பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?...இப்படிச் செய்யலாம்!

Posted By:
Subscribe to Boldsky

வெளிநாட்டவரை விட இந்தியர்கள் தான் தொப்பையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். அதிலும் இந்தியர்களில் எப்போதும் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தான், தொப்பையால் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இதனால் அவர்கள் தொப்பையைக் குறைப்பதற்கு நிறைய முயற்சிகளை எடுத்து வந்திருப்பார்கள்.

உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!

அத்தகையவர்களில் நீங்களும் ஒருவரா? தொப்பையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை பத்து நாட்கள் பின்பற்றி வந்தால், உங்கள் தொப்பை குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

முக்கியமாக எந்த ஒரு செயலை செய்யும் முன்னரும், அதன் மீது நம்பிக்கை வைத்து மேற்கொண்டால், நிச்சயம் வெற்றி அடைவது உண்மை. ஆகவே நம்பிக்கையுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தே நாட்களில் தொப்பையைக் குறைக்கும் வழிகளைப் பின்பற்றி, அழகாக மாறுங்கள்.

உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டே 1: தண்ணீர் + உடற்பயிற்சி

டே 1: தண்ணீர் + உடற்பயிற்சி

தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் போது, முதல் நாளில் அதிக அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடலில் எனர்ஜியானது அதிகரிப்பதுடன், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல், உடல் பிட்டாக இருக்கும். அதுமட்டுமின்றி, ட்ரெட்மில்லில் 30 நிமிடம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது மெதுவாக மூச்சை உள்வாங்கி வெளிவிட வேண்டும். இந்த செயலை பத்து நாட்களும் பின்பற்ற வேண்டும்.

டே 2: குறைவான கலோரியுள்ள உணவு + உடற்பயிற்சி

டே 2: குறைவான கலோரியுள்ள உணவு + உடற்பயிற்சி

இரண்டாம் நாளில், குறைவான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிப்பதை நிறுத்தக்கூடாது. இதனால் உடலின் எனர்ஜியானது தக்கவைக்கப்படும். மேலும் குறைவான கலோரி உள்ள உணவுகளானது வயிற்றை நிரப்பும். குறிப்பாக உடற்பயிற்சி அவசியம்.

டே 3: ஜூஸ் + உடற்பயிற்சி

டே 3: ஜூஸ் + உடற்பயிற்சி

மூன்றாம் நாளில், வெறும் பழச்சாறுகளையும், ஸ்மூத்திகளையும் குடிக்க வேண்டும். இது வயிற்றை நிரப்பும். இந்நாளில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.

டே 4: கோதுமை உணவுகள் + உடற்பயிற்சி

டே 4: கோதுமை உணவுகள் + உடற்பயிற்சி

நான்காம் நாளில், முழு கோதுமை உணவுகளை எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய போதுமான ஆற்றல் கிடைக்கும். இந்நாளில் 1 மணிநேரம் ட்ரெட்மில்லில் நடக்க வேண்டும். மேலும் தண்ணீரையும் அதிகம் குடிக்க வேண்டும்.

டே 5: நார்ச்சத்துள்ள உணவுகள் + உடற்பயிற்சி

டே 5: நார்ச்சத்துள்ள உணவுகள் + உடற்பயிற்சி

ஐந்தாம் நாளில் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். இந்நாளிலும் உடற்பயிற்சியுடன், நீரையும் அதிகம் பருக வேண்டும்.

டே 6: நட்ஸ் + உடற்பயிற்சி

டே 6: நட்ஸ் + உடற்பயிற்சி

ஆறாம் நாளில், நட்ஸ் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றலுடன், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். மேலும் பசியெடுக்கும் போது இவற்றை மட்டும் உட்கொண்டு வந்தால் வயிறு நிறையும். முக்கியமாக உடற்பயிற்சியும், நீரும் அவசியம்.

டே 7: பச்சை இலைக்காய்கறிகள் + உடற்பயிற்சி

டே 7: பச்சை இலைக்காய்கறிகள் + உடற்பயிற்சி

ஏழாம் நாளில், பச்சை இலைக்காய்கறிகளான ப்ராக்கோலி மற்றும் பசலைக்கீரையைக் கொண்டு சாலட் செய்து சாப்பிட வேண்டும். இவை நாள் முழுவதும் வேண்டிய எனர்ஜியைத் தரும். மேலும் இவற்றில் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

டே 8: பழங்கள் + உடற்பயிற்சி

டே 8: பழங்கள் + உடற்பயிற்சி

எட்டாம் நாளில், நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்களை எடுத்து வர வேண்டும். மறக்காமல் உடற்பயிற்சி தேவை.

டே 9: பால் பொருட்கள் + உடற்பயிற்சி

டே 9: பால் பொருட்கள் + உடற்பயிற்சி

ஒன்பதாவது நாள், பால் பொருட்களான தயிர், ஸ்கிம்டு மில்க் போன்றவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் இந்நாளில் குறைந்தது 1 மணிநேரம் உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

டே 10: முட்டை + உடற்பயிற்சி

டே 10: முட்டை + உடற்பயிற்சி

பத்தாம் நாள், புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டையை சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடலின் ஆற்றலானது அதிகரிக்கும்.

குறிப்பு

குறிப்பு

மேலே குறிப்பிட்டவாறு செய்து வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதை நன்கு காணலாம். மேலும் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சியும், தண்ணீர் குடிப்பதும் அவசியம். அதுமட்டுமல்லாமல் எந்த நாள் என்ன சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோமோ, அது தான் அன்றைய உணவு. முடியாதவர்கள், வேண்டுமானால் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Burn Belly Fat In 10 Days!

Burn your belly fat in just 10 days. All you need to do is follow these simple weight loss tips to get rid of that ugly paunch.
Subscribe Newsletter