For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...

By Super
|

நாம் ஒவ்வொருவரும் நமது உடல் நலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக சினிமா ஹீரோக்கள் போன்று சிக்ஸ் பேக் அடைவதற்கு இன்றைய ஆண்கள் பெரிதும் ஆசைப்படுகின்றனர். அதற்காக அவர்கள் தங்களை மிகவும் வருத்தி, சரியாக சாப்பிடாமலேயே, அதனை அடைய முற்படுகின்றனர். அவ்வாறு இல்லாமல் சிறந்த எளிய வகையில் தொப்பையை குறைத்து பிட்டாக மாறுவதற்கு பல வழிகள் இருக்கின்றன.

இது சிக்ஸ் பேக் காலமாக மாறிவிட்டாலும், நம்மை நேர்த்தியாக காண்பிப்பது ஆரோக்கியமான பிளாட் ஆப்ஸ் (Flat Abs) தான். நமது உடலை ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் வைப்பதற்கும், தட்டையான வயிற்றை பெறுவதற்கும் அதிக முயற்சி தேவைப்படும். மேலும் உடல் மொழியை நேர்மாறான முறையில் மாற்றும் தட்டையான வயிற்றை அடைவதற்கு டயட், வாழ்க்கை முறை, உடல்நலப் பொருத்தம் போன்றவற்றில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆரோக்கியமான உடல் நலத் தகுதியான ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புவார்கள். தொப்பை வயிறு பெண்கள் மத்தியில் உங்கள் மதிப்பைக் குறைக்கச் செய்யும். உங்கள் பிளாட் ஆப்ஸ் உங்களின் அதிக உழைப்புத் தன்மையையும் அழகாக காண்பிக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தும். நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், இது உங்களின் உடல்நலத்தின் உறுதியையும் உங்கள் மனைவியுடன் செல்லும் போது அழகாகக் காண்பிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும். பல கணக்கெடுப்புகளின் படி, பெண்கள் தொப்பை வயிறு உள்ளவர்களை விட, ஒல்லியான உடம்புள்ள ஆண்களையே பெரிதும் விரும்புகின்றனர் என்று தெரிவிக்கின்றது.

நீங்கள் இந்த பிளாட் ஆப்சை பெறுவதற்காக தசைகளை வருத்தியோ அல்லது தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கோ செல்ல வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் சில எளிதான ஊட்டச்சத்து நிரம்பிய உணவை சேர்த்து வந்தால், உங்களின் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெய் கொழுப்பை குறைத்து, ஊட்டச்சத்து நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும். நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ள உணவை தண்ணீருடன் சேர்ந்து தினமும் உட்கொள்ள வேண்டும். தொப்பையை குறைக்க உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகளும், நிறைய பழங்களும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வயிற்றில் சேரும் செரிமானமாகாத கொழுப்பை தடுக்க எளிதாக செரிமானமாகும் உணவு வகையை சாப்பிட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

புரோட்டீன் மற்றும் தேவையான அமினோ அமிலங்களின் மூலமாக இருப்பது முட்டையாகும். முட்டையின் வெள்ளை கருவை உங்கள் காலை உணவில் தினமும் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் புரோட்டீன் அதிகமாவதோடு, நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

நாள் முழுவதும் சர்க்கரை அல்லாத க்ரீன் டீயை பருகவேண்டும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் அது உங்கள் மெட்டபாளிசத்தை அதிகரித்து கொழுப்பை குறைக்கச் செய்யும். நீங்கள் எவ்வளவு கொழுப்பை குறைகின்றீர்களோ அவ்வளவு குறைவான உடற்பயிற்சியை செய்தால் போதுமானதாகும்.

பாதாம்

பாதாம்

தசை வளர்ப்பிற்கும் பராமரிப்பிற்கும் தேவையான அதிகமான புரோட்டீன், நார்ச்சத்துடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் பாதாமில் உள்ளது. மேலும் இது பசியை சிறந்த முறையில் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

கெட்டித்தயிர்

கெட்டித்தயிர்

கெட்டித்தயிர் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான உணவு வகைகளில் சிறந்தது ஆகும். கெட்டித்தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா உங்கள் செரிப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து வயிற்றில் தங்கும் கொழுப்பையும் குறைக்கும்.

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி

தொப்பையை குறைக்க நீங்கள் தசை வலுப்படுத்தும் புரோட்டீன் நிறைந்த கார்போஹைட்ரேட்களையும் வைட்டமின்களையும் கொண்ட கைக்குத்தல் அரிசியை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி கொழுப்புச்சத்தை குறைக்க உதவும்.

கீரைகள்

கீரைகள்

தொப்பையை குறைக்க தினமும் உங்கள் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பசலைக்கீரை, கேல் மற்றும் லெட்யூஸ் வகைகளில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் நார்ச்சத்து உங்கள் பசியை கட்டுப்படுத்தும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக நார்ச்சத்தும் குறைவான கலோரிக்களும் உள்ளது. உங்கள் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டால் அது நாள் முழுவதும் உங்கள் பசியை கட்டுப்படுத்தி அதிகம் சாப்பிடாதவாறு தடுக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

உடலை வலிமையாக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் தினமும் ஒரு க்ளாஸ் வெந்நீருடன் எலுமிச்சை சாரையும் தேனையும் கலந்து பருக வேண்டும்.

தக்காளி

தக்காளி

உடம்பு எரிச்சல்களை குறைக்கவும், நீர்ச்சத்தை தக்க வைக்கவும் தக்காளி பெரிதும் உதவுகின்றது. லெப்டின் எனப்படும் புரோட்டீன் நிரம்பியுள்ளதால் உங்கள் மெட்டபாலிக் அளவை சரிசெய்து பசியையும் கட்டுப்படுத்த உதவும்.

பூண்டு

பூண்டு

இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வயிற்றை சுத்தமாகவும் கொழுப்புச்சத்து சேர்ந்து விடாமல் தடுக்கவும், செரிமான மண்டலம் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diet Tips To Achieve Flat Abs

Having raw vegetables and lots of fruits in your regular diet is very essential in cutting the belly fat. Food that improve digestion is important as indigestion results in fat build up around your tummy. Here are some diet tips that are effective in helping you get flat abs.
Desktop Bottom Promotion