்டவற்றைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹன்சிகாவின் பேட்டி

ஹன்சிகாவின் பேட்டி

ஹன்சிகா பேட்டியின் போது "எனக்கு உணவில் அவ்வளவாக நாட்டமில்லை. அதனால் என்னால் டயட்டை எளிமையாக பின்பற்ற முடிகிறது. முக்கியமாக எனக்கு எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளில் நாட்டமில்லை. மேலும் எனக்கு வீட்டில் செய்யப்பட்ட ராஜ்மா சாவல் என்றால் பிடிக்கும். இதன் காரணமாகத் தான் நான் உடல் எடையை குறைக்க முயலும் போது ஈஸியாக உடல் எடையை குறைக்க முடிந்தது". என்று கூறினார். அதுமட்டுமின்றி, அவர் தனது டயட்டுடன், குரு மிக்கி மேத்தா அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி வருகிறார்.

ஹன்சிகாவின் காலை உணவு

ஹன்சிகாவின் காலை உணவு

ஹன்சிகா காலை உணவு மிகவும் முக்கியமானது என்று நம்புவதுடன், காலையில் சாப்பிடும் உணவு நல்ல ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதனால் தினமும் காலையில் ஸ்கிம் செய்யப்பட்ட பால் மற்றும் ஆப்பிளை சாப்பிட்டு வருவாராம்.

உடற்பயிற்சி நேரம்

உடற்பயிற்சி நேரம்

ஹன்சிகா உடல் எடையை குறைக்க முயலும் போது, தினமும் கார்டியோ மற்றும் எடை உடற்பயிற்சி என இரண்டையுமே கலந்து மேற்கொள்வார். அதற்காக தினமும் குறைந்தது இரண்டு மணிநேரம் தவறாமல் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பாராம்.

உடற்பயிசிக்கு பின்

உடற்பயிசிக்கு பின்

ஹன்சிகா உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் மில்க் ஷேக் குடிப்பாராம்.

மதிய உணவு

மதிய உணவு

ஹன்சிகா உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொள்ள நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று நினைப்பாராம். அதற்காக மதிய வேளையில் ரொட்டி, தால், சாலட் மற்றும் தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்வாராம்.

குளிர்பானங்களுக்கு 'நோ'

குளிர்பானங்களுக்கு 'நோ'

எப்போதுமே ஹன்சிகா குளிர்பானங்களை குடிக்கவேமாட்டாராம். அதற்கு பதிலாக பிரஷ்ஷான பழச்சாறுகளைத் தான் குடிப்பாராம்.

இரவு உணவு

இரவு உணவு

இரவு நேரத்தில் தாமதமாக உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். முடிந்த வரையில் மாலையிலேயே அதாவது 7 மணிக்கே இரவு உணவை முடித்துவிடுவாராம். இது தான் இவர் ஆரோக்கியமாகவும், சிக்கென்றும் இருப்பதற்கான காரணமாக சொல்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Hansika's Fitness Secret!

    Hansika talks about the secret of her fitness. A diet is a selection of food that helps to loose weight' says actress Hansika Motwani.
    Story first published: Friday, September 19, 2014, 15:15 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more